Tuesday, June 12, 2018

சாயியின் கிருபை!



    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால், ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு, முத­ல், அஹங்காரத்தையும் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விட்டுவிடவேண்டும். பக்தியாலும் பிரேமையாலுந்தான் அவனை அறியமுடியும்.
  சிர்டீ மக்களின் கூட்டுப் புண்ணியம் பூரணமாக நிறைந்த பிறகு, பிராப்தகாலத்தில் பழுத்து, ஸாயீ என்னும் முளை விட்டிருக்கலாம். இது சிலகாலம் கழித்து சிர்டீக்கு வந்து மக்களுக்குப் பலன் அளித்தது.
விவரிக்க முடியாத சக்தி தன்னை வெளிப்படுத்திக்கொண்டது; ஜன்மமில்லாதது ஜன்மத்தை ஏற்றுக்கொண்டது; உருவமில்லாதது உருவெடுத்தது; கருணையின் ரஸம் மனித உருவெடுத்தது.
   புகழ், செல்வம், வைராக்கியம், ஞானம், பேராற்றல், கொடை-இந்த ஆறு மஹோன்னதமான குணங்கள் அவரை அலங்கரித்தன. பாபாவினுடைய நிக்ரஹம் (வேண்டாவென்று ஒதுக்குதல்) அசாதாரணமானது; தோன்றாநிலையில் எதையும் தம்முடையதாக வைத்துக்கொள்ளாதவர், பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக உடலை ஏற்றுக்கொண்டார்.
 ஆஹா! அவருடைய கிருபைதான் என்னே! பக்தர்கள் அவரிடம் நம்பிக்கையும் அன்பும் செலுத்தினர். ஆனால், அவருடைய நிஜமான இயல்பை இறைவனே அறிவார். வாக்கின் தேவதையாகிய ஸரஸ்வதியும் சொல்லத்துணியாத அவருடைய வார்த்தைகள், கேட்டவர்களை லஜ்ஜையால் தலைகுனியச் செய்தன. ஸாயீ இவ்வார்த்தைகளை பக்தர்களின் நல்வாழ்வை மனத்திற்கொண்டே பேசினார்.
     இந்த வார்த்தைகளை நான் தெரிவிப்பதைவிட மௌனமே சிறந்தது; இருப்பினும், கடமை தவறக்கூடாது என்னும் காரணத்தால் சொல்லி­யே தீரவேண்டியிருக்கிறது.
     பக்தர்களின்மீது கருணை கொண்ட ஸாயீ, மிக்க பணிவடக்கத்துடன் கூறினார், ”அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன். உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்தினால் நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசா­.லி.
    , பாபா எவ்வளவு அடக்கமுடையவராக இருந்தார். எளிமையாக இருப்பதற்கு எவ்வளவு ஆவல். எவ்வளவு தூய்மையான, அஹங்காரமற்ற நிலை. எவ்வளவு மரியாதை. பாபா மேற்கண்டவாறு கூறிய நிகழ்ச்சி பரிசுத்தமான உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது; இதைச் சொன்னது பாபாவுக்கு இழிவு என்று யாராவது நினைத்தால், அவர் என்னை மன்னித்துவிட வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
  என்னுடைய பேச்சு அசிங்கப்பட்டுவிட்டது எனில், அதைக்காது கொடுத்துக் கேட்ட பாவத்தை நீங்கள் நிவிர்த்தி செய்து கொள்ள வேண்டுமெனில், ஸாயீ நாமத்தை ஜபம் செய்வோம்; சகல தோஷங்களும் அகன்றுவிடும்.

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

Monday, June 11, 2018

வெற்றியுடன் நிமிர்ந்து நிம்மதியுடன் இருப்பாய்



என் அன்பு குழந்தையே, உன் மனமானது அன்னப் பறவையாய் இருக்கின்றது. அது தான் தண்ணீரையும் பாலையும் தனியே பிரித்துக் குடிக்கும். அதே போலவே தான் உன் வாழ்க்கையை நீ பார்க்கின்றாய் . துன்பத்தையும், இன்பத்தையும் பார்க்கின்றாய். ஆனால், உனக்கு தெரியுமோ, துன்பத்தில் உனக்கு நிச்சயமாக இன்பம், சிறிய அளவு பங்கு இருக்கும். அதே நேரத்தில் இன்பத்திலும் துன்பம் தோன்றும் இரண்டுமே பிரியாது. அவற்றை நீ புரிந்து கொண்டால் உன் வாழ்க்கை என்னும் கடலில் நீ சுலபமாக நீந்தி அதற்கான அர்த்தத்தை பெறலாம் அதற்கு பதிலாக நீ கடல் என்றே தெரியாமல் இருந்தால் உன் வாழ்க்கை எப்படி நெறிப்படும்? வாழ்க்கை என்பது நெறியுடன் வாழ்வது தான் அர்த்தமுள்ள உண்மையான வாழ்க்கை உனக்கு கிடைத்த இந்த அனுபவம் என்னும் பொக்கிஷ பெட்டகம் மிகப் பெரிய பரிசு. அதை உனக்கு நான் அளித்துள்ளேன்.  உன் வாழ்க்கை என்பது சமுத்திரம். அதனால் சமுத்திரத்தை உன் சாய்அப்பா உனக்காக உருவாக்கியுள்ளேன். அதில் நீ வெற்றியுடன் நிமிர்ந்து நிம்மதியுடன் இருப்பாய் உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Sunday, June 10, 2018

