அவர் ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு நானா சாகேப் டெங்கலே என்ற ஜோதிட நண்பர் இருந்தார். அவர் சொன்ன பல விஷயங்கள் பூட்டியின் வாழ்க்கையில் பலித்தது. இதனால், டெங்கலேயை பூட்டி மிகவும் மதித்தார்.
ஒரு முறை பூட்டியை சந்தித்த டெங்கலே, ‘இன்று உங்களுக்கு கெட்ட காலம்! எதிர்பாராத பேராபத்து வரப்போகிறது! எச்சரிக்கையாக இருங்கள்’ என்றார். இதைக்கேட்டு பூட்டிக்கு பயம் வந்துவிட்டது. என்ன செய்வதென்றே தெரியாமல் மசூதிக்கு வந்தார்.
அங்கிருந்த பாபா, ‘அந்த டெங்கலே என்ன சொன்னான்? அவன் என்ன உன்னைக் கொல்ல முயற்சிக்கிறானா? நீ பயப்படத் தேவையில்லை, அவன் உனக்கு எவ்வாறு துன்பம் செய்யப்போகிறான் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று உறுதியாகக் கூறினார்.
அன்று முழுக்க பாபாவின் பாதுகாப்பில் இருந்த பூட்டி கழிவறைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய பாம்பு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதைக் கொன்றுவிட வேண்டும் என நினைத்து கம்புகளை தேடினார். ஒரு பெரிய தடியினை எடுத்துக்கொண்டு வந்து பார்க்கும் போது அந்தப் பாம்பு மாயமாக மறைந்து போயிருந்தது.
பூட்டியிடம் நானா சொன்ன பேராபத்து இதுதான் என்றும், இதைப் பற்றித்தான் பாபாவும், ‘அவன் என்ன உன்னைக் கொல்ல முயற்சிக்கிறானா? நீ பயப்படத் தேவையில்லை, அவன் உனக்கு எவ்வாறு துன்பம் செய்யப்போகிறான் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினார் என்பதையும் பூட்டி நன்றாக உணர்ந்து கொண்டார்.
எத்தகைய கிரக பாதிப்புகள் இருந்தாலும், மரணத்தைத் தருவதாக இருந்தாலும் அவையெல்லாம் நமது சமர்த்த சாயியின் முன்னால் ஒன்றும் இல்லாததாகிவிடும் என்பதற்க்கு இது ஓர் உதாரணம்.
"சாய்யியை பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்".
ஓம் சாய் ராம்
No comments:
Post a Comment