ஒருமுறை திருமதி தர்கட் சீர்டியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்தார்.
மதிய உணவு தயாராகி பதார்த்தங்கள் பரிமாறப் படும்போது பசியுள்ள ஒரு நாய் அங்கு
வந்து குரைக்கத் தொடங்கியது. திருமதி தர்கட் உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித்
துண்டை விட்டெறியவும் அது மிகுந்த சுவையுணர்வோடு அதைக் கவ்வி விரைவாக விழுங்கிவிட்டது.
பிற்பகல் அவள் மசூதிக்குச்
சென்று சிறிது தூரத்தில் அமர்ந்தபோது ஸாயி பாபா அவளிடம் “அம்மா நான் பெருமளவு திருப்தியுறும்
வகையில் எனது பிராணன்கள் யாவும் நிறைவு பெற்றன. இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக.
இது உன்னை நன்னிலையில் வைக்கும். இம்மசூதியில் உட்கார்ந்து கொண்டு நான் பொய் பேச
மாட்டவே மாட்டேன். என்னிடம் இவ்விதமாக இரக்கம் கொள்வாய். முதலில் பசியாய்
இருப்போர்க்கு உணவு கொடுத்துப் பின் நீ உண்ணுவாயாக. இதை நன்றாகக் கவனித்துக் கொள்” என்று கூறினார்.
அவள், எங்ஙனம் நான் தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும்?
நானே உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்து
பணம் கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் எனக் கூறினாள்.
இதற்கு பாபா, “அந்த சுவை மிகு ரொட்டியை உண்டு நான் மனப்
பூர்வமாகத் திருப்தியடைந்து இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன். உணவு
வேளைக்கு முன்னர் நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன் ஒன்றியதாகும். இவ்வாறாகவே
மற்ற உயிரினங்களும் (பூனைகள், பன்றிகள், ஈக்கள், பசுக்கள் முதலியன) என்னுடன் ஒன்றானவைகளாகும்.
நான் அவைகளின் உருவத்தில்
உலாவிக் கொண்டிருக்கிறேன். என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு
உகந்தவன். எனவே துவைதத்தையும், பேதத்தையும்
ஒழித்து இன்று செய்ததைப் போல் எனக்கு சேவை செய்” என்று கூறினார்.
No comments:
Post a Comment