Friday, March 14, 2014

உனக்கும் இது சாத்தியமாகும்!

சாயி பக்தர்களுக்கு ஒரு பெரிய புதிர்... சாயி வரதராஜன் பிரார்த்தனை செய்தால் காரிய சித்தியாகிறது, நமக்கு அது தாமதிப்பது ஏன்?
     சில விக்ஷயங்களை நான் பின்பற்றுகிறேன். முதலாவது கடவுள் என்னை அதிகமாக நேசிக்கிறார், என் மீது அன்பாக, கரிசனமாக இருக்கிறார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை.
     அவரை நேசிப்பதை வெளிப்படையாக காட்ட அவருக்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபட முயற்சிக்கிறேன். ஆகவே பதிலுக்கு அவரும் என்னிடம் அப்படியே நடக்கிறார்.
     எனக்கு அவருடைய உதவி எப்போதும் தேவை என்பதையும் எனக்கு என்ன தேவை என்பதை அறிந்து கண்டிப்பாக உதவுவான் என்ற உண்மையையும் தெளிவாக உணர்ந்து உறுதியாக நம்புவதால், இந்த உதவிக்காக சரணாகதி செய்து அவரது பாதத்தில் காத்திருக்கிறேன். கடவுளின் உதவியைப் பெற உரிமையோடு கேட்க வேண்டும். அவர் மீது எதிர்பார்ப்பு இல்லாத அன்பு செலுத்தும்போது இந்த உரிமை உணர்வு ஏற்படும். அதைத் தெரிந்துகொண்டால் அற்புதத்தை அனுபவிக்கலாம்.
     தந்தாலும் தராமல் போனாலும் அவரே கதி என்று சரணாகதி செய்தால் போதும், அவர் நம் பொறுப்பை பார்த்துக் கொள்வார் என்பதில் உறுதியோடு இருக்கிறேன். இதனால் நான் விரதங்கள் இருப்பதில்லை, எனக்காக வேண்டுதல் வைப்பதில்லை.
     மற்றவர்களுக்காக வாழ்வதை பாபா ஊக்குவிக்கிறார். இதை உணர்ந்து அவரது பிள்ளைகளான பக்தர்களிடம், ‘உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்று சொல்லி விட்டு, நான் உறங்கிப் போய்விட வில்லை. சாயியின் பாதத்தில் விழிப்போடு உட்கார்ந்திருந்து, அவருக்கு பதில் நான் இங்கே விழித்திருக்கிறேன் என்கிறேன்.
     நான் விழித்திருக்க விரும்புவாரா சாயி? வேண்டுதலைக் கேட்க வைத்தார். அடுத்தது, என்னைக் காக்கும் தகுதி படைத்தவர் சாயி நாதன் மட்டுமே என்ற நம்பிக்கை.எனக்கு தேவை சாயி என்ற ஒரே கடவுள், நான் புரிந்து கொண்ட கடவுள். அவர் என் சொந்தக் கடவுள். அதன் பிறகு வேறு யாரையும், வேறு எந்த கல்யாண ரூபத்திலும் அவரைப் பார்க்க நான் முனைவதில்லை.
     என் கண்கள் சாயியின் பாதங்களை நோக்கி இருக்கிறது. இதனால் அலை பாயாத மனம், அடுத்தடுத்து வெற்றிகள் பெற முடிகிறது. கிடைக்குமோ கிடைக்காதோ என நினைப்பதில்லை. கிடைத்துவிடும் என உறுதி கொள்கிறேன்.
     என்னுடன் இருப்பவர் சாயி அல்லவா? சூழ்நிலைக்கு ஏற்றவாறு சாயியை மாற்றக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
     மனம் அறிந்து தப்பு செய்த நேரத்தில் தண்டனை தரும் தந்தையாக, தவறுக்கு வருந்தும்போது தேற்றும் தாயாக, உதவி தேவைப்படும் போது உற்ற நண்பனாக, இடுக்கண் காலத்தில் கை கொடுக்கும் உடன் பிறப்பாளனாக, பாசம் பொங்கும்போது நான் பெற்ற குழந்தையாக, என்னால் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது என் பணியாளனாக.. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அவரை உருவாக்கி வைத்துக்கொண்டிருக்கிறேன். அவரும் என் மனநிலைக்கு ஏற்ப ஒத்துழைப்பு தருகிறார்.
கடமையாகக் கருதுகிறேன்!
