ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் இருந்து
”நீங்கள்
எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இதை
நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத்தெரியும். நானே
அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின் கண்,
அசையும், அசையா சர்வ ஜீவராசிகளையும் அரவணைக்கிறேன். இப்பிரபஞ்சமெனும் தோற்றத்தை நானே
கட்டுப்படுத்துபவன், ஆட்டுவிப்பவன், எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே. முக்குணங்களின் கூட்டுறவும் நானே.
நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன்,
காப்பவன், அழிப்பவனுமாம். என்பால்
கவனத்தைத் திருப்புபவனை எதுவும் துன்பம் விளைவிக்காது. ஆனால் மாயை, என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும். எல்லாப் பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத்
தென்படுபவை, அசையக்கூடிய, அசைய முடியாத உலகம் எல்லாம் என்னுடைய உடம்பு அல்லது
உருவம் ஆகும். ”
ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயம் 3
No comments:
Post a Comment