என் அன்பு குழந்தையே!
உன்னைக் கரைச் சேர்க்கத்தான், நான் இங்கு சில நிகழ்வுகளை
நடத்திக் கொண்டு இருக்கிறேன் அதைப்புரிந்து உன் வேலையை நீ சரியாகச் செய்.
அலட்சியமாக இருக்காதே. உன்னிடம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம், எண்ணமாகத்தான்
இதுவரை உன்னிடம் இருக்கிறது. அதை நீ செயலில் செய்யாமல் இருக்கிறாய்.
எல்லாம் உன் வசம் வரும் காலத்தை நீ நெருங்கி விட்டாய். இந்த
நேரத்தில் உன் மனதில் வேறு எந்தவிதமான சிறு அலட்சியமான எண்ணங்கட்கும் இடம்
கொடுக்காதே. உன்னை நான் வாழ்வில் உயர்த்தி நடத்தத்தான் இங்கு உனக்கான நேரத்தை
தரப்போராடுகிறேன்.
என் பிள்ளை பொறுப்பாளியாய், அவர்கள் வாழ்க்கையில் இருக்க
வேண்டும் என்பது தான் என் எண்ணம். உன் அலட்சிய போக்கைத் தூக்கி வெளியே எறி.
உன் வாழ்க்கையில் நிச்சயம் நீ வெற்றி பெறுவாய். உன்னை
விட்டு நான் விலகுவதும் இல்லை. விலகிப்போகும்படி நான் செய்வதும் இல்லை. உன்
அம்மாவாக அப்பாவாக இருந்து என்றும் உன்னை நான் காப்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய் அப்பா!!!
No comments:
Post a Comment