     அடுத்தது, நான் ‘சாயி என்கிற தந்தை உருவாக்கிய குடும்பத்தின் பிரிக்கமுடியாத அங்கம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால் என் சக உடன்பிறப்புகளுக்காக பிரார்த்தனை செய்வதை கடமையாகக் கருதுகிறேன். அவர்களுக்கு அவர் அற்புதம் செய்யும்போது, இது என்னால்தான் நடந்தது என ஒருபோதும் மனதால் சொல்லவே மாட்டேன். நான் சாயிக்கு ஒரு சாட்சியாக விளங்குவேன் எனத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறேன்.
     உனக்காக, உன் பெயருக்காக தீவிரமாக சுயநலமில்லாமல் சேவையாற்றுவேன். அப்படிப்பட்ட மனத்தை மட்டுமே எனக்குள் நீ உருவாக்க வேண்டும். தவறாமல் உன்னை தியானிக்கும் பழக்கத்தை சுபாவமாக மாற்றவேண்டும். எனக்குள் நீ இருந்து, என்னை நீயாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த உடல் இறந்த பிறகும் இந்த உலகில் நான் வாழவேண்டும் என்றுதான் பிரார்த்திப்பேன். இதனால், எனக்கு ஒரு தேவை என்றால் வருத்தப்படுவதில்லை. அதாவது எனக்கு வருத்தம் வருவதில்லை. யாருக்காவது ஒன்று என்றால் என்னை அறியாமல் தேம்பித் தேம்பி  அழுகிறேன். இது நானாக ஏற்படுத்திக்கொண்டது அல்ல, தானாக வந்தது.
     சமயத்தில் வேண்டியது கிடைக்காவிட்டால், எனக்கு தேவைப்படாத விக்ஷயத்தில் அவரது நிராகரிப்பு சரியென ஒத்துக் கொள்கிறேன். அவரிடம் ‘அதுதான் வேண்டும் எனக் கேட்டு அடம் பிடிப்பதில்லை.
     அடுத்து, எனது இயலாமை, பாவங்கள், நான் செய்த துரோகங்கள் என எனது எதிர்மறை செயல்கள் அனைத்தையும் உணர்ந்திருக்கிறேன். அதனால் ஒவ்வொரு முறையும் அதற்காக மனம் வருந்தி, பாபா இனி தப்பு செய்யமாட்டேன், பாவம் செய்யாமல் பார்த்துக் கொள், துரோகம் செய்யும் குணத்திலிருந்து என்னை காப்பாற்று என வேண்டுகிறேன்.
     சுருக்கமாக, என் மனம் என்னவென அவன் மட்டுமே அறியுமாறு திறந்ததாகவும், வெளிப்படையாகவும் வைத்திருக்கிறேன
     கடைசியாக, கிவ் எனர்ஜி டு கிரியேட் பாசிடிவ் எனர்ஜி (பவர்) என்று வேண்டுவேன். இதனால் எப்போதும் மின்சாரத்தை சேகரித்து, தேவைக்கேற்ப செலவிட்டும், சேமித்தும் வைத்துக்கொள்ளும் சாதனமாக என்னை மாற்றத் தெரிந்து வைத்திருக்கிறேன்.
     மந்திரம் மாயமில்லை. கடும் பிரத்யனமில்லை. விரதமில்லை, அப்பம் வைப்பதில்லை, வேண்டுதல் செய்வதில்லை.. சுய சோதனை மட்டுமே செய்து
தேவையற்றதை ஒதுக்குகிறேன், வெற்றி வருகிறது. ஒவ்வொரு முறையும் எல்லாருக்காகவும் நான் பிரார்த்தனை செய்ய மாட்டேன், அவரவருக்குள் நம்பிக்கையை, பாசிடிவ் எனர்ஜியைப் பாய்ச்சுகிறேன். அவற்றின் அளவே அவர்களுக்குக் கிடைக்கும் விடுதலையின் அளவாக இருக்கிறது. இப்படி மாறுவதற்கு நிறைய தியாகங்கள் தேவைப்படுகிறது. தேவை மனமாற்றம், உணவு, உடை மாற்றம் அல்ல. இந்த நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளும் போது அவன் என் பெயரை மாற்றி, என்னை மாற்றி வித்தியாசமாக எடுத்துச் செல்லும்போது ‘விமர்சனங்கள் வருமே! கேலி பேசுவார்களே! தூற்றுவார்களே என்று கவலைப் படுவதில்லை. போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். எல்லாம் என் சாயி பாதங்களுக்கே! என்று நடந்துவிடுகிறேன். இப்படித்தான் இதுவரை செய்து வருகிறேன்.

