Sunday, May 20, 2018

உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன்...!



என் அன்பு குழந்தையே.. !
உன் வாழ்க்கையில் நீ என்ன செய்கின்றாய் என்ன யோசிக்கின்றாய் என்பதற்கு காரணம் நீ இல்லை. உனக்குள் இருக்கும் அனைத்துமே நான் அறிவேன். நான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறேன் என்று உன்னை நீ காரணகர்த்தாவாக நினைத்து கொள்ளாதே. நீ நினைக்கின்ற நினைப்புகளுக்கும் காரணம் நானே. நீ செய்கின்ற செயல்களுக்கும் காரணம் நானே. உன் வாழ்க்கையில் நீயும் சரி உனக்கு என்ன நடக்கிறதோ இவை அனைத்தும் என் அனுமதி இல்லாமல் உன்னிடம் வராது. என் குழந்தை நீ என் உயிருக்கு உயிராய் இருக்கும் அன்பான குழந்தை. உன்னை ஓவ்வொரு நிமிடமும் என் கருவில் சுமந்து என் நெஞ்சில் தாங்கிக் கொண்டு இருக்கிறேன். குழந்தைகள் தவறு செய்வது இயல்பு. உன் தாயாய் தகப்பனாய் நான் கண்டிப்பேன். உன்னிடம் பிழை இருந்தால் அதை மாற்றி அமைக்க வேண்டியது நான்.  அதற்காக என் குழந்தையை எனக்கு எப்படி பிடிக்காமல் போகும். உன்னை விட்டு நான் செல்வேன் என்று எப்படி நினைத்தாய். என்னை உலகமாய் நினைத்து உயிராய் நம்பும் என் குழந்தையாகிய உன்னை விட்டு ஓரு போதும்  நான் விலகுவதும் இல்லை. உன்னை விலகிப் போகும் படி நான் செய்வதும் இல்லை. உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன்...!

நீ செய்ய வேண்டியவை


  • உன்னுடைய வாழ்க்கை எனும் ஓடத்தை என்னிடம் தந்துவிட்டால், இந்த வாழ்வெனும் கடலை கடக்க நான் உதவி செய்வேன்
  • நீ துனியில் இருந்து வரும் புகையை சுவாசித்தால் உன் உடலில் உள்ள அனைத்து நோயும் நீங்கிவிடும்
  • துவாரகாமாயி மற்றும் என் சமாதியின் பெருமைகளை நீ உணர்ந்து கொண்டால் என்னை நீ பார்க்க முடியும்
  • உன்னுடைய வாழ்க்கையையே என்னிடம் தந்து விட்டால், உன்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாக நான் இருப்பேன்
  • என் மீது நம்பிக்கை வைத்து என் மீது உன் மனதை செலுத்தி வந்தால் அனைவரும் உன் மீது நம்பிக்கை வைப்பார்கள்
  • வியாழன் அன்று தரப்படும் என்னுடைய பிரசாதத்தை நீ பணிவுடன் ஏற்றுக்கொண்டால் அன்றைய தினத்தின் அனைத்து நன்மைகளும் உனக்கு கிடைக்கும்
  • என்னையே நீ நினைத்துக் கொண்டு இருந்தால் அனைவரும் உன்னையே நினைத்துக் கொள்வார்கள்
  • என்னையே நீ வேண்டிக் கொண்டால் உன்னுடைய அனைத்து வேண்டுகோளின் போதும் நான் வந்து உனக்கு வழி காட்டுவேன்
  • என்னை தூய கண்களுடன் நீ தரிசித்தால் அனைத்து மதத்தினரையும் அன்புடன் பார்க்க வைப்பேன்
  • என்னை ஊதுபத்தி புகையில் இருந்து வெளிவருவதாக கருதிப் பார்த்தாயானால், எந்த இடத்தில் வரும் புகையிலும் என்னை நினைக்க வைப்பேன்
  • சாயி ஆலயத்தில் ஏதாவது வேலையில் நான் உதவிக்கொண்டு இருப்பவனைப் போல இருப்பதாக உணர்ந்தால், உன்னுடைய அனைத்து காரியத்திலும் நான் உதவுவேன்
  • என்முன் நீ கைகூப்பி நின்றால் உன் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடங்கல்களையும் தடுத்து நிறுத்துவேன்


