Wednesday, November 30, 2016

சொந்தமாக உனக்கு ஒரு வீடு

"நீ உனக்கு ஒரு வீடு சொந்தமாகக் கட்டிக்கொள்ளவேண்டும். நீ கட்டுவதற்கு முயற்சி செய், நான் முடித்து வைக்கிறேன்".
பாபா தனது பக்தரான புரந்தரேயிடம்தான் இப்படிக் கூறினார். ஆனால் புரந்தரேவிற்கு ஒன்றும் புரியவில்லை. காரணம், மாதம் 35 ரூபாய் சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவதற்க்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் போது, வீடு எங்கிருந்து கட்டுவது?. ஆனால் பாபா, "பாவ், நீ வீட்டு மனை ஒன்று வாங்கி, அதில் பங்களா கட்டு" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். என்ன செய்வது? புரந்தரே பேசாமலிருந்தார். சில தினங்களில் பாபா பொறுமையிழந்து புரந்தரேயைக் கோபித்துக் கொண்டார்.
பாபா பின்னர் மற்றொரு பக்தரை (படே பாபா ) அழைத்து, "அவன் (புரந்தரே) என்னை மனிதன் என்று எண்ணுகிறானா அல்லது மிருகம் என்று எண்ணுகிறானா? ஏன் என் வார்த்தைகளைப் பொருட்படுத்தாது இருக்கிறான்”. 
மற்ற நெருங்கிய பக்தர்களிடமும் பாபா இதே புகார் செய்தார். புரந்தரேயிடம் இருந்து விஷயத்தை அறிந்த பக்தரான சாந்தோர்க்கர், பாபாவின் பாதங்களைப் பணிந்து, "பாபா! வீடு கட்டுவது அவன் சக்திக்கு மீறியது. தாங்கள் விரும்பினால் அவனுக்கு நாங்கள் ஒரு வீடு கட்டிக் கொடுத்து விடுகிறோம் என்று பகன்றார். கோபம் கொண்ட பாபா, "அவன் வீடு கட்ட ஒருவருடைய பணமும் தேவையில்லை. என்னுடைய சர்க்காரில் அவனுடைய பங்கு ஏராளமாக இருக்கிறது. நானே அவனை வீடு கட்ட வைப்பேன்!"
யோசித்துப் பார்த்த புரந்தரே முதலில் ஒரு மனையாவது வாங்கலாமென எண்ணினார். பாபாவின் அருளால் அவருக்கு வட்டியும் இல்லாமல், எந்தவிதமான கடன் பத்திரமும் இல்லாமல் நிலம் வாங்க பணம் கிடைத்தது.. நிலத்தை வாங்கியாகி விட்டது. ஆனால் வீட்டைக் கட்டப் பணம்? பாபாவிடம் சென்ற போது பாபா அவரிடம் எரிந்து விழுந்தார். பார்ப்பவர்களுக்கு பாபா காரணமின்றி அவரிடம் கோபித்துக் கொள்வதாகத் தோன்றியது.
பின்னர் புரந்தரேக்கு கடுமையான தலைவலி உண்டாயிற்று. சகிக்க முடியாத அவர் படும் வேதனையைக் கண்ட மற்றொரு பக்தர், பாபாவிடம் தலைவலியை போக்கியருள வேண்டுமென்று கேட்டுக்கொள்ள அவர், "அவன் நான் சொல்வதைக் கேட்க மாட்டேனென்கிறானே!" என்றார்.
வீட்டை கட்டியதும் தலைவலி நீங்கும் என்பதை உணர்ந்த புரந்தரே சீரடியை விட்டு ஊருக்கு திரும்பினார். தமது காரியாலயத்தில் கடன் பெற்று வீட்டை கட்டி முடித்தார். சொந்த வீட்டிற்கு குடிபுகுந்த தினமே
அவரைவிட்டு அவருடைய தீராத நோயும் தலைவலியும் அகன்றது! தன்னுடைய சுயமுயற்சியாலேயே தம் பக்தன் வீடு கட்டிக்கொள்ள வேண்டுமென்பது பாபாவின் நோக்கம். அதை நிறைவேற்ற என்னவெல்லாம் செய்துவிட்டார்.
ஓம் சாயிராம்

முதலில் என்னை நினை!




மனமும், புத்தியும், புலன் உறுப்புகளும் உலக இன்பங்களை துய்க்க ஈர்க்கப்படும்போது முதலில் என்னை நினை. பிறகு அவற்றை அம்சம் அம்சமாக எனக்கு சமர்ப்பணம் செய்வாயாக. இவ்வுலகம் அழியும் வரை புலன்கள் அவற்றுக்கு உரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும். இதைத் தடுக்க இயலாது. ஆனால், அந்நாட்டங்களை குருவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும். 
                                                    
                                                     ஶ்ரீ சாயி தரிசனம்.

Saturday, November 26, 2016

எளிமையான விளக்கம்





சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தால் இரண்டு விதமான பாவங்கள் நிவர்த்தியாகும்.  கோவிலுக்குச்  செல்லும் அனைவருக்கும் எந்த கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படுகிறது. அந்த குழப்பத்திற்கு எளிமையான விளக்கம்....
விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும்.
ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும்,
அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,
மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்,
நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்.
சூரியனை 2 முறை வலம் வர வேண்டும்,
தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,
கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
கோயிலுக்குள் வலம் வரும்போது, ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டுமே வணங்க வேண்டும்.
கீழே விழுந்து வணங்குவது கூடாது. கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.
கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
சிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இருவித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது. முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Saturday, November 19, 2016

ஓம் சாய்ராம்

பாபா ஒரு படம் மூலமாகவோ, விக்ரஹ வடிவிலோ நம்மிடம் வருகிறார் என்றால், தான் வருகிற இடத்தை வளப்படுத்தப்போகிறார், அந்த இடங்களில் இருக்கிற அனைத்து இடையூறுகளையும், பிரச்சனைகளையும் களையப்போகிறார் என்பது பொருள். "சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது சாயி-யை நேரடியாக தரிசனம் செய்வதற்கு சமம். ஆனால் எண்ணம் என்னவோ பூரணமாக இருக்கவேண்டும். "
--ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Friday, November 18, 2016

ஓம்சாய்ராம்

நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் என்னுடைய நோக்கம் வேகமாக முடியும். சந்தேகமே இல்லாமல் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். என் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தையைக் காப்பாற்றுவதற்க்காக என்னுடைய உயிரையும் கொடுப்பேன்.
--
ஷிர்டி சாய்பாபா

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...