     அவன் என் பாத்திரத்தை தினமும் துலக்கி சுத்தமாக வைத்திருக்கிறான். அதிலிருந்து எடுக்கப்படும் எதுவும் நச்சாக மாறுவதில்லை. அந்த அளவு நம்பிக்கை இல்லாதவர்கள், சீரடிக்கே போனாலும் வேண்டுதல் நிறைவேறாது. நம்பிக்கையே வாழ்க்கையை மாற்றும் சக்தியாகும்.

எங்கும் எதிலும் நானே!


ஒருமுறை திருமதி தர்கட் சீர்டியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்தார். மதிய உணவு தயாராகி பதார்த்தங்கள் பரிமாறப் படும்போது பசியுள்ள ஒரு நாய் அங்கு வந்து குரைக்கத் தொடங்கியது. திருமதி தர்கட் உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித் துண்டை விட்டெறியவும் அது மிகுந்த சுவையுணர்வோடு அதைக் கவ்வி விரைவாக விழுங்கிவிட்டது.
     பிற்பகல் அவள் மசூதிக்குச் சென்று சிறிது தூரத்தில் அமர்ந்தபோது ஸாயி பாபா அவளிடம் “அம்மா நான் பெருமளவு திருப்தியுறும் வகையில் எனது பிராணன்கள் யாவும் நிறைவு பெற்றன. இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக. இது உன்னை நன்னிலையில் வைக்கும். இம்மசூதியில் உட்கார்ந்து கொண்டு நான் பொய் பேச மாட்டவே மாட்டேன். என்னிடம் இவ்விதமாக இரக்கம் கொள்வாய். முதலில் பசியாய் இருப்போர்க்கு உணவு கொடுத்துப் பின் நீ உண்ணுவாயாக. இதை நன்றாகக்  கவனித்துக் கொள் என்று கூறினார்.
     அவள், எங்ஙனம் நான் தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும்? நானே உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்து பணம் கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் எனக் கூறினாள்.
     இதற்கு பாபா, “அந்த சுவை மிகு ரொட்டியை உண்டு நான் மனப் பூர்வமாகத் திருப்தியடைந்து இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன். உணவு வேளைக்கு முன்னர் நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன் ஒன்றியதாகும். இவ்வாறாகவே மற்ற உயிரினங்களும் (பூனைகள், பன்றிகள், ஈக்கள், பசுக்கள் முதலியன) என்னுடன் ஒன்றானவைகளாகும்.

     நான் அவைகளின் உருவத்தில் உலாவிக் கொண்டிருக்கிறேன். என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன். எனவே துவைதத்தையும், பேதத்தையும் ஒழித்து இன்று செய்ததைப் போல் எனக்கு சேவை செய்என்று கூறினார்.

Thursday, March 13, 2014

உதியைப் போடு நடப்பதைப் பாரு!

