அன்பு குழந்தையே...
வாழ்வில் இது நடக்கும், நடக்காது என நிர்ணயிக்கப்பட்ட செயல் என்று யாராலும் கூற முடியாது. விதி என்னும் மாயை என்னும்
விளையாட்டில் நீ என்ன நான் என்ன எல்லாரும் ஒன்று தான். மேடும் சமமாய் போகும்
சாலையும் உன் பயணங்களான வாழ்க்கையும் ஒன்று தான்.
எல்லாவற்றையும் கடந்து போகத்தான்
வேண்டும். பயந்தாலும் அதே இடத்தில் நிற்க இயலாது. செல்லும் பாதைகள் எத்தகையது
என்று தீர்மானிக்க முடியாது என்றாலும் அது எப்படிப்பட்டது என உனக்கு உன் மனதில்
இருந்து சரியா தவறா என்று கூறுவேன்.
உன்னால் சாதிக்க முடியும்
உன் சுற்றத்தில் ஆட்கள் இல்லை. அரவணைப்பு
இல்லாதது போல் உணர்கிறாயே, உன் கண்ணீர் விழும்
தருவாயில் என் கண்களில் இருந்து முதலில் வடிகிறது ,உன் மனநிலைமை கண்டு.
மனதிற்குள் புலம்பி
அழுதுகொண்டும் வெளியில் சிரித்துக் கொண்டும் உனக்கு உன் முகம் நாடகமாய் நடிப்பது
போன்று தோன்றி இருக்கிறது.
இது உனக்கு கஷ்டமான காலம்
என்று நீ நினைக்கிறாய் ,
ஆனால் என்னை பொறுத்த வரை இது
உன்னை உன்னிடம் உள்ள குறைகளை மாற்ற உனக்கு ஏற்பட்ட நல்ல பாடமாய் அமைந்த காலம் தான்
இது. இதை நீ பயன்படுத்திக்கொள்,
உன்னை சரி செய்ய
உனக்கு ஏற்பட்ட வாய்ப்பு.
No comments:
Post a Comment