Saturday, May 19, 2018

சாயி நாமஜெபம் ஒன்றே போதும்





 "சமாதியிலிருந்தும் ஊக்கத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பேன். மஹா சமாதிக்குப் பின்னரும், நீ நினைத்த மாத்திரத்தில், நீ எங்கிருந்தாலும், நான் உன்னுடன் இருப்பேன். நேசத்துடன் ஒரு பக்தன் என்னை அழைத்த மாத்திரத்தில் நான் தோன்றுவேன்.  பயணம் செய்ய புகைவண்டி எதுவும் தேவையில்லை".

சாயிபாபா உடலோடு வாழ்ந்த போது பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தார். ஆனால் மஹாசமாதி அடைந்த பிறகும், அதே போன்ற பாதுகாப்பு கிடைக்குமா என சந்தேகப்படுபவர்கள் பாபாவை சரியாக புரிந்து கொள்ளாத ஜனங்களே. அப்படி சந்தேகப்படுவது பாபாவிடமும் அவரது திருமொழிகளிலும் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. சாயியிடம் மனதை ஒருமைப் படுத்தவேண்டும் என்ற ஆர்வம் பக்தனிடம் இருந்தால் போதும். இப்போதும் சாயி பேசுவதை கேட்கலாம், அவருடன் பழகலாம், இதற்கு அசாதாரணமான சமத்காரங்கள் தேவையில்லை. இடைவிடாத சாயி நாமஜெபம் ஒன்றே போதும். இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இது விசுவாசம் பற்றிய விஷயமே ஆகும். விசுவாசம் திடமாக இருந்தால் பிரதிபலன் விரைவில் கிட்டும்.

உன்னை தேடி நான் வர போகிறேன்...."


அன்பு குழந்தையே !
என்னிடம் முழு மனதோடு கேள். என்னிடமுள்ள அனைத்தையும் நான் உனக்குத் தருவேன்.. ஒவ்வொரு நிலையை நினைத்தும் நீ எதற்கு வேதனைப்படுகிறாய்.  இப்படி வேதனை மேல் வேதனைப்பட்டு எதைச் சாதிக்கப் போகிறாய்? வெளியே வா.. அப்போது எனது ஆசி உனக்குக் கிடைக்கும். வெறும் வாய் வார்த்தைகளால் நான் சொல்ல வில்லை நான் உன்னுடன் இருக்கும் போது, உனது கவலைகளை எனது பாதத்தில் வை அதன் பின்னர், நடப்பதை பார்  உன்னைப் படைத்தவன் நான், . நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்  உனது கர்மபலன்கள் முடிந்து விட்டது  எப்போது நீ என்னை நினைவில் நிறுத்திக் கொண்டு பூஜை செய்தாயோ அப்போதே உன்னுடைய கர்மபலன்கள் பொடி பொடியாகும். எனது காலடியில்  நீ யார் என்பதை, நீ அறிந்து கொள்வதற்கு நான் வைக்கும்  பரிட்ச்சைதான் நீ படும் வேதனை உண்மையில் ஒருபோதும் நான் பணத்தை விரும்பியதில்லை விரும்பவும் எனது பிள்ளைகளை அனுமதிக்கவில்லை.  எனது பிள்ளைகளை அதன் பிடியில் விழவும் அனுமதிக்கமாட்டேன் ஆனால்  உனக்கு அது தேவைபடும் காலகட்டத்தில்  அது உன்னை தேடி வரும் யாருக்கும் இல்லை என்று சொல்லாதே யாரையும் வெறுத்து ஒதுக்காதே உன்னை தேடி  நான் வர போகிறேன்...."

