Sunday, May 28, 2017

பாபாவின் உறுதிமொழிகள்!


• என் வழியில் நீ வந்தால், உனக்கு எல்லா வழியையும் திறந்து விடுவேன்

• எனக்காக நீ சிறிது நேரத்தை ஒதுக்கினால், உனக்கு குபேரனுடைய பொக்கிஷத்தைப்போன்றதை தருவேன்

• என்னால் நீ பழிச்சொல்லை ஏற்றால், உனக்கு பூரண அருள் கிடைக்கும்

• நீ என்னிடம் வந்தால், உன்னை நான் பாதுகாப்பேன்

• என்னைப் பற்றி நீ மற்றவர்களிடம் கூறிக்கொண்டே இருந்தால், உன்னை விலை மதிப்பற்றவனாக்கிவிடுவேன்

• நீ என்னைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால், உன்னை ரத்னம் போன்று ஜொலிக்கும் ஆன்மீக ஞானம் உள்ளவனாக மாற்றுவேன்

• என் உதவியை நாடி வந்து என்னையே ஏற்றால், உன்னை அடிமைத்தனத்தில்
இருந்து மீட்பேன்

• எனக்காக உன்னை எந்த விதத்திலாவது நீ தந்துவிட்டால், உன்னை
விலை மதிப்பற்றவனாக்கி விடுவேன்

• என் வழியில் நீ நடந்தால், நீ பெரும் புகழ் பெறுவாய் .

• என்னைப்பற்றி பாடிக்கொண்டே இருந்தால், இந்த உலகையே நீ மறந்துவிடுவாய் .

• நீ என்னுடையவன் என ஆகிவிட்டால், அனைவரும் உன்னுடயவர்களாகி
விடுவார்கள்

Saturday, May 27, 2017

ஆபத்துகள் பறந்தோடிவிடும் !

அன்பு குழந்தையே !
என் பெயரை இடைவிடாமல் ஜபித்துக் கொண்டு எல்லா விதமான சங்கடங்களையும் தைரியமாக நேருக்கு நேர் சந்தித்தால், எல்லாவிதமான ஆபத்துகளும் பறந்தோடிவிடும். என் நாமத்தின் சக்தி அவ்வளவு மகிமை வாய்ந்தது.
எப்போதெல்லாம் உனக்கு சங்கடங்கள் வருகிறதோ அப்போதெல்லாம் உனக்கு  என் நினைவு வர வேண்டும். ஏனெனில், அப்போது தானே உனது சங்கடங்கள் விலகும். 
உனக்குத் தேவையான புத்தி அனைத்தையும் நான் கொடுத்து உன்னை விடுதலை செய்து காத்து ரட்சிப்பேன். இதை எப்போதும் உனது மனதில் வைத்துக்கொள். 
இன்றைக்கு என்ன உணர்வில் இருக்கிறாயோ, அதே உணர்வில் என்றும் இருக்கப் பழகு. எந்தவித முயற்சியும் இல்லாமல் உன்னை நான் கரை சேர்த்துவிடுகிறேன். 
என்னிடம் திடமான நம்பிக்கை வைத்தாலே போதும், எல்லாம் தானே கிடைக்கும் என்பதில் தளர்வடையா நம்பிக்கைக் கொள்.எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் உனக்கு நன்மை தருவதற்கே ஏற்பட்டது என நம்பு.!

என் அன்பு குழந்தையே!


