அவசரப்பட்டு செய்யப்படும் செயல்கள் எதுவும் அந்த இலக்கைப் போய் சோ்வதில்லை. நடந்ததையே
நினைத்துக் கொண்டு இருக்காமல், நடக்கப்போவதைப்பற்றி யோசிங்கள்.
முயற்சி என்பது ஒரு விதை மாதிரி. அதை நினைத்து
விதைச்சிக்கிட்டே இருக்கணும், அதுல சில விதைகள் வளரும், சில விதைகள் மண்ணுக்கு
உரமாகிடும். இது தான் உலக நியதி...
நடக்கும் விசயங்கள் எதுவும் நம்ம கையில் இல்லை என்றாலும், நாம் விடா முயற்சி
பண்ணிக்கிட்டே இருந்தோம் என்றால் நாம்
கண்டிப்பாக சரியான இலக்கை அடைவோம்...
அதை அடைவதற்க்கு அவர்கள், அவர்களுடைய கடமையை
செய்வது மட்டுமே. பிரதிபலனை எதிர்பாா்க்காமல் செய்யும் கடமை "கடவுளை" நெருங்குவதற்கான
ஒரு வழி ..
பொறுமையும், நம்பிக்கையும் இருந்தது
என்றால் நம்ம வாழ்க்கையில் எல்லா இன்பமும் நம்மைத் தேடி வரும்..
பிரச்சனையை பார்த்து பயந்து ஓடாதே, அந்த இறைவன் மேல் பாரத்தை
போடு, வரும் பிரச்சினைகள் எல்லாம் வந்த வழியிலேயே போய்விடும்....
No comments:
Post a Comment