Thursday, May 24, 2018

நீ தக்க சமயத்தில் உணர்வாய்


என் அன்பு குழந்தையே உன்னை நினைக்கையில் உனக்கு எந்த விதமான போதனையை நான் தர வேண்டும் என்று யோசிக்கின்றேன். உன்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? நீ அவர்களை புரிந்து கொண்டாய் அல்லவா? அப்படி இருக்கையில் அவர்கள் கேட்கப் போகும் கேள்விகள் இது தான் என்றும்,  நீ ஏற்கனவே எதிர்பார்த்த கேள்விகள் தான் என்றும் நீ உணர்கிறாய். பிறகு ஏன் அவர்கள் மீது கோபம் கொள்கிறாய்? அவர்களுக்கு நிதானமாய் இரண்டு வார்த்தைகளில் பதில் கூறி விட்டு உன் கோபத்தை அந்த கூறிய வார்த்தைகளிலேயே மறந்து விடு. அப்படி இருக்கையில் நீ ஏமாந்து போகமாட்டாய்.
உனக்கு கோபமும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்ற ஏமாற்ற நிலையும் அவர்கள் மீது வெறுப்பும் வாழ்க்கையில் ஓர் வெற்று இடத்தையும் உணர மாட்டாய். உன்னை நான் என் வசம் இழுக்கக் காரணம், நீ மனித நேய உள்ளம் கொண்டவர் என்பதால்தான்.
நான் செய்யும் லீலைகளை நீ தக்க சமயத்தில் உணர்வாய். உன்னுள் எழும் தேவை இல்லாத கெட்ட எண்ணங்களை நினைத்து நமக்கு இவ்வளவு கெட்ட எண்ணங்களா என்று உன்னை குழப்பிக்கொள்ளாதே. அந்த எண்ணங்களின் தோற்றத்திற்கு காரணம் நல்ல எண்ணங்களின் உயர்வு தன்மை உணர்த்தவே.
உன் வாழ்க்கையில் நீ நிதானத்தை பொறுமையை நம்பிக்கையை கடைப்பிடி ஏனென்றால் சோதனை முடியும் காலகட்டத்தில் நீ நிற்கிறாய் அது உன்னை சீண்டிப் பார்க்கும் பொறுமை நிதானம் இவை சோதிக்கும் படி நடக்கும் நம்பிக்கையை கெட்டியாக பிடித்துக் கொள். என் பிள்ளை விழும் தருவாயில் இருந்தாலும், என் கரங்கள் மேலொங்கி உன்னை தாங்கி, வெற்றியுடன் கூடிய நிம்மதியான சிம்மாசனத்தில் உன் வாழ்க்கை என்னும் அரச சபையில் உன்னை ஏளனமாக பார்த்து நகைத்து, உன்னை காயப்படுத்தியவர்கள் முன்னிலையில் அரசனாக அரசியாக அமர வைத்து அழகு பார்ப்பேன்.
என் உயிருக்கு மேலாய் நான் என் நெஞ்சில் உயிராய் சுமக்கும் என் கருவின் சிசு நீ. உன்னை என் கண்ணில் வைத்து காப்பேன் உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை அரவணைத்து துணையாய் இருந்து அன்பு புரிவேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...