அன்புக் குழந்தையே!
நீ என்னை அறியும் முன்பாகவே உன்னை அறிந்திருந்தேன்.உன்னை பற்றிய விபரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும் . நான் பூர்வத்திற்கும் முந்தியவன்.
மனதைத் தேற்றிக்கொள், கர்மத்தின் தீவிரம் உன்னை பாடாய்ப்படுத்துகிறது. இனி அது நடக்காது , நடக்கவும் விடமாட்டேன். உனது துன்பம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளை கட்டி, பூர்வ காலம் முதல் நிர்மூலமான அனைத்தையும் மீண்டும் எடுத்துத் தந்து தலைமுறை தலைமுறையாக பாழாகிப் போனவைகளை மீண்டும் புதுப்பிப்பேன். இனி உனக்கு நிரந்தரமான வெளிச்சமாக இருப்பேன். நீ சந்தோஷமாக இரு. துக்கத்தை விடு. எத்தனை வந்தாலும் ஒரு நாள் முடியபோகிறது என்ற உண்மையை உணர்ந்துகொள். இப்போது நடக்கும் நிகழ்வுகள் நின்றுபோகுமா ? நாளையும் தொடருமா ? என்று ஏன் குழம்புகிறாய். நடந்ததும் நடப்பதுவும் நடக்கப்போவதும் ஆகிய எதுவும் உன் கைகளில் இல்லை. உன்னால் நடந்ததுமில்லை .எதற்குமே பொறுப்பாளியாக இல்லாமல் வெறும் சாட்சியாக உள்ள நீ ஏன் குழம்பிக்கொண்டிருக்கிறாய்? எங்கு தீர்வு கிடைக்கும் என்று தீர்வுகளை தேடிக்கொண்டு ஓடுவதேன்? உனக்குள்ளேயே என்னை வைத்துக்கொண்டு என்னைத் தேடி ஊர் ஊராக ஓடுவதும் என் பெயரை மறந்து மற்றவற்றை உச்சரிப்பதும் ஏன்? என்னை நினைப்போருக்கு தலைமுறை தலைமுறையாக நான் துணை நிற்பேன். நீ என் பிள்ளை என் தாசன் நான் திரிந்துகொண்டவன்.என்னால் தேர்வு செய்யப்பட்டவன். உன்னை நான் எப்படி கைவிடமுடியும்? இதை யோசித்து பார்........................சாயியின் குரல்
No comments:
Post a Comment