Saturday, May 27, 2017

என் அன்பு குழந்தையே!


என் அன்பு குழந்தையே!
ஏன் இப்படி இருக்கிறாய், எதற்கு எடுத்தாலும் புலம்பலும் அழுகையும், ஏன் உன் சாய்அப்பா மீது உனக்கு நம்பிக்கை இல்லையா , உன் எல்லா பிரச்சனையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினேன் ,  பிறகு உன்னை எப்படி நான் கைவிடுவேன். ஏன் இந்த நடுக்கம்.
ஒரு பிரச்சனை என்றால் என்னைத்தான் கூப்பிடுகிறாய். அதே நேரத்தில் இது நன்றாக நடக்குமா, நம் சாய் அப்பா நமக்கு இதை நிறைவேற்றி தருவார்களா என்றும் யோசித்து சந்தேகப்படுகிறாய். இது  ஏன்?
 இவ்வளவு நாள்  உன் எல்லா பிரச்சனைகளுக்கும் உனக்கு தீர்வை நானே கொடுத்தேன்.  இப்போழுது உள்ள பிரச்சனைகட்கும் தீர்வை கொடுக்க மாட்டேனா?  ஏன் இப்படி நீயே உன்னை காயப்படுத்தி கஷ்டபடுத்துகிறாய், முதலில் உன் சாய் அப்பா உனக்கான அனைத்தையும் சரியாக்குவர் என்று உனக்குள் சொல்லி கொள் நிச்சயம் என்னை உயிராய் நினைக்கும் என் பிள்ளையான உன்னை கைவிட மாட்டேன் ,உனக்குள் இப்போது எல்லாம் இழந்ததைப் போன்று ஒரு தோற்றம், போராட சக்தி இல்லாதது போல் வலு இழந்து இருப்பது போன்று உணர்கிறாய், இப்போது உள்ள சூழ்நிலைகள் உனக்குள் இருந்த நம்பிக்கை  என்னும் கண்னை மறைக்கின்றது, நீ தளராதே இதை விட மோசமான சூழ்நிலை வந்த போது கூட நீ அசரவில்லை ,ஆனால் இப்போது உன்னைச் சுற்றி நீ அன்பானவர்கள் என்று நினைக்கும் நபர்கள் உனக்கு யதார்த்தமாக கூறினாலும் அதை ஏன் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்கிறாய், உன் மீது உள்ள உரிமையில் தானே கூறுகிறார்கள் ,அது உன்னை கஷ்டப்படுத்தினாலும் அதை ஏற்றுக் கொள் , அதில் ஏதும் தவறில்லை, விட்டுகொடுத்து போவதில் ஒரு மனநிறைவு கிடைக்கும் அதை நீ கண்டிப்பாக உணர்வாய் , ஏன் சாய்அப்பா நான் இப்படி இருக்கிறேன் என்று என்னிடம் வேண்டுகிறாய், நிச்சயம் உன் சூழ்நிலைகளும் உனக்கான நேரமும் தான் உன்னை இப்படி சிந்திக்க வைக்கிறது , இதில் உன் தவறு இல்லை, நீ வீணாக எல்லாவற்றையும் நினைத்து உன் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே, உனக்கு தேவையான அனைத்தும் விரைவில் உன்னை தேடி வரும் , அப்பா நீங்கள் இப்படித்தான் சொல்கின்றீர்கள் , ஆனால் எதுவும் மாறவில்லையே என்று தானே நினைக்கிறாய், உனக்கான நல்ல நேரம் வரும் என்று நான் நம்பிக்கையாய் கூறுகிறேன் , அது போலவே நீயும் நினை உனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று நிச்சயம் எல்லாம் சுகமாகிவிடும்,
உன்னை எல்லாரும் தனியாக விட்டுவிட்டார்கள் என்று நினைத்து புழம்புகிறாய், யாரும் இவ்வுலகில் தனியாக இல்லை, எல்லாருக்கும் இந்த உலகம் என்பது பொதுவானது, யாரிடமும் அதிகம் எதிர்பார்க்காதே அது உன்னை ஏமாற்றத்தில் தள்ளி இந்த நிலைமையில் தள்ளி இருக்கிறது, உனக்காக யார் இருந்தாலும் இல்லாமல் போனாலும் உன் உயிராய் நீ மரியாதை செலுத்தும் உன் சாய் அப்பா துணை எப்போதும் உனக்கு உண்டு , என் பிள்ளையான நீ என்னை நினைத்த மறு நிமிடமே உன் அருகில் நான் நிற்பேன், உன் தாயாக தந்தையாக நான் எப்போதும் இருப்பேன்.
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...