Sunday, May 27, 2018

அப்பாவாக என்றும் துணை நிற்பேன்



என் அன்பு குழந்தையே, இன்று உன் கண்களில் சந்தோஷத்தின் கண்ணீரை கண்ட உன் சாய் அப்பாவின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை .சந்தோஷத்தில் உன் சாய் அப்பா ஆடிக் கொண்டு இருந்தேன். இன்றைய நாளுக்காக நீ கண்ட கனவு, என்னைப் பார்ப்பதற்கு நீ வந்ததில், எனக்கும் என் குழந்தையைக் கண்ட மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. இன்று குரு பூர்ணிமா. என் கடவுள் என் வாழ்க்கை என் உயிர் என் குரு சாய்தேவா அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று என் துவாரகமாயீக்கு வந்து என் குழந்தை ஓவ்வொரு நிமிடம் சாய்அப்பா என்று அழகாக உள்ளத்தில் இருந்து உச்சரித்து அன்பு மழையில் உன் சாய்அப்பாவை திகைக்க வைத்து விட்டாய் 
உன் கனவில் என் உதி மூலமாக உன்னை ஆசிர்வதித்தேன் நேரில் இன்றும் என்றும் என் ஆசிர்வாதம் எப்போதும் என் குழந்தைக்கு உண்டு ; இன்று என்னிடம் நீ கேட்டது  சாய்அப்பா உங்கள் குழந்தையாய் மாணவர்களாய் இன்றைய நாள் முழுமை அடைய நான் விரும்புகிறேன்  என்ற உன் எண்ணத்தை உன்  மனதில் குடியிருக்கும் உன் சாய் அப்பாக்கு எப்படி தெரியாமல் இருக்கும் இன்று குரு தினம் குருவின் போதனையும் வார்த்தையும் குருவின் நேரடி ஆசிர்வாதத்திற்கு சமம் அதை நீ மனதோடு புரிந்து உணர்ந்து உன் கண்களில் தெரிந்த நிறைவிற்கும் ஆனந்ததிற்கும் அழவே இல்லை சந்தோஷத்தில் கண்ணீரும் சிரிப்புமாய் இன்று உன்னை பார்க்கையில் என் மனம் ஆனந்தத்தில் அலை மோதியது உன் மனதில் இருந்த குழப்பத்தை நான் அகற்றி விட்டேன் என் சாய்அப்பா தான் என் குரு அவர்கள் மீது வைத்த நம்பிக்கையும் பாசம்  அன்பு பக்தி வேறு இடத்தில் வைக்க இயலாது என் வாழ்க்கையின் அகண்டமாய் என் பரபிரம்மாய் இருப்பது என் சாய்அப்பா தான் என்று நீ சொல்லும் போது உன் அன்பின் கடல் எல்லையற்றது என்றே நான் உணர்ந்தேன் உன் சாய்அப்பா உனக்கான உபதேசத்தை உனக்கு கூறுவேன் யார் மூலமாகவோ என்று உனக்கு தெரியும் அதே போலவே  தான் இன்று நடந்து இருக்கிறது  உன் மனதில் எல்லா மனதிலும்  நான் உன் சாய்அப்பா இருப்பேன் என்பதை நீ அறிவாய் அதன் பொருட்டாய் இன்று உனக்கு அதை நிகழ்த்தினேன் அதை புரிந்து நீ உன் மனதில் அச்சிட்டு
கொண்டாய் உன் சாய்அப்பாவி்ன் மனதில் நீ குடியேறி விட்டாய் இன்று உனக்கு அதை பூவின் செய்கை மூலமாக இன்று உணர்த்தினேன் இனிமேல் நீ என்
பொறுப்பு நீ எதற்கும் பயப்படாதே எல்லாம் சுகமாக நடக்கும் உன் வாழ்க்கையில் ஜெயம் உண்டாகும் எல்லாருக்கும் நல்லதை நினை நல்லதை செய் என் அருளும் ஆசியும் எப்போதும் உண்டு உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை என் கருவிலும் என் நெஞ்சிலும் என் கண்களில் சுமந்து இந்த சம்சாரம் என்ற கடலை கடக்க உனக்கு நான் கடலில் செல்பவர்களுக்கு எந்த திசைக்கு செல்ல வேண்டும் என்று உதவுதற்கு நிற்கும் கலங்கரை விளக்கமாக உன் சாய்அப்பா அறனாய் துணை நின்று என்றும்  உன்னை காப்பேன் உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Saturday, May 26, 2018

நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்


என் அன்பு குழந்தையே!

