பாபாவின் அமுத மொழிகளை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பாபா நமது அறியாமையையும் ஏழ்மையையும் நீக்கி, ஞானமும் செல்வமும் தருவார். லோகாதய இச்சைகளாகிய இந்த சமுத்திரத்தைக் கடப்பது மிகக்கடினம். மோகம் என்ற அலைகள் உயர்ந்து, தீய எண்ணங்களாகிய கரையை நோக்கி ஓடி மோதுகின்றன.
ஆதலால் நமது மன வலிமையாகிய மரங்கள் வேருடன் வீழ்த்தப்படுகின்றன. அகங் காரம் என்னும் காற்று கடுமையாக வீசி, கோபமாகிய கடலைக்கொந்தளிக்கச் செய்கிறது. வெறுப்பு, கோபமாகிய முதலைகள் பயமின்றி திரிகின்றன.
நான், எனது என்ற எண்ணங்களும், மற்ற சம்சயங்களும் நீர்ச்சுழல்களாக இடையறாது சுற்றிக்கொண்டுள்ளன. திட்டுதல், வெறுத்தல், பொறாமை ஆகிய எண்ணற்ற மீன்கள் அங்கு விளையாடு கின்றன. இவ்வளவு பயங்கரமாகவும், கொடுமையாகவும் இந்தக் கடல் இருந்தாலும் சத்குரு சாயி அவற்றை அழிக்க வல்லவர். அவரது பக்தர்கள் இதைப் பற்றி பயம் அடைய வேண்டியதில்லை. நமது சத்குரு இந்தக் கடலை பத்திர மாகக்கடப்பதற்கு வேண்டிய படகுபோன்றவர்.
விருப்பு வெறுப்பு இல்லாதவரும், உயர்வு தாழ்வுகளைக்கருதாதவரும், எவருக்கு பக்தர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறார்களோ, எவர் உயிரினங்கள் எல்லாவற்றிலும் எவ்வித பேதமும் இன்றி கலந்து நிற்கிறாரோ, எவர் இந்த அண்ட சராசரங் களில் அசையும் அசையாப்பொருட்களை பகவான் பிரம்மனுடைய ரூபத்தில் உண்டாக்கி, வீடுகள், அரண்மனைகள் மற்றும் ஆகாயம் இவை யாவற் றையும் சூழ்ந்து நிற்கிறாரோ அந்த சமர்த்த சாயியை சாஷ்டாங் கமாக நமஸ்கரிக்கிறோம்.
No comments:
Post a Comment