மும்பைப் புறநகரான பாந்த்ரா வாசி ஒருவருக்கு இரவு முழுவதும் உறக்கம் வருவதே கிடையாது. கண்களை மூடினால் இறந்த அவரது தந்தையார் கனவில் வந்து, தூங்க விடாமல் செய்துவிடுவார்.
     நல்லதும், கெட்டதுமான பழைய செய்திகளை நினைவூட்டி சாபங்களாலும், வசை மொழிகளாலும் துளைத்து எடுத்துவிடுவார். ரகசியமானதும், பீடை பிடித்ததுமான விக்ஷயங்களை கடுமையான இகழ் மொழியில் கொட்டுவார். தினமும் இது வாடிக்கை.
     இதை தாங்கவும், தவிர்க்கவும் முடியாமல் அந்த நபர் தவித்து வந்தார். பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று ஒரு சாயி பக்தரிடம் ஆலோசனை கேட்டார்.
     ‘சாயி மகராஜைத் தவிர, வேறு எந்த நிவாரணமும் தெரியவில்லை. முழுமையான விசுவாசத்துடனும், பக்தியுடனும் நீர் உதியை ஏற்றுக் கொண்டால்,  தன் சக்தியை தானே வெளிப்படுத்தும்! என்று அந்த நண்பர் கூறி, சிறிது உதீயைக் கொடுத்து, ‘படுக்கப்போவதற்கு முன் சிறிது உதீயை நெற்றியில் பூசிக்கொள்ளவும். மீதியை பொட்டலமாக தலையணை அருகில் வைத்துக் கொள்ளவும். ஸ்ரீ சாயியை மனத்தில் வைக்கவும். பக்தி சிரத்தையோடு உதீயை பயன்படுத்த வேண்டும். பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தைப் பார்க்கலாம். அது உடனே உம்மை இந்த இன்னலில் இருந்துவிடுவிக்கும். உதீயினுடய இயல்பான குணம் இதுவே! என்றார்…
     நண்பரின் பேச்சைக் கேட்டு, உதீயை வாங்கிப்  பயன்படுத்தியவருக்கு ஆச்சரியம்! அவரது கனவில் தந்தையார் மறுபடி தோன்றவில்லை. அன்றிரவே அவர் நிம்மதியாகத் தூங்கினார். கெட்ட கனவின் சாயலும் இல்லை. அவர் மிக்க ஆனந்தமடைந்தார்.
     அன்று முதல் உதீ பொட்டலத்தை தலையணை அருகிலேயே எப்பொழுதும் வைத்துக் கொண்டார். எப்பொழுதும் பாபாவின் நினைவாகவே இருந்தார். பாபா படம் ஒன்றை வாங்கிவந்து, வியாழக்கிழமையன்று பூமாலை சமர்ப்பித்தார். படுக்கைக்கு மேலே சுவரில் அப்படத்தை மாட்டி, பய பக்தியுடன் பூஜித்தார். வியாழன் தோறும் பூமாலை சாத்தி வணங்கினார். அவரைப் பிடித்த பீடை ஒழிந்தது.    இந்த தகவலை பாபாவின் சத்சரித்திரம் கூறுகிறது.
     ஆவிகள், ஏவல், பில்லி, சூனியம், பேய், பிற சக்திகளால் தொல்லை, கடன், கண் திருஷ்டி தொல்லை என எந்த விதத்தொல்லைகளால் பாதிக்கப்பட்டாலும் தயங்காமல் உதியை பயன்படுத்திக் கொண்டால் விடுதலை பெறலாம்.
     கவனிக்க வேண்டிய விக்ஷயம்! உதீ என்கிற சாயியின் அருள் தன்னை விடுவித்து விடும் என முழுமையாக நம்ப வேண்டும். பக்தி சிரத்தையுடன் உதீயை ஏற்கவேண்டும். உதீயை வாங்கி கோயில் சுவற்றோரத்தில் கொட்டக்கூடாது.
     படுக்கையானாலும் பரவாயில்லை. பாபாவின் போட்டோ ஒன்றை படுக்கைக்கு நேராக மேற்பகுதியில் மாட்டிவைத்து தினமும் அதற்கு பூஜை செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை பூமாலை சார்த்தினாலும் போதும் என்பது அனுபவப் பூர்வமான உண்மை.

     எப்படியெனில் ஒவ்வொரு போட்டோவிலும் நான் உயிரோடுஇருக்கிறேன் என்கிறார் பாபா. அந்த நம்பிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும்.

Wednesday, March 12, 2014

பாபா சர்வாந்தர்யாமி!

ஜனங்கள் பாபாவை அணுகும்போது,பாபாஅல்லா பலே கரேகே” (கடவுள் அருள் புரிவார்) என சொல்லிக் கொண்டே உதியை அளிப்பார்; அவர் கூறியது யாவும் அப்படியே நடக்கும். ஒரு முறை " நான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன், அவை அங்கே நிகழ்கின்றன", என பாபா கூறினார். பாபாவின் சொற்கள் பிரமாணம் நிறைந்தவை. வறண்ட பாறையில் தண்ணீர் உள்ளது என அவர் கூறும்போது, அங்கே தண்ணீர் கிட்டியது. பஞ்ச பூதங்களும் அவரது ஆணைக்கு கட்டுப்பட்டன. நெருப்பு ,நீர் , காற்று ஆகியவை அவருடைய ஆணைக்கு கீழ்ப்படிந்ததை பல பக்தர்கள் கண்டிருக்கின்றனர். கொழுந்து விட்டு உயரமாக எரியும் தீ அவரது ஆணைக்கு கட்டுப்பட்டு அடங்கிற்று. பலத்த காற்றும் மழையும் அவருடைய ஆணையை மதித்து நின்றன. கொளுத்தும் வெய்யில் காலத்தில் எரியும் நெருப்பின் அருகே குளுமையான காற்று வீச வேண்டுமென பாபா சங்கல்பம் செய்ய, அவ்வாறே குளிர் காற்று வீசியது. மாண்டவர் மீண்டும் உயிர்பெற்றனர். தம் முன் இருப்பினும் இல்லாவிடினும் ஒருவனது இதயத்தில் உள்ளதை அறியும் சக்தியும், அதை சீர்படுத்தும் சக்தியும் அவரிடம் இருந்தது.அவர் சர்வாந்தர்யாமி என உணரப்பட்டார்.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.






