அன்பு குழந்தையே !
என் பெயரை இடைவிடாமல் ஜபித்துக் கொண்டு எல்லா விதமான சங்கடங்களையும் தைரியமாக நேருக்கு நேர் சந்தித்தால், எல்லாவிதமான ஆபத்துகளும் பறந்தோடிவிடும். என் நாமத்தின் சக்தி அவ்வளவு மகிமை வாய்ந்தது.
எப்போதெல்லாம் உனக்கு சங்கடங்கள் வருகிறதோ அப்போதெல்லாம் உனக்கு என் நினைவு வர வேண்டும். ஏனெனில், அப்போது தானே உனது சங்கடங்கள் விலகும்.

உனக்குத் தேவையான புத்தி அனைத்தையும் நான் கொடுத்து உன்னை விடுதலை செய்து காத்து ரட்சிப்பேன். இதை எப்போதும் உனது மனதில் வைத்துக்கொள்.
இன்றைக்கு என்ன உணர்வில் இருக்கிறாயோ, அதே உணர்வில் என்றும் இருக்கப் பழகு. எந்தவித முயற்சியும் இல்லாமல் உன்னை நான் கரை சேர்த்துவிடுகிறேன்.
என்னிடம் திடமான நம்பிக்கை வைத்தாலே போதும், எல்லாம் தானே கிடைக்கும் என்பதில் தளர்வடையா நம்பிக்கைக் கொள்.எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் உனக்கு நன்மை தருவதற்கே ஏற்பட்டது என நம்பு.!
No comments:
Post a Comment