மும்பைப் புறநகரான பாந்த்ரா வாசி ஒருவருக்கு இரவு முழுவதும் உறக்கம் வருவதே
கிடையாது. கண்களை மூடினால் இறந்த அவரது தந்தையார் கனவில் வந்து, தூங்க விடாமல் செய்துவிடுவார்.
நல்லதும், கெட்டதுமான பழைய செய்திகளை நினைவூட்டி சாபங்களாலும்,
வசை மொழிகளாலும் துளைத்து
எடுத்துவிடுவார். ரகசியமானதும், பீடை
பிடித்ததுமான விக்ஷயங்களை கடுமையான இகழ் மொழியில் கொட்டுவார். தினமும் இது
வாடிக்கை.
இதை தாங்கவும், தவிர்க்கவும் முடியாமல் அந்த நபர் தவித்து
வந்தார். பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று ஒரு சாயி பக்தரிடம் ஆலோசனை கேட்டார்.
‘சாயி மகராஜைத் தவிர, வேறு எந்த நிவாரணமும் தெரியவில்லை. முழுமையான
விசுவாசத்துடனும், பக்தியுடனும்
நீர் உதியை ஏற்றுக் கொண்டால், தன் சக்தியை தானே வெளிப்படுத்தும்! என்று அந்த நண்பர்
கூறி, சிறிது உதீயைக் கொடுத்து,
‘படுக்கப்போவதற்கு முன் சிறிது உதீயை
நெற்றியில் பூசிக்கொள்ளவும். மீதியை பொட்டலமாக தலையணை அருகில் வைத்துக் கொள்ளவும்.
ஸ்ரீ சாயியை மனத்தில் வைக்கவும். பக்தி சிரத்தையோடு உதீயை பயன்படுத்த வேண்டும்.
பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தைப் பார்க்கலாம். அது உடனே உம்மை இந்த இன்னலில்
இருந்துவிடுவிக்கும். உதீயினுடய இயல்பான குணம் இதுவே!” என்றார்…
நண்பரின் பேச்சைக் கேட்டு,
உதீயை வாங்கிப் பயன்படுத்தியவருக்கு ஆச்சரியம்! அவரது கனவில் தந்தையார்
மறுபடி தோன்றவில்லை. அன்றிரவே அவர் நிம்மதியாகத் தூங்கினார். கெட்ட கனவின் சாயலும்
இல்லை. அவர் மிக்க ஆனந்தமடைந்தார்.
அன்று முதல் உதீ பொட்டலத்தை
தலையணை அருகிலேயே எப்பொழுதும் வைத்துக் கொண்டார். எப்பொழுதும் பாபாவின் நினைவாகவே
இருந்தார். பாபா படம் ஒன்றை வாங்கிவந்து, வியாழக்கிழமையன்று பூமாலை சமர்ப்பித்தார். படுக்கைக்கு மேலே சுவரில்
அப்படத்தை மாட்டி, பய பக்தியுடன் பூஜித்தார்.
வியாழன் தோறும் பூமாலை சாத்தி வணங்கினார். அவரைப் பிடித்த பீடை ஒழிந்தது. இந்த தகவலை பாபாவின் சத்சரித்திரம் கூறுகிறது.
ஆவிகள், ஏவல், பில்லி,
சூனியம், பேய், பிற
சக்திகளால் தொல்லை, கடன், கண் திருஷ்டி தொல்லை என எந்த விதத்தொல்லைகளால்
பாதிக்கப்பட்டாலும் தயங்காமல் உதியை பயன்படுத்திக் கொண்டால் விடுதலை பெறலாம்.
கவனிக்க வேண்டிய விக்ஷயம்! உதீ
என்கிற சாயியின் அருள் தன்னை விடுவித்து விடும் என முழுமையாக நம்ப வேண்டும். பக்தி
சிரத்தையுடன் உதீயை ஏற்கவேண்டும். உதீயை வாங்கி கோயில் சுவற்றோரத்தில்
கொட்டக்கூடாது.
படுக்கையானாலும் பரவாயில்லை.
பாபாவின் போட்டோ ஒன்றை படுக்கைக்கு நேராக மேற்பகுதியில் மாட்டிவைத்து தினமும்
அதற்கு பூஜை செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை பூமாலை சார்த்தினாலும் போதும்
என்பது அனுபவப் பூர்வமான உண்மை.
எப்படியெனில் ஒவ்வொரு
போட்டோவிலும் நான் உயிரோடுஇருக்கிறேன் என்கிறார் பாபா. அந்த நம்பிக்கையுடன்
நடந்துகொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment