இறைவனைக் காண மனமே ஆதாரம். ஆனால் அது எளிதில் அடங்காது. முரட்டுத் தனமான அதை எப்படியும் அடக்க வேண்டும். தறிகெட்டு ஓடும் மனம் இறைவனிடம் ஒன்றுபடாதலால் பிறவியும் சம்சாரமும் தவிர்க்க முடியாதது ஆகிறது.
உண்மை எது உண்மையற்றது எது என்பவற்றைக் கண்டு அறிவதே விவேகம் ஆகும். ஸ்ரீ ஹரியைப் பற்றி அறியாமல் பண்டரிபுரம் போய் வருவதில் என்ன அர்த்தம் உண்டு. ஸ்ரீ ஹரியைப் பற்றி அறியாமல் அங்கு சென்று வருவதே பிறரது மதிப்பைப் பெறச் செய்யப்படுவதேயன்றி, பக்தியோடு செய்யப்படுவதே அல்ல.
புண்ணியங்களில் எல்லாம் சிறந்த புண்ணியம் பிறர் இன்பம் கண்டு தான் இன்புறுவதே. பிறர் துன்பம் கண்டு தான் இன்புறுவதைப் போன்ற பாவம் வேறு இல்லை. ஒருபோதும் அதுபோல் நடந்துக் கொள்ளாதீர்கள்.
No comments:
Post a Comment