நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D

கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்:

மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Wednesday, November 30, 2016

சொந்தமாக உனக்கு ஒரு வீடு

"நீ உனக்கு ஒரு வீடு சொந்தமாகக் கட்டிக்கொள்ளவேண்டும். நீ கட்டுவதற்கு முயற்சி செய், நான் முடித்து வைக்கிறேன்".
பாபா தனது பக்தரான புரந்தரேயிடம்தான் இப்படிக் கூறினார். ஆனால் புரந்தரேவிற்கு ஒன்றும் புரியவில்லை. காரணம், மாதம் 35 ரூபாய் சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவதற்க்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் போது, வீடு எங்கிருந்து கட்டுவது?. ஆனால் பாபா, "பாவ், நீ வீட்டு மனை ஒன்று வாங்கி, அதில் பங்களா கட்டு" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். என்ன செய்வது? புரந்தரே பேசாமலிருந்தார். சில தினங்களில் பாபா பொறுமையிழந்து புரந்தரேயைக் கோபித்துக் கொண்டார்.
பாபா பின்னர் மற்றொரு பக்தரை (படே பாபா ) அழைத்து, "அவன் (புரந்தரே) என்னை மனிதன் என்று எண்ணுகிறானா அல்லது மிருகம் என்று எண்ணுகிறானா? ஏன் என் வார்த்தைகளைப் பொருட்படுத்தாது இருக்கிறான்”. 
மற்ற நெருங்கிய பக்தர்களிடமும் பாபா இதே புகார் செய்தார். புரந்தரேயிடம் இருந்து விஷயத்தை அறிந்த பக்தரான சாந்தோர்க்கர், பாபாவின் பாதங்களைப் பணிந்து, "பாபா! வீடு கட்டுவது அவன் சக்திக்கு மீறியது. தாங்கள் விரும்பினால் அவனுக்கு நாங்கள் ஒரு வீடு கட்டிக் கொடுத்து விடுகிறோம் என்று பகன்றார். கோபம் கொண்ட பாபா, "அவன் வீடு கட்ட ஒருவருடைய பணமும் தேவையில்லை. என்னுடைய சர்க்காரில் அவனுடைய பங்கு ஏராளமாக இருக்கிறது. நானே அவனை வீடு கட்ட வைப்பேன்!"
யோசித்துப் பார்த்த புரந்தரே முதலில் ஒரு மனையாவது வாங்கலாமென எண்ணினார். பாபாவின் அருளால் அவருக்கு வட்டியும் இல்லாமல், எந்தவிதமான கடன் பத்திரமும் இல்லாமல் நிலம் வாங்க பணம் கிடைத்தது.. நிலத்தை வாங்கியாகி விட்டது. ஆனால் வீட்டைக் கட்டப் பணம்? பாபாவிடம் சென்ற போது பாபா அவரிடம் எரிந்து விழுந்தார். பார்ப்பவர்களுக்கு பாபா காரணமின்றி அவரிடம் கோபித்துக் கொள்வதாகத் தோன்றியது.
பின்னர் புரந்தரேக்கு கடுமையான தலைவலி உண்டாயிற்று. சகிக்க முடியாத அவர் படும் வேதனையைக் கண்ட மற்றொரு பக்தர், பாபாவிடம் தலைவலியை போக்கியருள வேண்டுமென்று கேட்டுக்கொள்ள அவர், "அவன் நான் சொல்வதைக் கேட்க மாட்டேனென்கிறானே!" என்றார்.
வீட்டை கட்டியதும் தலைவலி நீங்கும் என்பதை உணர்ந்த புரந்தரே சீரடியை விட்டு ஊருக்கு திரும்பினார். தமது காரியாலயத்தில் கடன் பெற்று வீட்டை கட்டி முடித்தார். சொந்த வீட்டிற்கு குடிபுகுந்த தினமே
அவரைவிட்டு அவருடைய தீராத நோயும் தலைவலியும் அகன்றது! தன்னுடைய சுயமுயற்சியாலேயே தம் பக்தன் வீடு கட்டிக்கொள்ள வேண்டுமென்பது பாபாவின் நோக்கம். அதை நிறைவேற்ற என்னவெல்லாம் செய்துவிட்டார்.
ஓம் சாயிராம்

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்