Wednesday, April 30, 2014

சீக்கிரமே உனக்கு நல்ல வழி பிறக்கும்!

அப்பா தனது இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்தார். ஒருவன் பள்ளிக்கு ஒழுங்காகச்சென்று படித்தான். மற்றவன் விளையாட்டாகப் பொழுது போக்கி நாளடைவில் பள்ளிக்குப்போவதையே  நிறுத்திவிட்டான்.
பள்ளி செல்வதை நிறுத்தி தந்தையின் பேச்சைக் கேட்காமல் தன் விருப்பத்திற்கு நடந்தான். படிக்கிற மகனோ, தந்தையின் சொல்லை மதித்துவந்தான்.
அப்பா, படிக்கிற மகனை சின்னச் சின்ன தவறுகளுக்காகவும் அடிப்பதும், திட்டுவதுமாக இருந்தார். கட்டுப்பாடுகளை நிறைய விதித்தார். அடிக்கடி நிந்தித்தார். பள்ளியிலும் கெடுபிடிகள் அதிகம். பாடச் சுமை வேறு. இந்நிலையில் அப்பாவின் செயல்களும் இவனை நெருக்க, இந்த நிந்தனையை சகிக்க முடியவில்லை. ஒரு நாள் அப்பாவை எதிர்த்துக் கேள்வி கேட்டு விடுவது எனத் தீர்மானித்தான்.

                                                                                                                 மேலும் தொடர

Tuesday, April 29, 2014

அட்சய திரிதியின் ஜோதிட ரகசியங்கள்.

அட்சய திரிதியை என்கின்ற நாள்  நம்  அனைவருக்கும் ஒரு   பெரிய வர பிரசாதமான நாள் . நம் தமிழகத்தில் உள்ள மக்கள்  இந்த நாளை வெறும் தங்கம் வாங்கும் நாளாக மட்டுமே பயன்படுக்கின்றனர்.இந்த நாளின் உள்ளர்த்த ரகசியங்கள் நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது.    
     பாற்கடலில் பள்ளிகொண்டு இருக்கும் பரமாத்மாவின் ஆறாவது அவதாரமான பரசுராமன் அவதாரம் எடுத்த நாள். மேலும் இதே நாளில் தான் விநாயகரின் துணை கொண்டு வியாசர் மகரிஷி மகாபாரத்தை தொகுக்க ஆரம்பித்தார் .
     சிவபெருமானின் ஜடாமுடியில் கட்டுண்ட கங்கை மாதா பகிரதனின் பெரும்  முயச்சியால் நம் பாவங்களை போக்க பூமியில் குதித்த நாள் இந்த நாளே .
     சதுர்யுகங்களில் கிருதாயுகம் முடிந்து 1296000 ஆண்டுகள் கொண்ட  திரேதாயுகம் ஆரமபித்த நாளாக இதை கருதுகிறார்கள் .                           கிருஷ்ணபரமாத்மாவின் பால்யநண்பன் சுதாமா என்கின்ற குசேலன் 27 பிள்ளைகளை பெற்று வறுமையில் வாடிய பின் தன் மனைவியின் தூண்டுதலின் பேரில் வறுமையை துடைக்க அரிசியில் செய்த அவலுடன் கிருஷ்ணரை சந்தித்த நாள் இந்த அட்சய திரிதியை நாளே. அதாவது குசேலன் கோட்டிஸ்வரன் ஆனநாள்.
     ஆதிசங்கரர், ஒரு ஏழையின் வறுமை நீங்க கனகதாரா ஸ்தோத்திரம் பாடி கூரையை பெயர்த்துக் கொண்டு தங்ககாசுகள் கொட்டிய நாள் இந்த இனிய நாளே.
                                                                                                            மேலும் தொடர

நமக்கு ஏற்றதைத் தருவார் பாபா!

என் தாத்தா காலத்திலிருந்து நாங்கள் பாபாவை வணங்கியும் இன்னும் எங்கள் துன்பங்கள் தீரவில்லை. என்ன செய்யலாம்? அவரை எப்படி வணங்கினால் எங்கள் கஷ்டம் போகும்? எனப் பலர் கேட்கிறார்கள்.
இந்த நிலையில் நீங்கள் இருந்தால், உங்களுக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை, மனதில் சந்தேகம் உள்ளது. அதனால்தான் உங்களது துன்பங்கள் உங்களை தொடர்கின்றன என்பேன் நான்.
இல்லை.. நான் தீவிரமாகத்தான் அவரை நம்புகிறேன் என்பார்கள் பலரும்.
அப்படியானால், எதற்காக இன்னும் உங்களது துன்பங்கள் தீரவில்லை என நினைக்கிறீர்கள்? என்ன செய்யலாம்? என எதற்காகக் கேட்கிறீர்கள்? எப்படி வணங்குவது எனக் குழம்புவது ஏன்? என இப்படி கேட்பேன்.

                                                                                                             மேலும் தொடர

பாபா கைவிட மாட்டார்!