என் அன்பு குழந்தையே!
ஏன் இப்படி இருக்கிறாய், எதற்கு எடுத்தாலும் புலம்பலும் அழுகையும், ஏன் உன் சாய்அப்பா மீது உனக்கு நம்பிக்கை இல்லையா , உன் எல்லா பிரச்சனையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினேன் ,  பிறகு உன்னை எப்படி நான் கைவிடுவேன். ஏன் இந்த நடுக்கம்.
ஒரு பிரச்சனை என்றால் என்னைத்தான் கூப்பிடுகிறாய். அதே நேரத்தில் இது நன்றாக நடக்குமா, நம் சாய் அப்பா நமக்கு இதை நிறைவேற்றி தருவார்களா என்றும் யோசித்து சந்தேகப்படுகிறாய். இது  ஏன்?
 இவ்வளவு நாள்  உன் எல்லா பிரச்சனைகளுக்கும் உனக்கு தீர்வை நானே கொடுத்தேன்.  இப்போழுது உள்ள பிரச்சனைகட்கும் தீர்வை கொடுக்க மாட்டேனா?  ஏன் இப்படி நீயே உன்னை காயப்படுத்தி கஷ்டபடுத்துகிறாய், முதலில் உன் சாய் அப்பா உனக்கான அனைத்தையும் சரியாக்குவர் என்று உனக்குள் சொல்லி கொள் நிச்சயம் என்னை உயிராய் நினைக்கும் என் பிள்ளையான உன்னை கைவிட மாட்டேன் ,உனக்குள் இப்போது எல்லாம் இழந்ததைப் போன்று ஒரு தோற்றம், போராட சக்தி இல்லாதது போல் வலு இழந்து இருப்பது போன்று உணர்கிறாய், இப்போது உள்ள சூழ்நிலைகள் உனக்குள் இருந்த நம்பிக்கை  என்னும் கண்னை மறைக்கின்றது, நீ தளராதே இதை விட மோசமான சூழ்நிலை வந்த போது கூட நீ அசரவில்லை ,ஆனால் இப்போது உன்னைச் சுற்றி நீ அன்பானவர்கள் என்று நினைக்கும் நபர்கள் உனக்கு யதார்த்தமாக கூறினாலும் அதை ஏன் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்கிறாய், உன் மீது உள்ள உரிமையில் தானே கூறுகிறார்கள் ,அது உன்னை கஷ்டப்படுத்தினாலும் அதை ஏற்றுக் கொள் , அதில் ஏதும் தவறில்லை, விட்டுகொடுத்து போவதில் ஒரு மனநிறைவு கிடைக்கும் அதை நீ கண்டிப்பாக உணர்வாய் , ஏன் சாய்அப்பா நான் இப்படி இருக்கிறேன் என்று என்னிடம் வேண்டுகிறாய், நிச்சயம் உன் சூழ்நிலைகளும் உனக்கான நேரமும் தான் உன்னை இப்படி சிந்திக்க வைக்கிறது , இதில் உன் தவறு இல்லை, நீ வீணாக எல்லாவற்றையும் நினைத்து உன் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே, உனக்கு தேவையான அனைத்தும் விரைவில் உன்னை தேடி வரும் , அப்பா நீங்கள் இப்படித்தான் சொல்கின்றீர்கள் , ஆனால் எதுவும் மாறவில்லையே என்று தானே நினைக்கிறாய், உனக்கான நல்ல நேரம் வரும் என்று நான் நம்பிக்கையாய் கூறுகிறேன் , அது போலவே நீயும் நினை உனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று நிச்சயம் எல்லாம் சுகமாகிவிடும்,
உன்னை எல்லாரும் தனியாக விட்டுவிட்டார்கள் என்று நினைத்து புழம்புகிறாய், யாரும் இவ்வுலகில் தனியாக இல்லை, எல்லாருக்கும் இந்த உலகம் என்பது பொதுவானது, யாரிடமும் அதிகம் எதிர்பார்க்காதே அது உன்னை ஏமாற்றத்தில் தள்ளி இந்த நிலைமையில் தள்ளி இருக்கிறது, உனக்காக யார் இருந்தாலும் இல்லாமல் போனாலும் உன் உயிராய் நீ மரியாதை செலுத்தும் உன் சாய் அப்பா துணை எப்போதும் உனக்கு உண்டு , என் பிள்ளையான நீ என்னை நினைத்த மறு நிமிடமே உன் அருகில் நான் நிற்பேன், உன் தாயாக தந்தையாக நான் எப்போதும் இருப்பேன்.
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Friday, May 26, 2017

சாயி பக்தையின் கேள்வியும் பாபாவின் பதிலும்



என் கணவர் ஓர் ஆண்டுக்கு முன்னால் புற்று நோயினால் இறந்து போனார். அவர் குணமாக வேண்டுமென்று பாபாவிடம் இரவும், பகலும் வேண்டிக் கொண்டோம். ஆனால், பாபா ஏன் எனது பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை?  பாபா மீதான நம்பிக்கையை நான் இழந்துவிட்டதாக உணர்கிறேன்.

