என் அன்பு குழந்தையே உன் வாழ்க்கையில் நிகழும் ஓவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஓவ்வொரு அர்த்தம் உண்டு. எல்லாச் செயல்களுக்கான பயனும் உண்டு. உனக்கு நடந்த, நடக்கின்ற நடக்கப் போகின்ற அனைத்தையும் நான் அறிவேன். உன்னைப் பாதுகாக்கவே உன்
வாழ்வுக்குள் நான் வந்தேன்.
நிச்சயம் நீ
செம்மையடைவாய் உனக்குள்ளும் வெளியேயும் நான் எப்போதும் இருக்கிறேன். உன் கையை என்ன ஆனாலும்
நான் விட மாட்டேன். நீயும் என் கையை பிடித்துத்தான் உன் வாழ்க்கையில் நடைப்போடுவாய்.
பிறந்த குழந்தையின் கையைப் பிடித்தால் அது கெட்டியாக பிடித்துக் கொள்ளும். அந்த பிஞ்சுக்கை நீ. உன் கைக்கு துணை கொடுக்கும் கை தான் உன் சாய் அப்பாவின் கை. உன் அம்மாவாக அப்பாவாக என்றும்; என் மனம் என்னும்
கருவில் இருக்கும் என் உயிர் குழந்தை நீ
!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
No comments:
Post a Comment