பிரார்த்தனையின்
சக்தி பற்றிக் கூறுங்கள் - கே
காந்திமதி, கோவை
இறைவனிடம்
தன்னை ஒப்புவித்துக் கொள்வதுதான் உண்மையான பிரார்த்தனை. நம்பிக்கை என்பது ஒரு உண்மையான சக்தியை,
அதனுடைய கருணையை அறிந்து கொள்வதாகும்.
உன்னத சக்தி என்பது ஒரு பக்தனைப் பொறுத்தவரை மிகவும் அந்தரங்கமான
சமாச்சாரம்.
அவன்
எத்தனைக்கு எத்தனை நம்பிக்கை வைக்கிறானோ, அத்தனைக்கு அத்தனை அதில் ஆர்வமுடையவனாகிறான்.
அவனுடைய சரணாகதி முழுமையடைகிறது. பக்தனின் அகந்தை முற்றாக நீங்குகிறது. எல்லாம் அவன் சித்தம் என்று சொல்ல ஆரம்பித்து
விடுகிறது.
இப்படித்
தன்னை ஒப்புவித்துக்கொள்கிற நிலையில் விண்ணப்பம் கிடையாது. பேரம் கிடையாது. அது சுயநலத்தை ஒரேயடியாக அழித்துப் போடுகிற
காரியமாகும்.
பிரார்த்தனை
என்பது விருப்பங்கள் பற்றிய சிந்தனை அல்ல.
அது நமக்குள் மறைந்து கிடக்கும் சக்தியை மேலே கொண்டு வருவதும், அதன் மூலம்
நமக்கு வலிமையளிப்பதும் ஆகும். அந்த வலிமை
நமது சோம்பலைப் போக்கும். தடைகளை
அகற்றும். ஆன்மீகப் பாதையில் தென்படும் அத்தனை எதிர்ப்புச் சக்திகளையும்
ஓசைப்படாமல் வென்று விடும். இதுவே
பிரார்த்தனையின் சக்தி
தேவநாதன்
என்ற எழுத்தாளர் எழுதிய புத்தகத்தில் இருந்து
சாயி
புத்ரன் பதில்கள்
சாயிதரிசனம்
இதழிலிருந்து
No comments:
Post a Comment