ஏதேனும் உறவோ, தொடர்போ இல்லாவிடில் ஒருவரும் எங்கும் செல்வதில்லை. ஏதேனும் ஜீவராசிகளோ, மனிதர்களோ உங்களிடம் வர நேர்ந்தால் அவர்களைப் பண்பின்றி விரட்டிவிட வேண்டாம். அவர்களை நன்கு வரவேற்று உரிய மரியாதையுடன் நடத்துங்கள்
Thursday, May 9, 2013
பாபாவின் அறிவுரை
Wednesday, May 8, 2013
ஸ்ரீ சாயி
பாபாவின் உதி என்பது அவரது யோக சக்தியால் உருவாக்கப்பட்டது. இது வெறும் சாம்பலாக இருந்தாலும் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் செய்வதற்க்கு வல்லது.
கஷ்டம், துன்பம், கவலை என எது நம் வாழ்க்கையில் வந்தாலும் அது நிரந்தரமானதல்ல. முடிவுக்கு வரக்கூடியது. கடந்து போகக்கூடியது. அது கடக்கிறவரை நாம் காத்திருக்கவேண்டும்.
ஏனெனில் பாபாவின் அனுக்கிரகம் இன்றைக்கே நமது பிரச்சனைகளை தீர்த்துவிடலாம். அல்லது நாளைக்கோ, இரண்டு வாரம் கழித்தோ, இரண்டு மாதம் கழித்தோ ஏன் இரண்டுக்கு ஆண்டுக்குப் பிறகு கூட நம்மை மாற்றும்.
அது வரை நமக்கு தேவை பொறுமை, நம்பிக்கை. இது மட்டுமே.
Monday, May 6, 2013
ஸ்ரீ சாயி
குருவின் பாதங்களில் செலுத்தும் அன்பான பக்தி ஒன்றே விடுதலையாவதற்கான ஒரே வழி. சாயிபிரபு என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் அல்லது நடிகர், தம் அடியவர்களை மகிழ்வித்தார். அவர்களைத் தாமாகவே தமது பண்புருவாகவே மாற்றம் செய்துகொண்டார்.
ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து.........அத்தியாயம் 23
Sunday, May 5, 2013
பாபாவின் கருத்து
தேளானாலும், பாம்பானாலும் கடவுள் எல்லா ஜீவராசிகளுள்ளும் வசிக்கிறார். அவரே இவ்வுலகில் மிகப்பெரிய பொம்மலாட்டக்காரர். அனைத்து ஜீவராசிகளும் (பாம்பும், தேளும்) அவரின் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றன. அவர் நினைத்தாலொழிய யாரும், எதுவும் பிறருக்குத் தீங்கு செய்துவிடமுடியாது. உலகம் முழுதும் அவரையே சார்ந்திருக்கிறது. எவருமோ எதுவுமோ சுதந்திரமானவர்களல்ல. எனவே நாம் கருணை கூர்ந்து எல்லா ஜீவராசிகளையும் நேசிக்க வேண்டும். துணிச்சல், வீரமுள்ள கொலைகளையும், சண்டைகளையும் விடுத்துப் பொறுமையாய் இருக்கவேண்டும். கடவுளே அனைவரின் பாதுகாப்பானவர்.
ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து..............பக்கம் 214
Saturday, May 4, 2013
எளிய வழி
நீ எனது ஒளியைக் காண விரும்பினால், அஹங்காரமற்றவனாகவும், மிக மிகப் பணிவுடனும் இருப்பாயாக.
எனது கால் பெருவிரலை இரண்டு கிளைகள் வழியாகத் தியானிப்பாயாக
அதாவது சுட்டுவிரல், நடுவிரல் ஆகியவற்றிடையே
அதன்பின் நீ எனது ஒளியைக் காண இயலும். இதுவே பக்தியை அடைய மிக மிக எளிய வழியாகும்.
Friday, May 3, 2013
ஸ்ரீ சாயி
மனம், உடல், செல்வம், பேச்சு ஆகியவற்றால்
அவருடைய பாதங்களில் சரணடையுங்கள்.
நிரந்தரமாக அவருடைய நாமத்தினை
ஸ்மரணம் செய்தால் லீலைகள்
அனுபவமாகும் என்று பாபா சொன்னதாக
சத்சரித்திரம் சொல்கிறது.
ச
Thursday, May 2, 2013
ஸ்ரீ சாயி
பாபாவின் உதி ராம பாணம் போன்றது.
அது குறி தவறாமல், தன் இலக்கைத்
தாக்கிவிட்டுத் திரும்பும்.
எனவே, பக்தியிருந்தாலோ,
இல்லாமல் போனாலோ கூட
அதன் மீது நம்பிக்கை வைத்தால் பலன் தேரும்.
Wednesday, May 1, 2013
ஸ்ரீ சாயி
கடவுள் உன்னைக் காப்பேன்
என்று வாக்குறுதி கொடுத்தால்,
எப்போது காப்பாய்?
எப்படி காப்பாய்?
எதுவரை காப்பாய்?
என்று கேள்விகளிலேயே
கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தால்,
கடவுள் காப்பதைக்கூட
உணர முடியாமல் சறுக்கலில்
மாட்டிக்கொள்வோம்.
Subscribe to:
Posts (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.! 1.அதிகாலையில் எழுந்து கரைதல். 2.உணவி...
-
நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு! ” காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித...