Thursday, May 14, 2015

உதியின் மகிமை

என் பெயர் மோகனா ரவிக்குமார். வேளச்சேரியில் வசிக்கிறேன். எனக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். என் கணவர் ஒரு நாள் மைலாப்பூர் பாபா கோயிலில் இருந்து சாயி தரிசனம் புத்தகம் மற்றும் பல பாபா புத்தகங்களையும், மாத இதழ்களையும் வாங்கி வந்தார். மற்ற இதழ்களைவிட சாயி தரிசனம் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது.
அந்தப் புத்தகம் முழுவதும் படித்தேன். படித்தவுடனே அந்தக் கோயிலுக்குப் போகவேண்டும் என்று கேட்டேன். அவரும், நானும் ஒரு வியாழக்கிழமை, சாயி தரிசனம் புத்தகத்தில் போட்ட விலாசத்தைப் பார்த்து விசாரித்து, அந்த கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். அங்கு பாபாவை தரிசித்துவிட்டு சாயி வரதராஜன் கைகளில் உதியை வாங்கிக் கொண்டு வந்தோம்.
என் மகன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். அரையாண்டு தேர்வு எழுதும் நேரத்தில் திடீரென்று பயங்கரமான காய்ச்சல் வந்துவிட்டது. வைரஸ் காய்ச்சல்கள் பரவிக்கொண்டிருந்த நேரம் அது. நான் மிகவும் பயந்துவிட்டேன். டாக்டரிடம் சென்றோம். ஊசியைப் போட்டு விட்டு, ‘காய்ச்சல் குறையவில்லை என்றால், உடனே ரத்தப் பரிசோதனை பண்ண வேண்டும் என்று சொன்னார்.
சாயி தரிசனத்தில் படித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. பாபாவிடம் சென்று நம்பிக்கையுடன் வரத ராஜன் கொடுத்த உதியை எடுத்து என் மகனின் நெற்றியில், கையில் மார்பில் பூசிவிட்டு தண்ணீரில் கலந்து குடிக்கத் தந்தேன். இரண்டு மணி நேரம் கழித்து உடல் சூடு தணிந்தது.
காய்ச்சல் இல்லை. சுறு சுறுப்பாக எழுந்து படிக்கத் தொடங்கினான். இரண்டு மாதம் கழித்து என் மகன் முகத்தில் கன்னத்தில் பெரிய கட்டி ஒன்று வந்தது. ஒரு வாரம் அவன் பள்ளிக்குப் போக வில்லை. வீட்டு வைத்தியம் செய்து பார்த்தேன். கட்டி கரையவில்லை. டாக்டரிடம் சென்றேன், ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்தார். அப்படியும் கட்டி கரைந்தபாடில்லை.
தோல் நோய் மருத்துவரிடம் சென்றோம். அவர் வேறு ஒரு டாக்டரிடம் அனுப்பினார். அந்த டாக்டர், ‘மயக்க மருந்து கொடுத்து கட்டியை அறுவை சிகிச்சை செய்து கட்டியை வெட்டி அகற்ற வேண்டும்ள’, என்று கூறினார்.
பெருங்களத்தூர் பாபா கோயிலில் தரப்பட்ட உதியை, பாபாவின் முன் வைத்து, ‘பாபா!, நீங்களே மருத்துவராக இருந்து கட்டியைக் கரைய வைக்க வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டு, உதியை என் மகனின் கன்னத்தில் தடவினேன். தண்ணீரில் கலந்து குடிக்கக் கொடுத்தேன். மறுநாள் முதல் கட்டி சிறிது சிறிதாகக் கரையத் தொடங்கியது.
இரண்டு மூன்று நாட்களில் கட்டி இல்லாமல் போய்விட்டது. பாபாவுக்கு நன்றி சொன்னேன். என் மகள் பவித்ராவுக்கு திடீரென்று ஒரு நாள் கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது. டாக்டரிடம் சென்று ஊசி போட்டு, மாத்திரை கொடுத்த பின்னரும்  காய்ச்சல் நிற்கவேயில்லை. விட்டு விட்டு வந்தது. ஒரு வாரம் காய்ச்சல் இருந்தது.
மிகவும் சோர்வாக இருந்தாள். டாக்டர் இரத்தப்பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்தார். அப்போதும் உடனே பெருங்களத்தூர் பாபா கோயில் உதியை என் மகளின் உடலில் பூசினேன். நெற்றியில் பூசி, தண்ணீரில் கலந்து குடிக்கக் கொடுத்தேன்.
பாபாவிடம், இரத்தப் பரிசோதனை செய்யப்போகக் கூடாது, காய்ச்சல் வரக்கூடாது. அப்படி குணமானால் சாயி தரிசனம் புத்தகத்தில் சாட்சியாக எழுதுகிறேன் என மனம் உருக வேண்டினேன்.
டாக்டரிடம் சென்றோம். காய்ச்சல் இப்போது இல்லை, இரத்தப் பரிசோதனையும் தேவை யில்லை என்று சொல்லிவிட்டார்.  அவள் முகம் தெளிவடைந்தது. மறுநாள் பள்ளிக்குக் கிளம்பினாள்.

