பகவான் நமக்குத்தரும் சோதனைகள் அனைத்தும்
நம்முள் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு மட்டுமே. அவ்வாறு சோதனைகளை
அளித்துக்கொண்டே நம்மை அவர் காப்பாற்றுவார்.
நாம் அறிந்தும்
அறியாமலும், பேச்சின் மூலமும், கேட்பதின் மூலமும் செய்துள்ள பாவங்கள், அனைத்தும் ஸாயிநாதரை
ஸ்மரிப்பதின் மூலம் அக்கணமே முற்றிலும் அகலும்.
நமக்கு என்ன
வேண்டுமென்பது நம்மைவிட, பாபாவிற்கு நன்றாகத் தெரியும். நாம்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர் அறிந்ததே.
யாருமில்லாத
இடத்தில் கூட ஸாயி நம்மை கவனிப்பார் என்பதை அறிந்துகொண்டால் நாம் யாருக்கும் எந்த ஒரு
தீங்கும் செய்யக்கூட மனதாலும் நினைக்கமாட்டோம்.
No comments:
Post a Comment