Thursday, May 1, 2014

நான் இங்கேதான் இருக்கிறேன்!

Image

இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு முன்பு அவரது நாமாக்களை வாயாரத் துதிக்க வேண்டும். சாயி பக்தர்கள் சாயி ராம் சாயி ராம் என்று சொல்வதோ, ஓம் சாயி , ஸ்ரீ சாயி சொல்வதோ நல்லது.

இவ்வாறு சொல்லும்போது மனம் ஒருநிலைப் படாமல் வானத்தில் வேகமாகக் களைந்து செல்லும் மேகங்கள் போல தறிக்கெட்டு இங்கும் அங்கும் அலையும். சோர்ந்து போகாமல், அலையட்டும் என விட்டுவிட வேண்டும். ஆனால் நாமாவை சொல்வதை நிறுத்தக்கூடாது.

ஒரு கட்டத்தில் மனம் அலைவதிலிருந்து மீண்டு இறைவன் உருவத்தை நினைக்கும். அப்போது அவன் இதயத்தில் வீற்றிருப்பதாக நினைத்து அவனை அங்கு துதிக்க வேண்டும்.

இல்லையேல் புருவ மத்தியில் பாபா வீற்றிருப்பது போல நினைத்து அவரை அங்கு நிறுத்தி, மூடிய கண்களால் புருவ மத்தியில் பார்வையைச் செலுத்தி கடவுளைப் பார்க்க வேண்டும்.

பிரார்த்தனை என்பது ஓரிரு வார்த்தைகள்தாம். ஆனால் துதி என்பதோ எண்ணில் அடங்காதவை. இந்த துதியைச் செய்தால் போதும், வேண்டுகிற அனைத்தும் வந்து கிடைக்கும். முதலில் முயற்சி செய்து பயிற்சி செய்தால், பிறகு அனைத்தும் தாமாக வரும்.

ஓய்வு நேரத்தில் பாபாவின் நாமாக்களை எழுதவேண்டும். இதன் மூலம் சிறந்த வாழ்வு அமையும். வாழ்க்கைக்குப் பின் பிறவா நிலையும் கிடைக்கும்.

பாபாவுடன் எப்போதும் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும். கூப்பிடும்போதெல்லாம், ”நான் இங்கேதான் இருக்கிறேன்” என்பார் பாபா.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...