அப்பாவின் வாக்கு



       அவசரப்பட்டு செய்யப்படும் செயல்கள் எதுவும்  அந்த இலக்கைப் போய் சோ்வதில்லை. நடந்ததையே நினைத்துக் கொண்டு இருக்காமல்நடக்கப்போவதைப்பற்றி யோசிங்கள்.
  முயற்சி என்பது ஒரு விதை மாதிரி. அதை நினைத்து விதைச்சிக்கிட்டே இருக்கணும்அதுல  சில விதைகள் வளரும், சில விதைகள் மண்ணுக்கு உரமாகிடும். இது தான் உலக நியதி...
   நடக்கும் விசயங்கள் எதுவும் நம்ம கையில் இல்லை என்றாலும், நாம் விடா முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தோம்  என்றால் நாம் கண்டிப்பாக சரியான இலக்கை அடைவோம்...
 அதை அடைவதற்க்கு அவர்கள், அவர்களுடைய கடமையை செய்வது மட்டுமே. பிரதிபலனை எதிர்பாா்க்காமல் செய்யும் கடமை "கடவுளை" நெருங்குவதற்கான ஒரு வழி ..
பொறுமையும்நம்பிக்கையும் இருந்தது என்றால் நம்ம வாழ்க்கையில் எல்லா இன்பமும் நம்மைத் தேடி வரும்..
பிரச்சனையை பார்த்து  பயந்து ஓடாதேஅந்த இறைவன் மேல் பாரத்தை போடுவரும் பிரச்சினைகள் எல்லாம் வந்த வழியிலேயே போய்விடும்....


Saturday, June 9, 2018

குரு சேவை



குரு சேவை மிகக் கடினமானது.  ஆகையால் முன்னமே நன்றாக யோசித்து குருசேவைக்கு முற்பட வேண்டும். கலியின் பிரபாவத்தால் இந்திரிய சபலம், அவதூறுகள் முதலியன வரலாம்.  ஆனால், மனதை திடப்படுத்திக் கொண்டு, ஒரே நோக்குடன் குருசேவை செய்யவேண்டும்.
குரு பக்தியினால் எல்லாமும் பெற முடியும்.  சிவனே குருவென்ற திடமான பாவனையுடன் குருவை சேவிக்க வேண்டும்.  ஜபங்கள், அனுஷ்டானங்கள் நீண்ட நாள் செய்தால்தான் பயன் பெற முடியும்.  ஆனால் குருபக்தியின் பயன் உடனே கிடைக்கும்.

தவங்கள், அனுஷ்டானங்கள், யக்ஞங்கள்,  தானங்கள் ஒரு வேளை பயனில்லாமல் போகலாம்.  ஆனால் குருபக்தி கண்டிப்பாக பயன் கொடுக்கும்.  அதுவுமில்லாமல் குருவிடம் பக்தி உள்ளவனுக்கு யக்ஞங்கள் தானங்கள் செய்த பயனும் வரும்.
குருபக்தி சுலபமானது,  கடினமில்லாதது.  ஆனால் மனதை திடப்படுத்திக் கொண்டு முழு நம்பிக்கையுடன் குருவிடம் இருக்கவேண்டும்.
ஸ்ரீகுருவிற்க்கு எவன் ஒருவன் குருபக்தியுடன் சேவை செய்வானோ அவன் வீட்டில் ஸ்ரீகுரு கல்ப விருட்சமாய் வேண்டியதை எல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பார்.
குருவை சேவிப்பவனுக்கு நரகமே இல்லாதபோது கஷ்டங்கள் எப்படி வரும்.  குரு சேவையினால் நான்கு வித புருஷார்த்தங்கள் கிடைக்கும்.  குரு சேவை செய்யும் கரங்கள், குருவை நாடி வரும் பாதங்கள்குருவை வணங்கும் சிரம் எவ்வளவோ புண்ணியம் செய்தவை.- 

Friday, June 8, 2018

உனக்கு ஏற்பட்ட வாய்ப்பு.



