Wednesday, May 13, 2015

நல்லதே நடக்கும்!

எனது பெரிய மகன் விக்னேஷ் பிரபுவிற்க்கு கல்யாணம் ஆக தாமதம் ஆன போது நான் பாபாவிற்க்கு பிரார்த்தனை செய்ததின் பலனாக கல்யாணம் ஆனது. நானும் எனது தங்கையும் பெருங்களத்தூர் வந்து முதல் மகனுக்காக ரூபாய் ஆயிரம் காணிக்கை செலுத்தினோம். அப்போதே எனது இரண்டாவது மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற வேண்டிக்கொண்டு,  அங்கு நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டு ரூபாய் 501 செலுத்தி வேண்டினோம்.
வேண்டுதல் வைத்த பதினைந்து நாட்களில் பெண் வீட்டிலிருந்து பதில் வந்தது. மளமளவென தொடர் நிகழ்வுகள் நடந்து நான்கு மாதங்களில் திருமணம் நடந்து, மகனும் மருமகளும் வெளிநாட்டில் வேலைக்கு சென்றுவிட்டனர். மனம் உருகிய பிரார்த்தனை நிஜமாகி எனது சக்திக்கும் மீறிய இத்திருமணம் நடந்தது பெரும் அற்புதமாக உள்ளது.
இவர்கள் திருமணம் முடிந்து வெளிநாட்டிற்க்குச் செல்லும் முன்னர், மருமகளின் விசாவிற்க்காக சென்னை வந்தபோது, பெருங்களத்தூர் வந்தோம். கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துக்கொண்டு சாயி வரதராஜனை சந்தித்தோம்.
அப்போது அவர், “ பெண்ணுக்கு விசா கிடைக்கும். தடையில்லாமல் திருமணம் நடக்கும். இனி கை நிறைய காசும் கிடைக்கும். பாபா கிட்டே எப்படியோ ஐஸ் வைத்து நல்ல மருமகளை பெற்றுவிட்டீர்கள்!” என்று சொன்னார். கூட்டுப்பிராத்தனையில் கலந்துக்கொண்டிருந்த பாபா பக்தர்கள் அனைவரும் இதைக்கேட்டு மகிழ்ச்சியாகச் சிரித்தனர்.
மனத்திருப்தியுடன் கூட்டுப்பிரார்த்தனையில் ரூபாய் 5001 தட்சணையாக அளித்தோம். ஐயா அவர்கள் இதனை கீரப்பாக்கம் கோயில் கட்டுமானப் பணிக்கு மணல் வாங்க அப்போதே சமர்ப்பித்தார். ஐயா அவர்கள் என் மருகளுக்கு ஆப்பிள் ஒன்றை ஆசிர்வதித்துத் தந்து , “ விரைவில் குழந்தைப் பேறும் உனக்குக் காத்திருக்கிறது” என்று சொன்னார். ஐயா வாக்கும் பலித்தது.
நல்ல மனதோடு பிரார்த்தனை செய்தால் நமக்கு நல்லதே நடக்கும். சாயி நாம ஜெபம், சாயி காயத்ரி ஆகியவை நமது மனதிற்குள்ளேயே இருந்து வரவேண்டும். அப்போது பாபா செய்யும் அற்புதங்களை நம்மால் முழுமையாக அனுபவிக்க முடியும்.
பாபாவின் ஆசிர்வாதம் இந்த கலியுகத்தில் நடந்ததிற்க்கு நானே ஒரு சாட்சி.
ஜானகி சுப்ரமணியன், ராயபுரம், திருப்பூர்-1.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...