என் அன்பு குழந்தையே, இன்று உன் கண்களில் சந்தோஷத்தின்
கண்ணீரை கண்ட உன் சாய் அப்பாவின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை .சந்தோஷத்தில் உன்
சாய் அப்பா ஆடிக் கொண்டு இருந்தேன். இன்றைய நாளுக்காக நீ கண்ட கனவு, என்னைப் பார்ப்பதற்கு நீ வந்ததில், எனக்கும் என் குழந்தையைக் கண்ட மகிழ்ச்சியில் தலை கால்
புரியவில்லை. இன்று குரு பூர்ணிமா. என் கடவுள் என் வாழ்க்கை என் உயிர் என் குரு
சாய்தேவா அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று என் துவாரகமாயீக்கு வந்து
என் குழந்தை ஓவ்வொரு நிமிடம் சாய்அப்பா என்று அழகாக உள்ளத்தில் இருந்து உச்சரித்து
அன்பு மழையில் உன் சாய்அப்பாவை திகைக்க வைத்து விட்டாய்
உன் கனவில் என் உதி மூலமாக
உன்னை ஆசிர்வதித்தேன் நேரில் இன்றும் என்றும் என் ஆசிர்வாதம் எப்போதும் என்
குழந்தைக்கு உண்டு ; இன்று என்னிடம் நீ கேட்டது சாய்அப்பா
உங்கள் குழந்தையாய் மாணவர்களாய் இன்றைய நாள் முழுமை அடைய நான் விரும்புகிறேன் என்ற உன் எண்ணத்தை உன் மனதில் குடியிருக்கும் உன் சாய் அப்பாக்கு எப்படி
தெரியாமல் இருக்கும் இன்று குரு தினம் குருவின் போதனையும் வார்த்தையும் குருவின்
நேரடி ஆசிர்வாதத்திற்கு சமம் அதை நீ மனதோடு புரிந்து உணர்ந்து உன் கண்களில் தெரிந்த
நிறைவிற்கும் ஆனந்ததிற்கும் அழவே இல்லை சந்தோஷத்தில் கண்ணீரும் சிரிப்புமாய் இன்று
உன்னை பார்க்கையில் என் மனம் ஆனந்தத்தில் அலை மோதியது உன் மனதில் இருந்த
குழப்பத்தை நான் அகற்றி விட்டேன் என் சாய்அப்பா தான் என் குரு அவர்கள் மீது வைத்த
நம்பிக்கையும் பாசம் அன்பு பக்தி வேறு
இடத்தில் வைக்க இயலாது என் வாழ்க்கையின் அகண்டமாய் என் பரபிரம்மாய் இருப்பது என்
சாய்அப்பா தான் என்று நீ சொல்லும் போது உன் அன்பின் கடல் எல்லையற்றது என்றே நான்
உணர்ந்தேன் உன் சாய்அப்பா உனக்கான உபதேசத்தை உனக்கு கூறுவேன் யார் மூலமாகவோ என்று
உனக்கு தெரியும் அதே போலவே தான் இன்று
நடந்து இருக்கிறது உன் மனதில் எல்லா
மனதிலும் நான் உன் சாய்அப்பா இருப்பேன்
என்பதை நீ அறிவாய் அதன் பொருட்டாய் இன்று உனக்கு அதை நிகழ்த்தினேன் அதை புரிந்து
நீ உன் மனதில் அச்சிட்டு
கொண்டாய் உன் சாய்அப்பாவி்ன் மனதில் நீ குடியேறி விட்டாய்
இன்று உனக்கு அதை பூவின் செய்கை மூலமாக இன்று உணர்த்தினேன் இனிமேல் நீ என்
பொறுப்பு நீ எதற்கும் பயப்படாதே எல்லாம் சுகமாக நடக்கும்
உன் வாழ்க்கையில் ஜெயம் உண்டாகும் எல்லாருக்கும் நல்லதை நினை நல்லதை செய் என்
அருளும் ஆசியும் எப்போதும் உண்டு உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி
போகும்படி நான் செய்வதும் இல்லை என் கருவிலும் என் நெஞ்சிலும் என் கண்களில்
சுமந்து இந்த சம்சாரம் என்ற கடலை கடக்க உனக்கு நான் கடலில் செல்பவர்களுக்கு எந்த
திசைக்கு செல்ல வேண்டும் என்று உதவுதற்கு நிற்கும் கலங்கரை விளக்கமாக உன்
சாய்அப்பா அறனாய் துணை நின்று என்றும்
உன்னை காப்பேன் உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
No comments:
Post a Comment