Thursday, May 25, 2017

சாயியின் வாழ்க்கை



சாயியின் வாழ்க்கை புனிதமானது.  அவரது அன்றாட நடைமுறையொழுக்கம் புனிதமானது.  அவரின் வழிகளும் செயல்களும் விவரிக்க இயலாதவை.  சில நேரங்களில் அவர் பிரம்மானந்தப் பெருநிலையில் (தெய்வீக ஆனந்த நிலையில்) இருந்தார்.  மற்றும் சில சமயங்களில் ஆத்மஞானத்துடன் அடக்கமாய் இருந்தார்.  ஏராளமான பல செயல்களைச் செய்தாலும் சில சமயங்களில் அவைகளில் தொடர்பேதுமின்றித் தனித்து இருந்தார்.  முற்றிலும் செயலே அற்றவராகச் சில சமயம் தோன்றியபோதும் அவர் சோம்பலாகவோ, தூக்க மயக்கமாகவோ இருக்கவில்லை.

தமது சொந்த ஆன்மாவிலேயே கட்டுண்டு இருந்தார்.  அமைதியான நிசப்தமான அசைவற்ற கடலைப்போல காணப்பட்டாலும் அவர் அளவிட முடியாத ஆழமானவர்.  எவரே அவரின் சொல்லில் அடங்காப் பெருங்குணத்தை விவரிக்க இயலும்?  அவர் ஆண்களை சகோதரர்கள் என்றும், பெண்களை சகோதரியாகவும், தாயார் ஆகவும் கருதினார்.  எல்லோரும் அறிந்துள்ளபடி அவர் பரிபூர்ண தூய நிரந்தர புனித பிரம்மச்சாரியாவார்.  அவர்தம் கூட்டுறவால் நாம் பெரும் ஞானமானது நிரந்தரமாக நம்மிடம் திகழட்டும்.  அவர்தம் பாதங்களுக்கு எப்போதும் முழுமையான பக்தியுடன் சேவை செய்வோம்.  அவரை அனைத்து ஜீவராசிகளிடமும் காண்போம்.  அவர் நாமத்தை எப்போதும் விரும்புவோம்.

                                                                                                    சாயிசத்சரிதம்-அத்.37

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...