ஒவ்வொரு குரு பூர்ணிமா தினமும் பாபா துவாரகாமாயியில்
அமர்ந்திருப்பார். பக்தர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு புத்தகத்துடன் வந்து, அதை
பாபாவிடம் சமர்ப்பிப்பார்கள். அதைப் படித்து பயன் பெற வேண்டும் என ஆசிர்வதித்து, பாபா அந்த நூலை அவர்களுக்கு திருப்பியளிப்பார் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.
சாதாரணமாக பாபா புத்தகத்தை கொண்டு வந்தவரிடமே
திருப்பியளித்து விடுவார். ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஒருவர் கொண்டுவந்த
புத்தகத்தை மற்றொருவருக்கு என மாற்றியளித்துவிடவும் செய்வார். அம்மாதிரி ஒரு குரு
பூர்ணிமா தினம் 'ரேகே' என்ற பக்தர் தன் கையில் எந்த புத்தகமும் எடுத்து வராமல் வந்து விட்டார்.
பாபா : (ரேகேயை நோக்கியவாறு) : நீ செய்ததுதான் சரி. எந்தப்
புத்தகத்தையும் படிக்காதே. இந்த புத்தகங்களில் 'ப்ரஹ்மனைக்' கண்டுவிடலாமென்று இந்த
ஜனங்கள் எண்ணுகின்றனர்; ஆனால் அவர்கள் காண்பதோ ப்ரமா (குழப்பம்). நீ உன் இதயத்தில் என்னை
அமர்த்திவிட்டால் போதும். அவ்வாறாக, இதயமும், மூளையும் ( அன்புணர்வும், அறிவுத்திறனும் ) ஒருமித்து செயல்படச்செய் .
No comments:
Post a Comment