"சமாதியிலிருந்தும்
ஊக்கத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பேன். மஹா சமாதிக்குப் பின்னரும், நீ நினைத்த மாத்திரத்தில்,
நீ எங்கிருந்தாலும்,
நான் உன்னுடன்
இருப்பேன். நேசத்துடன் ஒரு பக்தன் என்னை அழைத்த மாத்திரத்தில் நான் தோன்றுவேன். பயணம்
செய்ய புகைவண்டி எதுவும் தேவையில்லை".
சாயிபாபா உடலோடு வாழ்ந்த போது பக்தர்களுக்கு பாதுகாப்பு
அளித்தார். ஆனால் மஹாசமாதி அடைந்த பிறகும், அதே போன்ற பாதுகாப்பு
கிடைக்குமா என சந்தேகப்படுபவர்கள் பாபாவை சரியாக புரிந்து கொள்ளாத ஜனங்களே. அப்படி
சந்தேகப்படுவது பாபாவிடமும் அவரது திருமொழிகளிலும் நம்பிக்கையின்மையை காட்டுகிறது.
சாயியிடம் மனதை ஒருமைப் படுத்தவேண்டும் என்ற ஆர்வம் பக்தனிடம் இருந்தால் போதும்.
இப்போதும் சாயி பேசுவதை கேட்கலாம், அவருடன் பழகலாம், இதற்கு அசாதாரணமான சமத்காரங்கள் தேவையில்லை. இடைவிடாத சாயி நாமஜெபம் ஒன்றே
போதும். இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இது விசுவாசம் பற்றிய விஷயமே ஆகும்.
விசுவாசம் திடமாக இருந்தால் பிரதிபலன் விரைவில் கிட்டும்.
No comments:
Post a Comment