Friday, May 18, 2018

என்றும் துணை நிற்பேன்



என் அன்பு குழந்தையே உன் வாழ்க்கையில் நிகழ்கின்ற விஷயங்கள் எல்லாம் என் பார்வையில் தான் நிகழ்கின்றது அவை உன் மனதை ரணப்படுத்த, உன் உலகம் என்று நீ நினைப்பவர்கள் எல்லாம் உன்னை காயப்படுத்துகிறார்கள் என்று நீ சொல்லி அழுகின்றாய் அவர்கள் ஏன் என்னிடம் இப்படி நடக்கிறார்கள் மற்றவர்கட்கு ஓரு நியாயம் எனக்கு மட்டும் ஓரு நியாயம். நான் செய்கின்ற செயல்கள் தான் தவறு உன் தவறு எ்ன்று சொல்கிறார்கள் ஆனால் என்னை அந்த அளவுக்கு தள்ளியது சூழ்நிலை. அதற்கு நான் எப்படி காரணம் என்று தானே புலம்புகிறாய். இந்த சூழ்நிலையை விட்டுவிடு நான் உனக்காகத்தான் இருக்கிறேன் உன் சாய் அப்பா உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகிப்போகும்படி நான் செய்வதும் இல்லை உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வை



உன் கவலைதான் என்ன? என்னிடம் கூறிவிடு நானே உனது சத்குரு; என்னையே நினை; என் நாமத்தையே ஸமரணம் செய்து என்னை வணங்கி  என் பாதங்களில் சரணடை அது போதும் உனக்கு.
       நீ எதற்கும் பயப்படாதே. நீ ஏன் கவலைப்படுகிறாய்?    என்னை    நீ தஞ்சமடைந்து விட்டாயல்லவா!  நான் பார்த்து கொள்கிறேன். இனி எதற்கும் நீ பயப்பட தேவை இல்லை. உனது மனம், புத்தி, அகங்காரம்  எனும் மூன்றையும் என்னிடம் சமர்ப்பித்து விடு. இவ்வுலக வாழ்க்கையில்  உன் கையில்  ஏதுமில்லை.  எல்லாவற்றையும் பாபா  இயக்குகிறார்  என்ற மனோபாவத்தை ஏற்படுத்திகொள் . எதிலும்  அவசரப்படாதே பொறுமையாய் இரு. என் மீது  உன் பாரத்தை இறக்கு, நான் சுமக்கிறேன்.  என் மீது முழு நம்பிக்கை வைத்து  நீ செய்யும்  அனைத்து செயல்களுக்கும் என்னை பொறுப்பாளியாக்கு உன் செயலை உன் விருப்பப்படி நான்  செய்து முடிக்கிறேன்.
    நம்பிக்கை  எனும் அச்சாணியாக என்னை  உன் மனதில் நிறுத்து.
பொறுமையாய்  வாழ்ந்து    வா.  உன்னை சேர்ப்பிக்க வேண்டிய  இடத்தில் நான் சேர்க்கிறேன். என்னை சரணடைந்து உன்னை  என்னிடம்  ஒப்படைத்துவிட்டு  என் மீது முழு நம்பிக்கை வை  உன் பாரம் மட்டும் அல்ல  உன் பாவத்தையும் நான் சுமக்க தயாராக இருக்கிறேன்.
    


