இன்பமும் துன்பமும் அவரவருடைய மனநிலையைப்பொறுத்தது. இது மாயை மற்றும் பூர்வ கர்மாவின் பலனேயாகும். மாயையின் தோற்றத்தாலேயே காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் என்ற ஆறு வகை விரோதிகள் உருவாகிறார்கள்.
பித்தமும் செல்வமும் ஒன்றுதான். ஆரோக்கியத்திற்கு பித்தமும் அவசியம்தான். அது போலவே செல்வமும். உடல் உள்ளவரை செல்வமும் தேவை. ஆனால் அதற்கு அடிமையாகி லோபியாக மாறி விடக்கூடாது. தர்மசிந்தனை உள்ளவனாக இருக்கும் அதே நேரத்தில் வீண் செலவும் செய்யாமலிரு.
கடவுள் எங்கும் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. அசைகின்ற அசையாத எல்லாப்பொருட்களிலும் இருக்கிறார். இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இடத்திலும் உறைந்துள்ளதை நினைவில் கொண்டால் நம்முள் அன்பு தானாக ஊற்றெடுக்கும். அன்பு நம்மிடம் பெருகும்போது எல்லாமே நமக்குக் கிடைக்கும்.
No comments:
Post a Comment