பதில் : பாபா தன்  பூதஉடலை விட்டுச் செல்லும்முன், அவரது அடியவர்கள் இவ்வுலகில் மேலும் வாழும்படி அவரைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் தானும் ஒருநாள் இந்த உடலை விட்டுப் போகத்தான் வேண்டுமென்ற உண்மையை பாபா எடுத்துக் கூறினார். உடலுடன் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் உடலை விட்டுப் போகத்தான் வேண்டும். இன்ன முறைப்படி இறப்பு நிகழும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இது 'பிராரப்தம்' (முன் வினை) என்று அழைக்கப்படும். முந்தைய பிறவி கர்ம வினைகளைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் இன்னின்ன காரியங்களை அவன் செய்து முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிறது. இது நிறைவேறியவுடன் அம்மனிதன் உடலை விட்டுப் போக வேண்டியவனாகிறான். ஆத்மாவிற்கு எக்காரியத்திற்க்கும், எந்தவிதத்திலும் உடல் பயன்படாத போது, ஆத்மா அவ்வுடலை விட்டு விலகி அக்காரியங்களை முடிப்பதற்குத் தகுதியான வேறு உடலினுள் புகுகிறது. இந்த இயற்கை நியதி, நல்லவர், கெட்டவர், ஆஸ்திகர், நாஸ்திகர் என எல்லோரிடத்திலும் பாரபட்சமின்றி செயல்படுகிறது. உங்களது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஆனால் பிரிந்துபோன ஆத்மாவுக்கு அமைதிகிட்ட, தொடர்ந்து பாபாவை வேண்டிக்கொள்ளுங்கள். இன்பம், துன்பம் இரண்டிலும் பாபாவை பாருங்கள். எந்த வித எதிர்ப்பார்ப்பும், வேண்டுதலும் இல்லாது பாபாவை நேசியுங்கள். பாபா உங்களுக்கு எல்லா வலிகளையும் தாங்கும் சக்தியை கொடுப்பார்.

உதியே மருந்து!


ஷீரடி நாதனின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார். பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், ”பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று!” என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது உதியைத் தடவினார். கொஞ்சம் உதியை அவரது வாயில் இட்டார். இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாயிநாதன் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது உதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.

Thursday, May 25, 2017

சாயியின் வாழ்க்கை



சாயியின் வாழ்க்கை புனிதமானது.  அவரது அன்றாட நடைமுறையொழுக்கம் புனிதமானது.  அவரின் வழிகளும் செயல்களும் விவரிக்க இயலாதவை.  சில நேரங்களில் அவர் பிரம்மானந்தப் பெருநிலையில் (தெய்வீக ஆனந்த நிலையில்) இருந்தார்.  மற்றும் சில சமயங்களில் ஆத்மஞானத்துடன் அடக்கமாய் இருந்தார்.  ஏராளமான பல செயல்களைச் செய்தாலும் சில சமயங்களில் அவைகளில் தொடர்பேதுமின்றித் தனித்து இருந்தார்.  முற்றிலும் செயலே அற்றவராகச் சில சமயம் தோன்றியபோதும் அவர் சோம்பலாகவோ, தூக்க மயக்கமாகவோ இருக்கவில்லை.

