காசிநாத் உபாசினி என்பவர் வைதீக பிராமணர்.
பாபாவை முஸ்லீமாக எண்ணிய இவர், அவரை அணுகவே கூடாது என வைராக்கியமாக
இருந்தார். அவருக்கு நோயிருந்த்து.
யாராலும் குணப்படுத்த முடியாத இந்த நோய் , பாபாவால் குணமானது. இதனால் மனம்
மாறிய காசிநாத், பாபா மிகப்பெரிய மகான் என நினைத்து அவருடன் தங்கியிருந்தார்.
உடல் ஆரோக்கியம் பெற்றதும்
வீட்டு நினைவு வந்துவிட்ட்து. அவருக்கு
மூன்று மனைவியர், லவுகீக வாழ்க்கை வாழலாம் என நினைத்து, வீட்டுக்குப் போக
அனுமதிக்குமாறு பாபாவிடம் கேட்டுக்கொண்டே இருந்தார் உபாசினி.
அவரைப் போகவேண்டாம்
எனத்தடுத்தார் பாபா. ஆனால் உபாசினி செல்ல வேண்டும் என தொடர்ந்து கேட்டுக்கொண்டதால்,
போனால் எட்டு நாட்களுக்குள் திரும்பிவிடவேண்டும் எனக்கூறி விடை கொடுத்து
அனுப்பினார். சந்தோஷமாகக் கிளம்பிய
உபாசினி, போகும் வழியில் கோதாவரி நதியில் குளித்துவிட்டுப் போகத் தயாரானார். வழி
முழுக்கத் தடைகள் ஏற்பட்டு, கிளம்பியது முதல் ஏழு நாட்கள் வரையில் பதினோறு கிலோ
மீட்டர் வரையே செல்லமுடிந்த்தது.
கோபர்கான் என்ற இடத்திலுள்ள
கோயில் பிரம்மச்சாரி ஒருவர், ’நீங்கள் சாயிநாத்திடம்
திரும்பிச்செல்லுங்கள்’ என்று உபாசினியிடம் கூறினார். ஆனால் உபாசினி ஒப்புக்கொள்ளவில்லை. இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு
குதிரை வண்டி வந்த்து. குதிரை வண்டியில் வந்தவர்களிடம், ‘எங்கே போகிறீர்கள்?’ எனக்கேட்டார் பிரம்மச்சாரி.
அவர்கள், ‘சீரடிக்கு’, என்றதும், ‘இவரை அழைத்துச்செல்லுங்கள்’ என்றார் பிரம்மச்சாரி.
’நான்
அங்கிருந்தே வருகிறேன். மீண்டும் போக
முடியாது!’ என மறுத்தார் உபாசினி.
’சீரடிக்குப்
போயுருக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள்
கண்டிப்பாக எங்களோடு வந்து வழி காட்டவேண்டும்’ என
வண்டியில் வந்தவர்கள் உபாசினியை கூப்பிட்டார்கள்.
அவர்களிடம் இருந்து
தப்பிப்பதற்க்காக, ‘எனக்குப்பசிக்கிறது.
வண்டிக்கும் பணம் இல்லை’ என்றார் உபாசினி.
’சாப்பிட்த்தருகிறோம், வண்டிக்குப் பணமும் தருகிறோம், நீங்கள் வந்தே
ஆகவேண்டும்’, என அவர்கள் உபாசினியிடம் வலியுறுத்தி, அவரை
அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.
சீரடிக்கு வந்த உபாசினியைப்
பார்த்த பாபா, ‘என்ன, அதற்க்குள் திரும்பி விட்டாயா? எட்டு நாட்களுக்குள் திரும்ப முடியாது என்றாயே, இப்போது நீ போய்
எத்தனை நாட்கள் ஆகின்றன?’ என்று கேட்டார்.
’எட்டு
நாட்கள் ஆகின்றன’ என்ற உபாசினி, ‘நான் வீட்டுக்குப் போகும்
ஆவலோடுதான் போனேன், ஆனால் என்னால் போக முடியவில்லையே! அது ஏன்? எல்லாம் உங்களது வேலையாகத்தான் இருக்கும் பாபா’ என்றார்.
’ஆமாம்,
இந்த எட்டு நாட்களும் நான் உன் கூடவேதான் இருந்தேன்...’ என்று
பாபா பதில் கூறினார்.
வழியில் நடந்த நிகழ்வுகள்
அனைத்தும் பாபாவால் ஏற்பட்டவை என்பதை உணர்ந்த உபாசினி மிகவும் மகிழ்ந்தார்.
இந்த உபாசினிதான் பின்னாளில் மிகப்பெரிய ஞானியாகத்
திகழ்ந்து, சகூரி என்ற இடத்தில் பெரிய டிரஸ்ட்டையும், ஆசிரமத்தையும் நிறுவி புகழ்
பெற்று விளங்கினார்.
நாம் எவ்வளவு தூரம் சென்றாலும் நம்மோடு பாபா
இருக்கிறார், நாம் செய்வதையும் பார்க்கிறார்.
ஆகவே , துன்ப நேரத்தில் துவள வேண்டாம். அவர் நிச்சயம் நம்மை காப்பாற்றுவார்.
No comments:
Post a Comment