சாயிதரிசனம்வாசகர்களுக்குஎன்பெயரைச் சொன்னால்தெரியாது. என்மாமனார்பெயர் தற்போதுசாயிதரிசனம்இதழில்இடம்பெற்று வருகிறது. அதனால்அவரைஎல்லோருக்கும் தெரியும். அவர்பெயர்சி. சண்முகம். பாபாவின் அனுக்கத்தொண்டர்அவர்.
நாங்கள்குடும்பமாகபாபாவைவணங்கி வருகிறோம். எங்களுக்குநிறையஅற்புதங்கள் செய்து, இழந்துபோனவாழ்க்கையைமீட்டுத்தந்துவாழ்க்கையில்உயரத்திற்குக்கொண்டு சென்றவர்பாபா. அதற்காகஅவருக்குமுதலில் எனது நன்றிகள்.
என்வாழ்க்கையில்வந்ததுமுதல்அரியபெரிய செயல்களையெல்லாம்எனக்காகச்செய்துதந்தவர் என்பாபா. அவற்றுள்மிகசமீபத்தில்நடந்த நிகழ்ச்சிஒன்று.
                                                                                           மேலும் தொடர

Sunday, April 27, 2014

சாயி மந்திரம்

சாயி பக்தர்களாகிய நம்மைப் பொறுத்தவரை  தடை என்பதே நமக்குக் கிடையாது.  நாம் யாரை வணங்குகிறோம், அவருடைய சக்தி என்ன?  யார் நமக்குப் பின்னால் இருந்து உதவுவது என்பதையெல்லாம் நாம் தெளிவாக அறிந்திருக்கும் போது நாம்  எதற்காக வீணாக  பயப்பட வேண்டும்?

                                                                                                      மேலும் தொடர

செயலாற்றுபவன் துடிப்பு உள்ளவனாக இருக்கவேண்டும்!


நீ தண்டால் எடுக்க ஆரம்பி. (கடுமையானப் பயிற்சி) பாலைப்பற்றிய கவலை (பலன் பற்றிய கவலை) உனக்கு வேண்டா. ஏனெனில், உனக்குப் பின்னாலேயே நான் தயாராக ஒரு வட்டிலில் பாலை வைத்துக் கொண்டு நிற்கிறேன்.

                                                                                            மேலும் தொடர

Monday, April 21, 2014

ஓர் அறிவிப்பு

அன்பார்ந்த சாயி அன்பர்களே,

உங்களுக்கு ஒரு அறிவிப்பு

உங்கள் சாயி தரிசனம் (http://srisaidharisanam.blogspot.in/) கடந்த 19-04-2014 முதல் http://srisaidharisanam.com/  என்ற பெயரில் இயங்கத் துவங்கியுள்ளது. என்றும் போல் தங்கள் ஆதரவினை வேண்டுகிறேன்.

தொடர்ந்து சாயியின் அருளுரைகள், அன்பர்களின் அனுபவங்கள் வெளிவரும்.

அன்புடன்

சாயி வரதராஜன்

Friday, April 4, 2014

வணங்குகிறேன் பாபா!







 மனோஹரமான பேச்சை உடையவரும் உலகம் காணாத 

உபதேசமுறைகளைக் கையாள்பவரும் தினந்தினம் புதுப்புது அற்புத 

லீலைகளைப் புரிபவருமான பாபாவின் பாதங்களில் என் நெற்றியை 

வைத்து வணங்குகிறேன். 



தெய்வ அநுக்கிரஹம் இல்லாமல் எவருக்கும் ஸாதுக்களையும் 

ஞானிகளையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காது. அவ்வாறான ஒரு 

மஹாபுருஷர் அருகிலேயே வந்தாலும் பாவிகளின் கண்களுக்கு அவர் 

தெரியாமற்போய்விடுவார். 





ஜெய் சாய்ராம்!

கோவை காரமடையில் சீரடி சாயி தியானமையம்



ஜெய் சாய்ராம்!
    கோயம்புத்தூர், காரமடை, சிக்கராம்பாளையம், ராம்நகரில் 60க்கு 40 காலி இடத்தில்,  சீரடி சாயி பக்தரான இந்த இடத்தின் உரிமையாளர்  சீரடி சாயிபாபா தியானமையம் ஒன்றினை அமைக்க ஆர்வமுடன் உள்ளார். 

காரமடை, சிக்கராம்பாளையம் மற்றும் ராம்நகரில் உள்ள சாயிபக்தர்கள் தங்களது ஆலோசனைகளை கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவித்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சாயியின் அருளால் இப்பணி விரைவில் துவங்கிடவும், தியான மையம் சிறப்பான முறையில் நடந்திடவும் , இங்கு வேறு என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும்  சீரடி சாயி பக்தர்களின் அன்பு ஆலோசனைகளை வரவேற்கிறோம்

அலைபேசி எண்கள்
9708609152 மற்றும் 7200073415


குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...