Thursday, May 17, 2018

புன்னகை பூக்கள் பூத்திடும் பாபா



புன்னகை பூக்கள் பூத்திடும் பாபா
பொன்மலர் பாதம் பணிந்தோம் பாபா
அன்னையைப் போல காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
மந்திரமானது உன் பெயர் பாபா
மனக்குறை நீக்கும் மகத்துவம் பாபா
ஜென்மங்கள் யாவிலும் துணை நீ பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
மௌனத்தின் மொழியாய் பேசிடும் பாபா
மண்ணுயிருகெல்லாம் தலைவன் பாபா
பௌர்ணமி நிலவாய் ஒளி தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
திவ்விய மூர்த்திகள் வடிவே பாபா
தீவினை அகற்றிடும் திருவே பாபா
கௌவிய பாவம் நீக்கிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
சீரடி மண்ணில் தோன்றிய பாபா
செய்தாய் பற்பல அற்புதம் பாபா
பூவடி தந்து அருள்வாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
தாய் மடி தேடித் தவித்தோம் பாபா
தாங்கிட வந்தாய் நீயே பாபா
ஆதரவான உறவே பாபா
 சர்வேஸ்வரனே சாயி பாபா

பரம் பொருள் நீயென அறிந்தோம் பாபா
பக்தியின் உன்னைத் தொழுதோம் பாபா
கரங்களை நீட்டி காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
தடைகளை நீக்கும் பேரருள் பாபா
தன்னிகர் இல்லா எங்களின் பாபா
இடர்களைக் களையும் வரம் தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
குழந்தையின் உள்ளம் கொண்டாய் பாபா
குறைகளை நீக்கும் குருவே பாபா
நிழல் தரும் மரமாய் நின்றாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
விழுந்திடும் விதையாய் விளங்கிடும் பாபா
விளைந்திடும் பயிராய் பயன் தரும் பாபா
எழுந்திடும் கதிராய் சுடர் தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
நீரினில் தீபம் ஏற்றிய பாபா
நெஞ்சினில் உன்னை வைத்தோம் பாபா
நேரிடும் துன்பம் நீக்கிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

பூரணமான அருளே பாபா
பூமியைக் காத்திட பிறந்தாய் பாபா
யார் உனைப் போற்றிலும் பலன் தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
 ஆயிரம் யுகங்கள் வாழ்ந்திடும் பாபா
அடியவர்கெல்லாம் அருள் தரும் பாபா
தாமரை பூவாய் சிரித்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
வாழ்வினில் உன்னை வணங்கிட பாபா
வரும் வினை யாவும் போக்கிடும் பாபா
தாழ்வுகள் அகன்றிட செய்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
காலையில் விழித்ததும் உன் முகம் பாபா
காண்போம் ஒவ்வொரு நாளும் பாபா
பாலென உள்ளம் படைத்தவன் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
நாளையப் பொழுதை நலமாய் பாபா
நடத்திட அருளும் இறைவா பாபா
தாழ்பணிந்தோமே அன்புடன் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
உதியில் நோயைப் போக்கிடும் பாபா
உலகோர் போற்றிடும் பகவான் பாபா
நீதியை மண்ணில் காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
சோதனை ஆயிரம் நீக்கிடும் பாபா
சுந்தர வடிவாய் தோன்றிடும் பாபா
சாதனை புரிந்திட துணைவரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
எளியவர்கெல்லாம் எளியோன் பாபா

ஏற்றம் வாழ்வில் தந்திடும் பாபா
தலைமுறைக் காக்கும் தயாபரி பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
நிலைத்தரும் நிம்மதி நின்பதம் பாபா
நினைவுகளெல்லாம் உன் வசம் பாபா
சலனத்தை வெல்லும் சக்தியே பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
சுடுமணல் பாதையில் நிழல் தரும் பாபா
சூழ்ந்திடும் இருளை விலக்கிடும் பாபா
கடலென கருணைக் கொண்டாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
விடைத்தெரியாத விளக்கம் பாபா
விண்ணும் மண்ணும் ஆள்வது பாபா
சடைமுடி சிவனாய் வந்தாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
அடைமழை நாளில் குடையாய் பாபா
அன்பரைக் காத்திட வருவாய் பாபா
சரணடைந்தோமே உன்னிடம் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
இமயத்தைப் போலே உயர்ந்தாய் பாபா
இதயத்தில் நீயே நிறைந்தாய் பாபா
சமயத்தில் வந்து உதவிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...