உன்னைக் கரைச் சேர்க்கத்தான், நான் இங்கு சில நிகழ்வுகளை நடத்திக் கொண்டு இருக்கிறேன் அதைப்புரிந்து உன் வேலையை நீ சரியாகச் செய். அலட்சியமாக இருக்காதே. உன்னிடம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம், எண்ணமாகத்தான் இதுவரை உன்னிடம் இருக்கிறது. அதை நீ செயலில் செய்யாமல் இருக்கிறாய்.
எல்லாம் உன் வசம் வரும் காலத்தை நீ நெருங்கி விட்டாய். இந்த நேரத்தில் உன் மனதில் வேறு எந்தவிதமான சிறு அலட்சியமான எண்ணங்கட்கும் இடம் கொடுக்காதே. உன்னை நான் வாழ்வில் உயர்த்தி நடத்தத்தான் இங்கு உனக்கான நேரத்தை தரப்போராடுகிறேன்.
என் பிள்ளை பொறுப்பாளியாய், அவர்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். உன் அலட்சிய போக்கைத் தூக்கி வெளியே எறி.
உன் வாழ்க்கையில் நிச்சயம் நீ வெற்றி பெறுவாய். உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. விலகிப்போகும்படி நான் செய்வதும் இல்லை. உன் அம்மாவாக அப்பாவாக இருந்து என்றும் உன்னை நான் காப்பேன்!!!

இப்படிக்கு
உன் சாய் அப்பா!!!

மனப்பூர்வமாக உதவி செய்!



உன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் திடீரென தாழும் போதும், வீழும் போதும், அழும் போதும், அது அவர்கள் கர்மாவினால் வந்தது என்பதை உணர்ந்து அமைதியாக இரு. அதைப் பார்த்து நீ பயந்துவிடாதே, நான் எதுவரை உனது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறேனோ, அதுவரை உனக்கு எந்தத் தீங்கும் வராது.

உன்னை நம்பி வருகிறவர்கள் யாராக இருந்தாலும் மனப்பூர்வமாக உதவி செய். திரும்ப வரும் என பலனை எதிர்பார்க்காதே. அது உனக்கு நல்லதாக இருக்கும். உன்னை அண்டியிருப்பவர்களுக்கு வஞ்சனை செய்ய நினைக்காதே. உன் மேல் பொறாமை உள்ளவர்களைப் பார்த்தும், உனக்கு விரோதமாகப் புறம் பேசித் திரிபவர்களைப் பார்த்தும் நீ பயப்படாதே.

ஸ்ரீ சாயி-யின் குரல்.

Friday, May 25, 2018

என்னை உன் இதயத்தில் அமர்த்து





ஒவ்வொரு குரு பூர்ணிமா தினமும் பாபா துவாரகாமாயியில் அமர்ந்திருப்பார். பக்தர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு புத்தகத்துடன் வந்து, அதை பாபாவிடம் சமர்ப்பிப்பார்கள். அதைப் படித்து பயன் பெற வேண்டும் என ஆசிர்வதித்து, பாபா அந்த நூலை அவர்களுக்கு திருப்பியளிப்பார் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. சாதாரணமாக பாபா புத்தகத்தை கொண்டு வந்தவரிடமே  திருப்பியளித்து விடுவார். ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஒருவர் கொண்டுவந்த புத்தகத்தை மற்றொருவருக்கு என மாற்றியளித்துவிடவும் செய்வார். அம்மாதிரி ஒரு குரு பூர்ணிமா தினம் 'ரேகே' என்ற பக்தர் தன் கையில் எந்த புத்தகமும் எடுத்து வராமல் வந்து விட்டார்.

பாபா : (ரேகேயை நோக்கியவாறு) : நீ செய்ததுதான் சரி. எந்தப் புத்தகத்தையும் படிக்காதே. இந்த புத்தகங்களில் 'ப்ரஹ்மனைக்' கண்டுவிடலாமென்று இந்த ஜனங்கள் எண்ணுகின்றனர்; ஆனால் அவர்கள் காண்பதோ ப்ரமா (குழப்பம்). நீ உன் இதயத்தில் என்னை அமர்த்திவிட்டால் போதும். அவ்வாறாகஇதயமும், மூளையும் ( அன்புணர்வும், அறிவுத்திறனும் ) ஒருமித்து செயல்படச்செய் .

என் உயிர் குழந்தை நீ


என் அன்பு குழந்தையே உன் வாழ்க்கையில் நிகழும் ஓவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஓவ்வொரு அர்த்தம் உண்டு. எல்லாச் செயல்களுக்கான பயனும் உண்டு. உனக்கு நடந்த, நடக்கின்ற நடக்கப் போகின்ற அனைத்தையும் நான் அறிவேன். உன்னைப் பாதுகாக்கவே உன் வாழ்வுக்குள் நான் வந்தேன். 
நிச்சயம் நீ செம்மையடைவாய் உனக்குள்ளும் வெளியேயும் நான் எப்போதும் இருக்கிறேன். உன் கையை என்ன ஆனாலும் நான் விட மாட்டேன். நீயும் என் கையை பிடித்துத்தான் உன் வாழ்க்கையில் நடைப்போடுவாய்.
பிறந்த குழந்தையின் கையைப் பிடித்தால் அது கெட்டியாக பிடித்துக் கொள்ளும். அந்த பிஞ்சுக்கை நீ. உன் கைக்கு துணை கொடுக்கும் கை தான் உன் சாய் அப்பாவின் கை.  உன் அம்மாவாக அப்பாவாக என்றும்; என் மனம் என்னும் கருவில்  இருக்கும் என் உயிர் குழந்தை நீ !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Thursday, May 24, 2018

