Friday, May 26, 2017

சாயி பக்தையின் கேள்வியும் பாபாவின் பதிலும்



என் கணவர் ஓர் ஆண்டுக்கு முன்னால் புற்று நோயினால் இறந்து போனார். அவர் குணமாக வேண்டுமென்று பாபாவிடம் இரவும், பகலும் வேண்டிக் கொண்டோம். ஆனால், பாபா ஏன் எனது பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை?  பாபா மீதான நம்பிக்கையை நான் இழந்துவிட்டதாக உணர்கிறேன்.

பதில் : பாபா தன்  பூதஉடலை விட்டுச் செல்லும்முன், அவரது அடியவர்கள் இவ்வுலகில் மேலும் வாழும்படி அவரைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் தானும் ஒருநாள் இந்த உடலை விட்டுப் போகத்தான் வேண்டுமென்ற உண்மையை பாபா எடுத்துக் கூறினார். உடலுடன் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் உடலை விட்டுப் போகத்தான் வேண்டும். இன்ன முறைப்படி இறப்பு நிகழும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இது 'பிராரப்தம்' (முன் வினை) என்று அழைக்கப்படும். முந்தைய பிறவி கர்ம வினைகளைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் இன்னின்ன காரியங்களை அவன் செய்து முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிறது. இது நிறைவேறியவுடன் அம்மனிதன் உடலை விட்டுப் போக வேண்டியவனாகிறான். ஆத்மாவிற்கு எக்காரியத்திற்க்கும், எந்தவிதத்திலும் உடல் பயன்படாத போது, ஆத்மா அவ்வுடலை விட்டு விலகி அக்காரியங்களை முடிப்பதற்குத் தகுதியான வேறு உடலினுள் புகுகிறது. இந்த இயற்கை நியதி, நல்லவர், கெட்டவர், ஆஸ்திகர், நாஸ்திகர் என எல்லோரிடத்திலும் பாரபட்சமின்றி செயல்படுகிறது. உங்களது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஆனால் பிரிந்துபோன ஆத்மாவுக்கு அமைதிகிட்ட, தொடர்ந்து பாபாவை வேண்டிக்கொள்ளுங்கள். இன்பம், துன்பம் இரண்டிலும் பாபாவை பாருங்கள். எந்த வித எதிர்ப்பார்ப்பும், வேண்டுதலும் இல்லாது பாபாவை நேசியுங்கள். பாபா உங்களுக்கு எல்லா வலிகளையும் தாங்கும் சக்தியை கொடுப்பார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...