Wednesday, July 1, 2015

நில்! கவனி! செல்!



 “சீரடியில் காலை வைத்த சிந்தனையாளர்கள் கவலைப்படுவதில்லை” என்று பாபா அடிக்கடி சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  மற்ற கோயில்களுக்கும் சீரடியில் அமைந்துள்ள சமாதி மந்திர் என்ற கோயிலுக்கும் வித்தியாசம் உள்ளது. இங்கே சுற்றிப் பார்த்தீர்கள் என்றால் அனைத்தும் வாழ்ந்து உடலைத் துறந்தவர்களின் சமாதிகளே அமைந்துள்ளன. அதாவது புதைக்கும் இடம் என்று இதனைக் கொள்ளலாம்.
கவலைகள், கஷ்ட நஷ்டங்கள், சங்கடங்கள், பிரச்சினைகள் என எதை அனுபவித்து வந்தாலும் அவற்றை இத்தலத்திலேயே புதைத்துவிட வேண்டும்.. என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
துவாரகாமாயியில் கால் வைத்ததும் உங்கள்அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு வந்துவிடும் என பாபா உறுதியாகக் கூறியிருக்கிறார். நீங்கள் சீரடியில் அனைத்தையும் புதைத்து விட்டு, ஆனந்த மயமான துவாரகாமாயியில் கால் வைத்து பாபாவை சேவித்துச்செல்லுங்கள், அதன் பின் நிச்சயம் நன்மை மட்டுமே நடப்பதை அனுபவமாக அறிவீர்கள்.

சீரடியில் புனிதத் தலங்களை தரிசனம் செய்ய என்னுடன் வருவோர் தங்களுடைய காலணிகளை அறையிலேயே விட்டுவிட்டுவாருங்கள் என, 2014 நவம்பர் மாதம் தன்னுடன் வந்த பக்தர்களிடம் கூறியிருந்தார் சாயி வரதராஜன். பக்தர்கள் அனைவரும் அவ்வாறே வந்தார்கள்.
ஆனால் சாயி வரதராஜன் மட்டும் காலணிகளுடன் வந்தார். இதை கவனித்த ஒரு பக்தர், ”ஐயா, எங்களை செருப்புகளை அணியவேண்டாம் என்று கூறிய தாங்கள் அதை அணிந்து வந்திருக்கிறீர்களே, இதுதான் வழிகாட்டும் முறையா? என்று கேட்டார்.
லட்சுமி கோயில் பற்றி சாயி பக்தர்களுக்குக் கூறியதுடன், தான் செருப்பு அணிந்து வந்ததன் காரணத்தையும் அங்கே சாயி வரதராஜன் கூறினார்.
“இந்த மண் புனிதமானது. நீங்கள் அனைவரும் புண்ணியத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே செருப்பில்லாமல் இந்த மண்ணில் நடக்குமாறு கூறினேன். ஆனால் நான் செருப்பு அணிந்து நடப்பது, இந்த செருப்புகள் புண்ணியத்தை சம்பாதிக்கட்டும் என்பதற்காக.  ஏனெனில், சென்னை குரோம்பேட்டையில் பாபாவின் உயர்ந்த பக்தையான ரமா அம்மையார் வசிக்கிறார். அவர் சீரடிக்கு வந்ததில்லை. நமதுபெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் வந்தால்,  அவர் எனது பாதுகைகளைத் தான் தேடிச் சென்று வணங்குவார். அவரது வணக்கத்திற்கு உரிய புண்ணியத்தை இந்த பாதுகைகள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும், அதன் மூலம் வரும் அனைத்துப் பலன்களும் அவருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவுமே நான் இங்கே செருப்பு அணிந்து நடக்கிறேன்!” என்றார்.  அனைவருக்கும் ஒரே நெகிழ்ச்சி-

திருப்பத்தூரிலிருந்து அனந்தராமன் என்ற சாயி பக்தர் போனில் பேசும்போது, ”ஐயா, உங்களிடம் ஒரு விக்ஷயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் எங்களவர்களைப் போலவே அதாவது பிராமணர்களைப் போலவே சாஸ்திரங்களை எளிமைப்படுத்தி மக்களுக்குத் தருகிறீர்கள். உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்!” என்றார்.
இதுபற்றி எங்களோடு பேசும்போது, பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்றார்கள். பிறவியில் எந்த தோக்ஷமும் இல்லை. எந்த இதயத்தில் இறைவன் வசிக்கிறானோ அந்த இதயத்திற்கு எதுவும் மறைபொருளாக இருப்பதில்லை. இறைவனுக்கு கதம்பப் பூக்களால் மாலை சூட்டினால் பார்க்க அழகாக இருக்கும். அதைப் போலவே இறைவன் மேல் பக்தி செய்து சத்விக்ஷயங்களை பல இனத்தாரும் போதிப்பதே சிறப்பு. hதியினால் ஒருவன் பிராமணன் ஆவதில்லை. பிரம்மத்தை அறிவதால் பிராமணன் ஆகிறான்.
நான் பிரம்மத்தை அறிந்திருக்கிறேன். ஆகவே அதைப் பற்றி எளிமையாகக் கூறுகிறேன். அனந்தராமன் எங்களவர் போல என்று கூறினார். உண்மையில் அவர்கள் என்னுடையவர்கள். இதற்காக நான்தான் அவர்களுக்கு நன்றி கூறி, நன்றிக்கடன் பட்டிருக்கவேண்டும். நான் பிராமணர்களால்தான் அறியப்படுவேன் என்று பாபாவே கூறியிருக்கிறார் என்றார்  ஸ்ரீசாயி.