சோதனை வரும்போது முதலில் மற்ற பரிகாரம் பற்றியே நினைவு வருகிறது. முடிவில்தான் கடவுள் நினைவு வந்து வேண்டிக்கொள்கிறோம். அந்த நிலையிலும் நம்மை மேலும் சோதிக்காமல் நாம் கேட்டவுடனே, வேண்டுதலை நிறைவேற்றி மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார் பாபா.

மந்திரத்தியானம்

தியானத்தின் போது சிலர் மணிகளை உருட்டி மந்திரத்தியானம் செய்கிறார்களே!  எப்படி உருட்டுவது? அது எப்படி பலன் தரும்?
                                   ( ஆர். நவமணி, சென்னை - 45)
நாம மந்திரத்தைச் சொல்லி முடித்த பிறகு ஒரு மணியாக உருட்ட வேண்டும். காயத்திரி மந்திரம் சொல்லும்போது முழுமையாக அந்த மந்திரத்தைச்சொன்ன பிறகே ஒரு மணியை உருட்டலாம்.
இரண்டாவது முறை மந்திரத்தை முழுமையாகச்சொன்னபிறகே அடுத்த மணியை உருட்டலாம்.
ஓம் சாயி என்ற வார்த்தையை மந்திரமாகச்சொல்லி ஒரு மணியை உருட்டலாம்.
ஓம் சாயி நமோ நம: ஸ்ரீ  சாயி நமோ நம
ஜெய ஜெய சாயி நமோ நம:  சத்குரு சாயி நமோ நம
என்பது ஒரு முழுமையான மந்திரம். இந்த நான்கு வரிகளைச் சொல்லித்தான் ஒரு மணியை உருட்ட வேண்டும். இதுவே மந்திர ஜெபம்.

இதைச் சொல்லும் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன் கிடைக்கும். நாமத்தைச் சொல்லி மனத்தை உள்முகமாகச்சொல்லி, மணியை வெளிப்பக்கமாக உருட்டுவது நல்லது என்று சொல்வார்கள் பெரியவர்கள்.

எங்கு சென்றாலும் உன்னுடன் இருப்பேன்!



