Tuesday, April 29, 2014

அட்சய திரிதியின் ஜோதிட ரகசியங்கள்.

அட்சய திரிதியை என்கின்ற நாள்  நம்  அனைவருக்கும் ஒரு   பெரிய வர பிரசாதமான நாள் . நம் தமிழகத்தில் உள்ள மக்கள்  இந்த நாளை வெறும் தங்கம் வாங்கும் நாளாக மட்டுமே பயன்படுக்கின்றனர்.இந்த நாளின் உள்ளர்த்த ரகசியங்கள் நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது.    
     பாற்கடலில் பள்ளிகொண்டு இருக்கும் பரமாத்மாவின் ஆறாவது அவதாரமான பரசுராமன் அவதாரம் எடுத்த நாள். மேலும் இதே நாளில் தான் விநாயகரின் துணை கொண்டு வியாசர் மகரிஷி மகாபாரத்தை தொகுக்க ஆரம்பித்தார் .
     சிவபெருமானின் ஜடாமுடியில் கட்டுண்ட கங்கை மாதா பகிரதனின் பெரும்  முயச்சியால் நம் பாவங்களை போக்க பூமியில் குதித்த நாள் இந்த நாளே .
     சதுர்யுகங்களில் கிருதாயுகம் முடிந்து 1296000 ஆண்டுகள் கொண்ட  திரேதாயுகம் ஆரமபித்த நாளாக இதை கருதுகிறார்கள் .                           கிருஷ்ணபரமாத்மாவின் பால்யநண்பன் சுதாமா என்கின்ற குசேலன் 27 பிள்ளைகளை பெற்று வறுமையில் வாடிய பின் தன் மனைவியின் தூண்டுதலின் பேரில் வறுமையை துடைக்க அரிசியில் செய்த அவலுடன் கிருஷ்ணரை சந்தித்த நாள் இந்த அட்சய திரிதியை நாளே. அதாவது குசேலன் கோட்டிஸ்வரன் ஆனநாள்.
     ஆதிசங்கரர், ஒரு ஏழையின் வறுமை நீங்க கனகதாரா ஸ்தோத்திரம் பாடி கூரையை பெயர்த்துக் கொண்டு தங்ககாசுகள் கொட்டிய நாள் இந்த இனிய நாளே.
                                                                                                            மேலும் தொடர

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...