அன்பு குழந்தையே...

வாழ்வில் இது நடக்கும், நடக்காது என நிர்ணயிக்கப்பட்ட செயல் என்று யாராலும் கூற முடியாது.  விதி என்னும் மாயை என்னும் விளையாட்டில் நீ என்ன நான் என்ன எல்லாரும் ஒன்று தான்.  மேடும் சமமாய் போகும் சாலையும் உன் பயணங்களான வாழ்க்கையும் ஒன்று தான்.
எல்லாவற்றையும் கடந்து போகத்தான் வேண்டும். பயந்தாலும் அதே இடத்தில் நிற்க இயலாது.  செல்லும் பாதைகள் எத்தகையது என்று தீர்மானிக்க முடியாது என்றாலும் அது எப்படிப்பட்டது என உனக்கு உன் மனதில் இருந்து சரியா தவறா என்று கூறுவேன்.
உன்னால் சாதிக்க முடியும் உன் சுற்றத்தில்  ஆட்கள் இல்லை. அரவணைப்பு இல்லாதது போல் உணர்கிறாயேஉன் கண்ணீர் விழும் தருவாயில் என் கண்களில் இருந்து முதலில் வடிகிறது ,உன் மனநிலைமை கண்டு.
மனதிற்குள் புலம்பி அழுதுகொண்டும் வெளியில் சிரித்துக் கொண்டும் உனக்கு உன் முகம் நாடகமாய் நடிப்பது போன்று தோன்றி இருக்கிறது.
இது உனக்கு கஷ்டமான காலம் என்று நீ நினைக்கிறாய் ,
ஆனால் என்னை பொறுத்த வரை இது உன்னை உன்னிடம் உள்ள குறைகளை மாற்ற உனக்கு ஏற்பட்ட நல்ல பாடமாய் அமைந்த காலம் தான் இது. இதை நீ பயன்படுத்திக்கொள், உன்னை சரி செய்ய உனக்கு ஏற்பட்ட வாய்ப்பு.

Thursday, June 7, 2018

உன்னுடன் நான் இருக்கிறேன்.




மனம் தடுமாறும், முன்னே செல்ல நான்கு படிகள் ஏறினால், பின்னே இழுக்க உன் எண்ணங்கள் உன்னை குழப்பும்.  மனதை ஒருமுகப்படுத்து. உன் சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக சீர் ஆகும். உன் எண்ணங்கள் புதுமை அடையும். உன் வாழ்வில் மெல்ல மெல்ல சூரியனின் வெளிச்சம்  உதயமாகும்.

உன் எண்ணங்கள் நேர்மறையாய், ஆனால் உனக்கான நிம்மதி, சந்தோஷம் பிறக்கும். உலகத்தில் என்ன மாறினாலும், நான் உன்னை விட்டு ஒருபோதும் அகலமாட்டேன். உன்னில்,  எப்போதும் நான் இருப்பேன். உன் அன்பின் ஆழத்தையும், உன் பக்தியின் தூய்மையையும், உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவன் ஆகிய நான் அறிவே.

என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ.
நீ ஜெயமாக நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய். உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை என் இதயத்தின் கருவறையில் சுமந்து  அரவணைப்பேன்.

Wednesday, June 6, 2018

பாபாவின் சக்தி



என்ன நடக்கப் போகிறதோ அது நடக்கட்டும். ஆனால், அது பாபாவின் விருப்பப்படியே நடக்கும் என்ற திடமான சங்கல்பத்தை ஏற்றுக்கொண்டு இருங்கள். வேண்டுவதோ வேண்டாததோ, சுகமோ துக்கமோ, அம்ருதமோ விஷமோ, இந்த இரட்டைச் சூழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன. ஆகவே அவற்றைக் கண்டு சிரிக்கவும் வேண்டாம், அழவும் வேண்டாம். எது எது நேர்கிறதோ, அது அதைப் பொறுத்துக்கொள்ளவும். பாபாவே நமது ரட்சகர்; எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக. பாரம் சுமப்பவர் அவரே!
          நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் 
நான் நிச்சயமாக அதை தாங்குவேன்"
பாபாவின் வாக்கு வெறும் சொற்களல்ல; பிரம்மதேவன் எழுதும் தலையெழுத்துக்கு சமம். மனிதனுடைய கர்மவினையின் பலன்களையும் தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தவை.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...