Wednesday, March 12, 2014

தர்மத்தை கைவிட வேண்டாம்!



சகல வசதிகளும் இருந்த பழைய வீட்டை வாங்கி ஒரு பணக்காரன் புதுப்பித்தான். வீட்டில் சகல வசதிகளும் இருந்தது. வாசல் மட்டும் குறுகலானது.
     ஒருநாள் அவன் காலம் முடிந்தது. வெளியூரிலிருந்து அவன் பிள்ளை வரவுக்காக காத்திருந்ததால் உடல் விறைத்துப் போயிற்று. இல்லத்தில் நடத்தும் சடங்குகள் முடிந்து மயானத்திற்கு உடலை எடுத்துச் செல்ல முற்பட்ட போது வாசற்படி தடுத்தது. “எப்படி எப்படியோ முயற்சித்தும் பலனில்லை. வாசல் பகுதியை சற்று அகலமாக்க இடிப்பதை தவிர வேறே வழியில்லை. இல்லையென்றால் பிணத்தின் காலைத்தான் வெட்டவேண்டும்! என்று சலித்துக்கொண்டார் ஒரு உறவினர்.  கடப்பாரையோடு வந்தார் மற்றொருவர்.
     அழுது அழுது முகமெல்லாம் வீங்கிப்போன இறந்தவரின் மனைவி சொன்னாள்! “ஐயோ! வாசலை இடிக்காதீங்க! அவர் மனசு பொறுக்காது. இது வெறும் உடம்புதானே! காலை வெட்டிக்கோங்க. கொஞ்ச நேரத்திலே சாம்பலா போகப் போகிறதுதானே! என்றாள்.
     இறந்தவனின் ஆத்மா அழுதது. இவளுக்காக தர்மத்தை கைவிட்டேனே! இவள் உடலை அலங்கரித்து மகிழ்ந்த எனக்கு இவள் தந்த வெகுமதி என் உடலை ஊனப்படுத்தி வழியனுப்புகிறாளே! இது எனக்கு தக்க தண்டனைதான்!என்று சொல்லிக் கொண்டது.


ஆதாரம்: கருட புராணம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...