Sunday, August 25, 2013

விநாயகர் வழிபாட்டுத்தத்துவம்!

விநாயகர் வழிபாட்டைச் செய்தபிறகே மற்ற கடவுள்களுக்குப் பூசைகள் செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
                                     (பி.வி. சுப்பிரமணியன், திருச்சி)

இதைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. விநயம் என்றால் பணிவு, அடக்கம், விவேகம், நிதானம் என்று பொருள். இறை வழிபாடு செய்யும் முன் நமக்கு பணிவும், அடக்கமும், நிதானமும் தேவை.
யார் யாரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டுமோ அப்படி நடப்பது விநயம். அப்படி நடக்கத் தெரிந்தவர், இதற்கு உதாரண புருஷர் விநாயகர்.
இதனால்தான் விநாயகர் வழிபாடு வித்தைகளையும், செல்வ சுகத்தையும், முக்தியையும் தரும் என்றார்கள். பணிவு, அடக்கம், நிதானம் ஆகியவை நமக்கு எப்போதும் தேவை. யார் யாரிடம் எப்படி நடந்து கொள்வது என்பதையும் அறியவேண்டும்.
இதனால் நமக்கு தகுதி வந்துவிடும். இந்த தகுதியை யோக்கியதை என்றனர். யோக்கியமான ஒருவனை பிறர் மதிப்பார்கள். பிறர் மதிக்க ஆரம்பித்தால் அவனுக்கு கவுரவம் தருவார்கள், அவன் பொருள் மட்டுமல்ல, சொல்லும் விலை போகும். இதைத்தான் வித்தையும் பலிக்கும் என்றார்கள்.
இறைவனை வணங்கும் முன்பு முதலில் இதைக் கற்றுக்கொண்டால் எல்லாம் சித்திக்கும் என்றார்கள். இதை நாம் கற்றுக்கொள்ளாமல் இறைவனை வணங்கினால் பலன் கிடைக்காது என்பதே விநாயகர் வழிபாட்டின் உண்மையான பொருள்.
என்னைப் பொறுத்தவரை விநாயகர் என்றால் பணிவுடையவர், பணிவு உடையவர்களுக்கு எல்லாம் தலைவர் (மிகவும் பணிவு மிக்கவர்) என்றே பொருள் கொள்வேன். தாய் தந்தையே உலகம் என்ற பணிவு அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.
மஞ்சளைப் பிடித்து வைத்தாலும், சாணியைப் பிடித்து வைத்தாலும், மண்ணைப் பிடித்து வைத்தாலும் அதையும் தன் உருவாக - கோயிலாக ஏற்பவர். குளக்கரை, மரத்தடி என எந்த எளிய இடத்திலும் எழுந்தருளி வரந்தருபவர் இவர். உயர்ந்தப் பிரணவமாக இருந்தும் எளியவர்களுக்காக எளிமையாக இறங்கிவந்துவிடுகிறவர் கடவுள் என்பதற்கு உதாரணம் விநாயகர்.
இவரைப் போல, நீ எந்த இடத்திலிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் அதை உனக்கு உரியதாக எடுத்துக்கொண்டு, எப்போதும் பணிவாக இரு... உலகைப் படைத்த பிரணவமே பணிவுடன் இருக்கும்போது நாம் அகந்தை கொள்ளக்கூடாது என அடங்கியிரு என உணர்த்தவே முதலில் விநாயகர் வழிபாட்டைச் செய்யச் சொல்வதாக நினைக்கிறேன்.

அடக்கம் (விநயம்) அமரருள் உய்க்கும் என்பது இதன் பொருட்டே. அவிநயம் அதாவது அடங்காமை துன்பத்தைக் கொடுக்கும். அடக்கத்தோடு நடந்தால் விநாயகரைப் போல முதல் தெய்வமாக வணங்கப்படுவாய், இல்லாவிட்டால் துன்பப்படுவாய் எனவும் பொருள் கொள்ளலாம்.

Saturday, August 24, 2013

பாபாவும் அனுமனும்



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் இருந்து

பாபா தன் பக்தர்களிடம் தன்னைப் பற்றி சொல்லும்போது, நான் அடிமைகளுள் அடிமை. உங்களுக்குக் கடன் பட்டவன். உங்கள் தரிசனத்திலேயே திருப்தியடைகிறேன். தங்களது திருவடிகளைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன். நான் தங்கள் மலத்திலுள்ள ஒரு புழு. அங்கனமாகவே என்னை நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக்க் கருதுகிறேன்!என்று சொன்னார்.
பாபா வெளிப்படையாக உணர்ச்சி நுகர்வுக்கூறு மற்றும் பொருட்களால் மகிழ்பவர் போல தோன்றினாலும், அவருக்கு அவைகளில் எள்ளளவும் தனிச்சுவைத் திறமோ, அவைகளை மகிழ்ந்து அனுபவிக்கும் பிரக்ஞையோ இருந்ததில்லை.
அவர் உண்டார் எனினும், சுவை அறியவில்லை.
பார்த்தார் எனினும் பார்த்தவைகளில் அவர் எவ்வித விருப்பையும் உணர்ந்திருக்கவில்லை. 
காம உணர்வுகளைப் பற்றி கருதுங்கால் அவர் அனுமனைப் போன்ற பூரண பிரம்மசாரியுமாவார்.
எதன் பாலும் பற்றற்றவராக இருந்தார்.
அவரே தூய உணர்வுகளின் திரளாகவும், ஆசை, கோபம், மற்ற உணர்ச்சிகள் அடங்கி அமைதியுறும் இடமாகவும் திகழ்ந்தார்.
சுருக்கமாக அவர் அவாவற்றவர்.
கட்டற்றவர்.
முழு நிறைவானவர்.


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயம் 10


Friday, August 23, 2013

கடுமையான பரீட்சை



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் இருந்து

நம்முடைய மனதில் என்ன 
நிர்த்தாரணம் செய்துகொள்கிறோமோ 
அதை பாபா நிறைவேற்றி விடுவார்.
சில சமயம் பாபா மனிதனை எல்லை
வரை இழுத்துவிடுகிறார். 
அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும்
கடுமையான பரீட்சை வைத்துவிடுகிறார். 
அதன் பிறகே அவனுக்கு உபதேசம் அளிக்கிறார்.”


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயம் 18 – 129-130

பாபா பயன்படுத்திய கிணறு

சீரடியில் பாபா பயன்படுத்திய கிணறு

சீரடி லெண்டித் தோட்டத்தில் பாபா பயன்படுத்திய கிணறு இன்றும் உள்ளது. சீரடியில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, இந்தக்கிணற்றை ஆழப்படுத்த சமீபத்தில் சீரடி சன்ஸ்தான் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக கிணறு திறக்கப்பட்டு அதை தூர் வாரிய போது, அதில் ஏராளமான நாணயங்கள், நகைகள், மற்றும் பிறப் பொருட்கள் ஆகியவை கண்டு எடுக்கப்பட்டன. கிணற்றில் கிடந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் போன்ற நாணயங்களின் மொத்த மதிப்பு சுமார் ஒண்ரரை லட்சம் என நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. பாபா பயன்படுத்தியக் கிணற்றின் மீதும் பக்தர்கள் செலுத்தும் பக்திக்கு சாட்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது.
                                                        வி.நந்தினி,
                                                   சைதாப்பேட்டை,
                                                         சென்னை



Thursday, August 22, 2013

உன் உடம்பை கவனி



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் இருந்து

உடம்பைப் புறக்கணிக்கவோ, விரும்பிச் செல்லமாகப் பராமரிக்கவோ கூடாது.  ஆனால் முறையாகப் பராமரிக்க வேண்டும்.
குதிரையில் சவாரி செய்யும் ஒரு வழிப்பயணி, தான் போகுமிடத்தை அடைந்து வீடு திரும்பும் வரைக்கும் தனது குதிரையை எவ்வாறு பராமரிக்கிறானோ, அதையொப்ப இவ்வுடம்பைப் பராமரிக்கவேண்டும்.
இவ்வுடம்பு இவ்விதமாக எப்போதும் வாழ்க்கையின் உச்ச உயர் நோக்கமான கடவுள் காட்சி அல்லது ஆத்மானுபூதியை அடையவே உபயோகப்படுத்த வேண்டும்


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயம் 6

Wednesday, August 21, 2013

எங்கும் எதிலும் நானே!


ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் இருந்து

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத்தெரியும்.  நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின் கண், அசையும், அசையா சர்வ ஜீவராசிகளையும் அரவணைக்கிறேன்.  இப்பிரபஞ்சமெனும் தோற்றத்தை நானே கட்டுப்படுத்துபவன், ஆட்டுவிப்பவன், எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே.  முக்குணங்களின் கூட்டுறவும் நானே.

நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவனுமாம்.  என்பால் கவனத்தைத் திருப்புபவனை எதுவும் துன்பம் விளைவிக்காது.  ஆனால் மாயை, என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும்.  எல்லாப் பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத் தென்படுபவை, அசையக்கூடிய, அசைய முடியாத உலகம் எல்லாம் என்னுடைய உடம்பு அல்லது உருவம் ஆகும்.


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயம் 3

Thursday, August 1, 2013

சாயி - ஷிர்டி பாபாவின் புனித சரிதம்-8





சாயி  - ஷிர்டி பாபாவின் புனித சரிதம் - குங்குமம் இதழில் தொடராக வந்து கொண்டுள்ளது. அற்புத நடை. சரிதத்தின் மொழி பெயர்ப்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் ஒன்று.

இதன்   பகுதி 8  னை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...