தமது சொந்த ஆன்மாவிலேயே கட்டுண்டு இருந்தார்.  அமைதியான நிசப்தமான அசைவற்ற கடலைப்போல காணப்பட்டாலும் அவர் அளவிட முடியாத ஆழமானவர்.  எவரே அவரின் சொல்லில் அடங்காப் பெருங்குணத்தை விவரிக்க இயலும்?  அவர் ஆண்களை சகோதரர்கள் என்றும், பெண்களை சகோதரியாகவும், தாயார் ஆகவும் கருதினார்.  எல்லோரும் அறிந்துள்ளபடி அவர் பரிபூர்ண தூய நிரந்தர புனித பிரம்மச்சாரியாவார்.  அவர்தம் கூட்டுறவால் நாம் பெரும் ஞானமானது நிரந்தரமாக நம்மிடம் திகழட்டும்.  அவர்தம் பாதங்களுக்கு எப்போதும் முழுமையான பக்தியுடன் சேவை செய்வோம்.  அவரை அனைத்து ஜீவராசிகளிடமும் காண்போம்.  அவர் நாமத்தை எப்போதும் விரும்புவோம்.

                                                                                                    சாயிசத்சரிதம்-அத்.37

Wednesday, May 24, 2017

கிரக பாதிப்புகள் உன்னை ஒன்றும் செய்யாது!

 என்னதான் சாயி பக்தராக இருந்தாலும் எவருக்கும் இப்படிப்பட்ட  சோர்வு ஏற்படுவது இயல்புதான்.  இந்தச் சோதனை நமக்கு ஏற்படுவது போலவே, சமாதி மந்திரைக் கட்டிக் கொடுத்த பூட்டிக்கும் ஏற்பட்டது.

  அவர்  ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு நானா சாகேப் டெங்கலே என்ற ஜோதிட நண்பர் இருந்தார்.  அவர் சொன்ன பல விஷயங்கள் பூட்டியின் வாழ்க்கையில் பலித்தது.  இதனால், டெங்கலேயை பூட்டி மிகவும் மதித்தார்.

   ஒரு முறை பூட்டியை சந்தித்த டெங்கலே, ‘இன்று உங்களுக்கு கெட்ட காலம்!  எதிர்பாராத பேராபத்து வரப்போகிறது!  எச்சரிக்கையாக இருங்கள்’ என்றார்.  இதைக்கேட்டு பூட்டிக்கு பயம் வந்துவிட்டது.  என்ன செய்வதென்றே தெரியாமல் மசூதிக்கு வந்தார்.

     அங்கிருந்த பாபா, ‘அந்த டெங்கலே என்ன சொன்னான்? அவன் என்ன உன்னைக் கொல்ல முயற்சிக்கிறானா?  நீ பயப்படத் தேவையில்லை, அவன் உனக்கு எவ்வாறு துன்பம் செய்யப்போகிறான் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று உறுதியாகக் கூறினார்.

     அன்று முழுக்க பாபாவின் பாதுகாப்பில் இருந்த பூட்டி கழிவறைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய பாம்பு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  அதைக் கொன்றுவிட வேண்டும் என நினைத்து கம்புகளை தேடினார்.  ஒரு பெரிய தடியினை எடுத்துக்கொண்டு வந்து பார்க்கும் போது அந்தப் பாம்பு மாயமாக மறைந்து போயிருந்தது.

     பூட்டியிடம் நானா சொன்ன பேராபத்து இதுதான் என்றும், இதைப் பற்றித்தான் பாபாவும், ‘அவன் என்ன உன்னைக் கொல்ல முயற்சிக்கிறானா?  நீ பயப்படத் தேவையில்லை, அவன் உனக்கு எவ்வாறு துன்பம் செய்யப்போகிறான் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினார் என்பதையும் பூட்டி நன்றாக உணர்ந்து கொண்டார்.

     எத்தகைய கிரக பாதிப்புகள் இருந்தாலும், மரணத்தைத் தருவதாக இருந்தாலும் அவையெல்லாம் நமது சமர்த்த சாயியின் முன்னால் ஒன்றும் இல்லாததாகிவிடும் என்பதற்க்கு இது ஓர் உதாரணம்.


"சாய்யியை பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்".

ஓம் சாய் ராம்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...