”உங்களைத் தேடி வருவோர் சிலரை மட்டும் உங்கள் பாதங்களைத் தொட அனுமதிக்கிறீர். சிலரை அவ்வாறு அனுமதிப்பது இல்லையே அது ஏன்?” எனக் கேட்டபோது,  ஸ்ரீ சாயி இப்படிச் சொன்னார்.
”எனது மகன் சிறுவனாக இருந்தபோது அவனை நான் தூக்கிக்கொண்டு நடந்தேன். அவன் வளர்ந்த பிறகு தானாக நடக்கிறான். அப்படித்தான் பக்தியில் வளராதவர்கள் வரும்போது, அவர்கள் சுமையை நான் சுமப்பதற்காக என்னுடைய பாத நமஸ்காரத்தை அனுமதிக்கிறேன், அவர்கள் வளர்ந்த பிறகு அதற்கு அவசியமில்லாமல் போகிறது. அதற்காகவே அவர்களைத் தவிர்க்கிறேன் என்றார்.

உங்களை நீங்கள் மிகைப்படுத்திக்கொள்வதாக பிறர் சொல்கிறார்களே, இது பற்றி கவலைப் படுவது இல்லையா? எனக் கேட்டோம்.
”சத்சரித்திரத்தை ஒழுங்காகப் படிப்பவன் பாபாவுடன் ஒன்றியவனாக இருப்பான். அப்படி ஒன்றியவன் தான் வேறு அவர் வேறு என்று ஒரு போதும் எண்ணமாட்டான்.
ஒருவன் குருவோடு ஒன்றி நானும் அவரும் வேறு அல்லர் என்பதை உணரவேண்டும். யார் ஒருவன் தன்னை இப்படி உணர்கிறானோ அவன் தன்னைக் கடவுளிடமிருந்து வேறுபடுத்தி அறிவதும் இல்லை. தன்னில் அவர் இருப்பதைப் போல, தானும் அவரில் இருப்பதை அறிகிறான். தன்னில் இருப்பது தானே என்பதையும் அறிகிறான். இதைத்தான் உபநிக்ஷத்துக்கள் போதிக்கின்றன.
இயேசுகூட தானும் கடவுளும் வேறு வேறு அல்லர். ”நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று கூறினார். யோவான் 10 - 30.
அந்த அத்தியாயம் முழுவதும் தான் யார் என்பதை அவர் வெளிப்படுத்திக் கூறுகிறார். அவரும் நம்மைப் போல சாதாரண குடும்பத்தில் பிறந்து ஞானம் பெற்றவர்தான். இந்த வெளிப்படுத்தலை அவர் வெளியே கூறியபோது அவரை கொலை செய்யமுயன்றார்கள். சிலுவையில் அறைந்தார்கள்.
கிறித்தவர்கள் இப்போதுகூட இயேசு மட்டுமே கடவுளாக இருப்பதாக நம்புகிறார்கள். அதே யோவான் எழுதிய புத்தகம் எப்படி ஆரம்பிக்கிறது என்றால், ”ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடு இருந்தார். சகலமும் அவர்  மூலமாய் உண்டாயிற்று....அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாக இருந்தது. உலகத்திலே வந்து எந்த மனிதரையும் பிரகாசிக்கச் செய்கிற அந்த ஒளியே மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை” என்று ஆரம்பிக்கிறது.
அறியாமை உள்ளவர்கள் இது இயேசுவைப்பற்றியது என நம்புகிறார்கள். உண்மையில்இது நம் அனைவர் பற்றிய விக்ஷயமாகும். நாமே அந்த ஒளி. நாமே ஆதியில் இருந்த ஓங்காரமென்கிற வார்த்தை. நாமே தேவனிடத்திலிருந்தோம், தேவனாக இருந்தோம். இதை உணர்ந்துகொள்வதுதான் ஞானம். நான் உணர்ந்திருக்கிறேன்.  நான் தவறாகக் கூறுகிறேன் என யாரேனும் கூறினால், அவர்கள் நமது உபநிக்ஷத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள்.
தன்னை மேலானவன் என நினைக்கிறவன் அதற்கான தகுதியைப் பெறவேண்டும். தகுதியைப்பெறவில்லை என்பதால், நான் இறைவன் என்கிற ஆசனத்தில் அமராமல் அடக்கமாக இருக்கிறேன்.
முக்தா ராம் என்ற சாயி பக்தர் ஒருவர் இருந்தார். அவர் தன்னை சாயியின் வாரிசு எனக் கூறிக்கொண்டு அவரது ஆசனத்தில் அமர்ந்தார். வாந்தி பேதி ஏற்பட்டு இறந்துபோனார். அவரது சமாதி, சீரடியில் சன்ஸ்தான் புத்தகக்கடை உள்ள இடத்திற்கு எதிரில் உள்ளது. அதே சமயம், தன்னை இறைவனாக உணர்ந்த பாபா இறைவனாக அதே இடத்தில் மக்களின் வணக்கத்திற்கு உரியவராக இருக்கிறார்..
பாபா மாதிரி உடை போட்டால் பாபாவாகி விடமுடியாது. உள்ளத்தில் அவரைப் போல மாறவேண்டும். எனது இந்த வெளிப்படுத்துதலைப் பற்றி நான் கவலைப்படக் கூடாது, மற்றவர்கள் கவலைப்படுவது பொறாமையாலோ, அறியாமையாலோ இருக்கலாம். எனது இந்த வெளிச்சம், சாக்ரடீஸ் கூறிய நான் யார்? என்ற தேடலின் முடிவாகும்..  என்றார்  ஸ்ரீ சாயி வரதராஜன்

சாயி வீரமணி

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...