    காசிநாத் உபாசினி என்பவர் வைதீக பிராமணர்.  பாபாவை முஸ்லீமாக எண்ணிய இவர், அவரை அணுகவே கூடாது என வைராக்கியமாக இருந்தார். அவருக்கு நோயிருந்த்து.  யாராலும் குணப்படுத்த முடியாத இந்த நோய் , பாபாவால் குணமானது. இதனால் மனம் மாறிய காசிநாத், பாபா மிகப்பெரிய மகான் என நினைத்து அவருடன் தங்கியிருந்தார்.
     உடல் ஆரோக்கியம் பெற்றதும் வீட்டு நினைவு வந்துவிட்ட்து.  அவருக்கு மூன்று மனைவியர், லவுகீக வாழ்க்கை வாழலாம் என நினைத்து, வீட்டுக்குப் போக அனுமதிக்குமாறு பாபாவிடம் கேட்டுக்கொண்டே இருந்தார் உபாசினி.
     அவரைப் போகவேண்டாம் எனத்தடுத்தார் பாபா. ஆனால் உபாசினி செல்ல வேண்டும் என தொடர்ந்து கேட்டுக்கொண்டதால், போனால் எட்டு நாட்களுக்குள் திரும்பிவிடவேண்டும் எனக்கூறி விடை கொடுத்து அனுப்பினார்.  சந்தோஷமாகக் கிளம்பிய உபாசினி, போகும் வழியில் கோதாவரி நதியில் குளித்துவிட்டுப் போகத் தயாரானார். வழி முழுக்கத் தடைகள் ஏற்பட்டு, கிளம்பியது முதல் ஏழு நாட்கள் வரையில் பதினோறு கிலோ மீட்டர் வரையே செல்லமுடிந்த்தது.
     கோபர்கான் என்ற இடத்திலுள்ள கோயில் பிரம்மச்சாரி ஒருவர்,  நீங்கள்  சாயிநாத்திடம் திரும்பிச்செல்லுங்கள் என்று உபாசினியிடம் கூறினார்.  ஆனால் உபாசினி ஒப்புக்கொள்ளவில்லை.  இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு குதிரை வண்டி வந்த்து. குதிரை வண்டியில் வந்தவர்களிடம், ‘எங்கே போகிறீர்கள்?எனக்கேட்டார் பிரம்மச்சாரி.
     அவர்கள், ‘சீரடிக்கு’, என்றதும், ‘இவரை அழைத்துச்செல்லுங்கள்என்றார் பிரம்மச்சாரி.
     நான் அங்கிருந்தே வருகிறேன்.  மீண்டும் போக முடியாது!என மறுத்தார் உபாசினி.
     சீரடிக்குப் போயுருக்கிறீர்களா?  அப்படியானால், நீங்கள் கண்டிப்பாக எங்களோடு வந்து வழி காட்டவேண்டும்என வண்டியில் வந்தவர்கள் உபாசினியை கூப்பிட்டார்கள்.
     அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்க்காக, ‘எனக்குப்பசிக்கிறது.  வண்டிக்கும் பணம் இல்லைஎன்றார் உபாசினி.
                சாப்பிட்த்தருகிறோம், வண்டிக்குப் பணமும் தருகிறோம், நீங்கள் வந்தே ஆகவேண்டும்’, என அவர்கள் உபாசினியிடம் வலியுறுத்தி, அவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.
     சீரடிக்கு வந்த உபாசினியைப் பார்த்த பாபா, ‘என்ன, அதற்க்குள் திரும்பி விட்டாயா?  எட்டு நாட்களுக்குள்  திரும்ப முடியாது என்றாயே, இப்போது நீ போய் எத்தனை நாட்கள் ஆகின்றன?’ என்று கேட்டார்.
     எட்டு நாட்கள் ஆகின்றனஎன்ற உபாசினி, ‘நான் வீட்டுக்குப் போகும் ஆவலோடுதான் போனேன், ஆனால் என்னால் போக முடியவில்லையே! அது ஏன்?  எல்லாம் உங்களது வேலையாகத்தான் இருக்கும் பாபாஎன்றார்.
     ஆமாம், இந்த எட்டு நாட்களும் நான் உன் கூடவேதான் இருந்தேன்...என்று பாபா பதில் கூறினார்.
     வழியில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் பாபாவால் ஏற்பட்டவை என்பதை உணர்ந்த உபாசினி மிகவும் மகிழ்ந்தார். 
இந்த உபாசினிதான் பின்னாளில் மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்து, சகூரி என்ற இடத்தில் பெரிய டிரஸ்ட்டையும், ஆசிரமத்தையும் நிறுவி புகழ் பெற்று விளங்கினார்.
நாம் எவ்வளவு தூரம் சென்றாலும் நம்மோடு பாபா இருக்கிறார், நாம் செய்வதையும் பார்க்கிறார்.  ஆகவே , துன்ப நேரத்தில் துவள வேண்டாம். அவர் நிச்சயம் நம்மை காப்பாற்றுவார்.

என்னை நினை!

தம்முடைய பாரத்தினை 
என் மேல் போட்டுவிட்டு 
என்னுடன் ஒருவர் ஒன்றிவிட்டால் 
அவருடைய உலக சம்பந்தமான 
சகல விவகாரங்களுக்கும்
நான் சூத்திரதாரியாகிறேன்.  
 
 (அத்தியாயம் 28:200)