தர்மத்தை கைவிட வேண்டாம்!



சகல வசதிகளும் இருந்த பழைய வீட்டை வாங்கி ஒரு பணக்காரன் புதுப்பித்தான். வீட்டில் சகல வசதிகளும் இருந்தது. வாசல் மட்டும் குறுகலானது.
     ஒருநாள் அவன் காலம் முடிந்தது. வெளியூரிலிருந்து அவன் பிள்ளை வரவுக்காக காத்திருந்ததால் உடல் விறைத்துப் போயிற்று. இல்லத்தில் நடத்தும் சடங்குகள் முடிந்து மயானத்திற்கு உடலை எடுத்துச் செல்ல முற்பட்ட போது வாசற்படி தடுத்தது. “எப்படி எப்படியோ முயற்சித்தும் பலனில்லை. வாசல் பகுதியை சற்று அகலமாக்க இடிப்பதை தவிர வேறே வழியில்லை. இல்லையென்றால் பிணத்தின் காலைத்தான் வெட்டவேண்டும்! என்று சலித்துக்கொண்டார் ஒரு உறவினர்.  கடப்பாரையோடு வந்தார் மற்றொருவர்.
     அழுது அழுது முகமெல்லாம் வீங்கிப்போன இறந்தவரின் மனைவி சொன்னாள்! “ஐயோ! வாசலை இடிக்காதீங்க! அவர் மனசு பொறுக்காது. இது வெறும் உடம்புதானே! காலை வெட்டிக்கோங்க. கொஞ்ச நேரத்திலே சாம்பலா போகப் போகிறதுதானே! என்றாள்.
     இறந்தவனின் ஆத்மா அழுதது. இவளுக்காக தர்மத்தை கைவிட்டேனே! இவள் உடலை அலங்கரித்து மகிழ்ந்த எனக்கு இவள் தந்த வெகுமதி என் உடலை ஊனப்படுத்தி வழியனுப்புகிறாளே! இது எனக்கு தக்க தண்டனைதான்!என்று சொல்லிக் கொண்டது.


ஆதாரம்: கருட புராணம்

Tuesday, March 11, 2014

நீ பாவியல்ல!

நிறைய பேர் ஐயா, நான் பாவி, மூடன், மடையன் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்கிறார்கள்.
     நமது நீதி நூல்கள் பாவி என்றால் யாரைச் சொல்கின்றன தெரியுமா? பசியென்று வருகிறவர்களுக்கு புசி என்று எதையும் தராமல் தான் மட்டுமே சாப்பிடுகிறானே அவனைத்தான் பாவி என்று சொல்கின்றன.
     அறிவில்லாதவன்தான் மூடன். எங்கு எதை பேசவேண்டும், எதை பேசக்கூடாது என்பது தெரியாமல் அளவறிந்து பேசாமல் தொணதொணத்துக் கொண்டிருப்பவனே மடையன்.
     இவர்கள் வீட்டில் அன்னை மகாலட்சுமி சென்று அமரமாட்டாள். தனது சகோதரியான மூதேவியை அனுப்பிவைப்பாள்.

பென்னலூர் சித்தர்

Monday, March 10, 2014

துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள்.

பூர்வ ஜன்ம வினைகளை நோய்களாகவும், குஷ்டமாகவும், வலிகளாகவும் கவலையாகவும் முழுதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்? துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை முடிப்பதற்காகவே இன்னொரு ஜென்மம் எடுக்க வேண்டும். ஆகவே, இந்தத் துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் உயிரை நீயே அழித்துக் கொள்ளாதே

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...