பூரண சரணாகதி அடையுங்கள்



என்ன நடக்குமோ அது பாபாவின் ஆணைப்படியே நடக்கும். அவரே காரியங்களை செய்பவரும் செய்விப்பவரும் ஆவார். செயல்புரியும் அதிகாரத்தை பாபாவின் கைகளில் ஒப்படைத்துவிட்டு பூரண சரணாகதி அடையுங்கள். பக்தனின் கரைகாணாத அன்பும் அசையாத நம்பிக்கையால் பாபா குதுகலம் அடைகிறார்; பக்தனை கொண்டாடுகிறார். பக்தர்களில் எவரெல்லாம் முழுமையான சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லோருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார். அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் மட்டுமே ஒருவர் சாயியின் தர்பாருக்குள் வரமுடியும். வந்தவர்கள், யாரையும் வெறும் கையுடன் பாபா அனுப்புவதில்லை. சாயி சாயி  என்று அவருடைய திவ்ய நாமத்தை நாம் கூறும்பொழுது அவர் நம் கண்ணிற்கு புலப்படாமல் அவர் அங்கேயே இருக்கிறார். இது சத்தியம். அவர் தனது சக்தியையும், நிலையையும் நமக்கு தெய்வீக அற்புதங்கள் மூலம் நிரூபித்துக் காட்டுகிறார்.

நீ தக்க சமயத்தில் உணர்வாய்


என் அன்பு குழந்தையே உன்னை நினைக்கையில் உனக்கு எந்த விதமான போதனையை நான் தர வேண்டும் என்று யோசிக்கின்றேன். உன்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? நீ அவர்களை புரிந்து கொண்டாய் அல்லவா? அப்படி இருக்கையில் அவர்கள் கேட்கப் போகும் கேள்விகள் இது தான் என்றும்,  நீ ஏற்கனவே எதிர்பார்த்த கேள்விகள் தான் என்றும் நீ உணர்கிறாய். பிறகு ஏன் அவர்கள் மீது கோபம் கொள்கிறாய்? அவர்களுக்கு நிதானமாய் இரண்டு வார்த்தைகளில் பதில் கூறி விட்டு உன் கோபத்தை அந்த கூறிய வார்த்தைகளிலேயே மறந்து விடு. அப்படி இருக்கையில் நீ ஏமாந்து போகமாட்டாய்.
உனக்கு கோபமும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்ற ஏமாற்ற நிலையும் அவர்கள் மீது வெறுப்பும் வாழ்க்கையில் ஓர் வெற்று இடத்தையும் உணர மாட்டாய். உன்னை நான் என் வசம் இழுக்கக் காரணம், நீ மனித நேய உள்ளம் கொண்டவர் என்பதால்தான்.
நான் செய்யும் லீலைகளை நீ தக்க சமயத்தில் உணர்வாய். உன்னுள் எழும் தேவை இல்லாத கெட்ட எண்ணங்களை நினைத்து நமக்கு இவ்வளவு கெட்ட எண்ணங்களா என்று உன்னை குழப்பிக்கொள்ளாதே. அந்த எண்ணங்களின் தோற்றத்திற்கு காரணம் நல்ல எண்ணங்களின் உயர்வு தன்மை உணர்த்தவே.
உன் வாழ்க்கையில் நீ நிதானத்தை பொறுமையை நம்பிக்கையை கடைப்பிடி ஏனென்றால் சோதனை முடியும் காலகட்டத்தில் நீ நிற்கிறாய் அது உன்னை சீண்டிப் பார்க்கும் பொறுமை நிதானம் இவை சோதிக்கும் படி நடக்கும் நம்பிக்கையை கெட்டியாக பிடித்துக் கொள். என் பிள்ளை விழும் தருவாயில் இருந்தாலும், என் கரங்கள் மேலொங்கி உன்னை தாங்கி, வெற்றியுடன் கூடிய நிம்மதியான சிம்மாசனத்தில் உன் வாழ்க்கை என்னும் அரச சபையில் உன்னை ஏளனமாக பார்த்து நகைத்து, உன்னை காயப்படுத்தியவர்கள் முன்னிலையில் அரசனாக அரசியாக அமர வைத்து அழகு பார்ப்பேன்.
என் உயிருக்கு மேலாய் நான் என் நெஞ்சில் உயிராய் சுமக்கும் என் கருவின் சிசு நீ. உன்னை என் கண்ணில் வைத்து காப்பேன் உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை அரவணைத்து துணையாய் இருந்து அன்பு புரிவேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...