சத்குருவைக் காட்டிய குரு 1



சீரடி சாயி பாபாவின் புகழ் அகில இந்தியா முழுதும் பரவ முழு முதற் காரணம் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியே ஆவார். இத்தனைக்கும் அவர் சீரடி சாயி பாபாவை நேரில் பார்த்ததில்லை.
அவர் கூறுகிறார்: “ நான் ஒரு சத்குருவைத் தேடி இந்தியாவின் நான்கு திசைகட்கும் சென்றேன். ஓரிடத்திலும் நிற்காமல் அலைந்து திரிந்துக் கொண்டிருந்தேன். அநேக இடங்களுக்கும் சென்றேன். அநேக ஞானிகளைக் கண்டேன்.
1936ம் ஆண்டு (சாயி பாபா சமாதியடைந்து 18 ஆண்டுகள் கழித்து) சீரடிக்கு வந்து சாயி பாபா சமாதியை நேருக்கு நேராக காணும் வரை என்னுடைய ஆன்மீக தாகம் அடங்கவில்லை.  சீரடிக்கு வந்தேன். அங்கு என் இதயத்தில் அவரைக் கண்டேன்.
அவர்தான் என் தேடுதலை நிறுத்தினார்.  சீரடியில் நான் என்னால் எவ்வளவு எடுத்துக்கொள்ள முடியுமோ அதற்குப் பன்மடங்கு அதிகமாகவே பெற்றேன்.  கடைசியில் என் சத்குருவினை கண்டுகொண்டேன். அவர்தான் சத்குரு சாயிநாதர். அவருடன் நான் நிரந்தரமாக தொடர்பு கொண்டிருக்கிறேன்”.

Wednesday, May 13, 2015

நல்லதே நடக்கும்!

எனது பெரிய மகன் விக்னேஷ் பிரபுவிற்க்கு கல்யாணம் ஆக தாமதம் ஆன போது நான் பாபாவிற்க்கு பிரார்த்தனை செய்ததின் பலனாக கல்யாணம் ஆனது. நானும் எனது தங்கையும் பெருங்களத்தூர் வந்து முதல் மகனுக்காக ரூபாய் ஆயிரம் காணிக்கை செலுத்தினோம். அப்போதே எனது இரண்டாவது மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற வேண்டிக்கொண்டு,  அங்கு நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டு ரூபாய் 501 செலுத்தி வேண்டினோம்.
வேண்டுதல் வைத்த பதினைந்து நாட்களில் பெண் வீட்டிலிருந்து பதில் வந்தது. மளமளவென தொடர் நிகழ்வுகள் நடந்து நான்கு மாதங்களில் திருமணம் நடந்து, மகனும் மருமகளும் வெளிநாட்டில் வேலைக்கு சென்றுவிட்டனர். மனம் உருகிய பிரார்த்தனை நிஜமாகி எனது சக்திக்கும் மீறிய இத்திருமணம் நடந்தது பெரும் அற்புதமாக உள்ளது.
இவர்கள் திருமணம் முடிந்து வெளிநாட்டிற்க்குச் செல்லும் முன்னர், மருமகளின் விசாவிற்க்காக சென்னை வந்தபோது, பெருங்களத்தூர் வந்தோம். கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துக்கொண்டு சாயி வரதராஜனை சந்தித்தோம்.
அப்போது அவர், “ பெண்ணுக்கு விசா கிடைக்கும். தடையில்லாமல் திருமணம் நடக்கும். இனி கை நிறைய காசும் கிடைக்கும். பாபா கிட்டே எப்படியோ ஐஸ் வைத்து நல்ல மருமகளை பெற்றுவிட்டீர்கள்!” என்று சொன்னார். கூட்டுப்பிராத்தனையில் கலந்துக்கொண்டிருந்த பாபா பக்தர்கள் அனைவரும் இதைக்கேட்டு மகிழ்ச்சியாகச் சிரித்தனர்.
மனத்திருப்தியுடன் கூட்டுப்பிரார்த்தனையில் ரூபாய் 5001 தட்சணையாக அளித்தோம். ஐயா அவர்கள் இதனை கீரப்பாக்கம் கோயில் கட்டுமானப் பணிக்கு மணல் வாங்க அப்போதே சமர்ப்பித்தார். ஐயா அவர்கள் என் மருகளுக்கு ஆப்பிள் ஒன்றை ஆசிர்வதித்துத் தந்து , “ விரைவில் குழந்தைப் பேறும் உனக்குக் காத்திருக்கிறது” என்று சொன்னார். ஐயா வாக்கும் பலித்தது.
நல்ல மனதோடு பிரார்த்தனை செய்தால் நமக்கு நல்லதே நடக்கும். சாயி நாம ஜெபம், சாயி காயத்ரி ஆகியவை நமது மனதிற்குள்ளேயே இருந்து வரவேண்டும். அப்போது பாபா செய்யும் அற்புதங்களை நம்மால் முழுமையாக அனுபவிக்க முடியும்.
பாபாவின் ஆசிர்வாதம் இந்த கலியுகத்தில் நடந்ததிற்க்கு நானே ஒரு சாட்சி.
ஜானகி சுப்ரமணியன், ராயபுரம், திருப்பூர்-1.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...