அப்பா தனது இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்தார். ஒருவன் பள்ளிக்கு ஒழுங்காகச்சென்று படித்தான். மற்றவன் விளையாட்டாகப் பொழுது போக்கி நாளடைவில் பள்ளிக்குப்போவதையே நிறுத்திவிட்டான்.
பள்ளி செல்வதை நிறுத்தி தந்தையின் பேச்சைக் கேட்காமல் தன் விருப்பத்திற்கு நடந்தான். படிக்கிற மகனோ, தந்தையின் சொல்லை மதித்துவந்தான்.
அப்பா, படிக்கிற மகனை சின்னச் சின்ன தவறுகளுக்காகவும் அடிப்பதும், திட்டுவதுமாக இருந்தார். கட்டுப்பாடுகளை நிறைய விதித்தார். அடிக்கடி நிந்தித்தார். பள்ளியிலும் கெடுபிடிகள் அதிகம். பாடச் சுமை வேறு. இந்நிலையில் அப்பாவின் செயல்களும் இவனை நெருக்க, இந்த நிந்தனையை சகிக்க முடியவில்லை. ஒரு நாள் அப்பாவை எதிர்த்துக் கேள்வி கேட்டு விடுவது எனத் தீர்மானித்தான்.
No comments:
Post a Comment