Saturday, May 3, 2014

கிராம மக்கள் உதவியோடு உருவாகும் சாயிப்பேராலயம்

Image

சீரடி குக்கிராமமாக இருந்தபோது, பாபா கூறியது போல, எதிர்காலத்தில் இந்த ஊர் பாபா பக்தர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் ஊராக மாறும் என்றும், மக்கள் திரள் திரளாக இந்த ஊரை நோக்கி ஆன்மிகப் பயணம் வருவார்கள் என்றும் சாயி வரதராஜன் கூறியபோது, காசிலி சுவாமி சாய் சக்தி சுப்ரமண்யம் அவர்களும், ”அப்படித்தான் ஆகும்” என்று வழி மொழிந்தார்.

பாபா மாஸ்டர் அருணாச்சலம், இந்த ஊரைப் பற்றி சொல்லும்போது, ”எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், இருந்தாலும் அவையெல்லாம் கிள்ளுக்கீரை போல கிள்ளப்படும் இடமாக இந்த இடம் மாறும். பாபாவின் ஆகர்ஷண சக்தி இந்த இடத்தில் அதிகமாக உள்ளதால், யாரெல்லாம் இந்தப் புனிதத் தலத்தில் தடம் பதிக்கிறார்களோ, அவர்களது வாழ்வில் திருப்பு முனை நிச்சயம் ஏற்படும்” என்றார்.

இங்கு ஏற்படப் போகும் சிறப்பு என்னவெனில், ஒரே ஊரில் இரண்டு இடங்களில் பாபா தொடர்பான ஆலய அமைப்புகள் உருவாவதுதான்.

                                                                                                                              மேலும் தொடர

பாபாவின் அறிவுரைகள் - பகுதி 3

Image

பிறருக்குத் தர்மர் செய்யும் போது கோபம் கொள்ளாதீர்கள். கடுமையான வார்த்தைகளைப் பேசாதீர்கள். நாம் கொடுக்கிற தர்மம் போதாது என்று ஒரு வேளை அவர்கள் மீண்டும் கேட்டால், சாந்தமான வார்த்தை கூறி அவர்களை அனுப்பி வையுங்கள். அதுவே சிறந்த தர்மம் ஆகும்.



ஒருவரது பாதங்களைப் பிடிப்பது மட்டும் சேவையல்ல. தனது உடல், உள்ளம், பொருள் அனைத்தையும் அர்ப்பணிப்பதே உண்மையான சேவை. குருவிடம் நீ அடைக்கலம் புகுந்துவிட்டால், உன்னுடைய தேகம் கூட குருவுக்கு சொந்தமாகி விடுகிறது. அதன் பிறகு குருவுக்குச் சொந்தமான தேகத்தை குருவின் சேவையில் ஈடுபட வைக்கிறேன் என்ற எண்ணத்துடன் செயல்படுவதே உண்மையான குரு சேவை. கடவுள் சேவையும் அதுவே.

பாபாவின் அறிவுரைகள் - பகுதி 2

Image

சிறந்த மார்க்கம் என்பது பிரம்மத்தைக் கண்டறிவதே என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எனவே, இன்ப துன்பங்கள் பற்றி கவலைக் கொள்ளாமல் மோட்சத்தை அடைய விரும்புங்கள். அதுவே உண்மையான ஞானமாகும்.

தத்துவங்களைக் கற்று விவாதங்களில் பிறரை ஏளனம் செய்து தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்வது விவேகமாகாது. அவர்கள் விவேகியரும் அல்லர். அவர்களால் பிரம்ம ஞானத்தை அடைய முடியாது. இதயத்தைத் தூய்மையாக வைத்திருப்பதே ஞானத்தை அடையும் வழி.

Friday, May 2, 2014

பாபாவின் அறிவுரைகள்- பகுதி 1

Image


  • நம் மனத்தை எப்போதும் சாந்தமாய் வைத்துக் கொண்டு ஒரே நிலையில் இருந்து நாம் ஊழியம் செய்யவேண்டும். அப்போது நம் எண்ணம் வெற்றி அடையும். உலகில் வல்லவன் ஒருவன் வாழ்வதும் அவனுக்குக்கீழே சிலர் வாழ்வதும் இயற்கையின் விதி. நமது ஆத்மா சாந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதே அவசியமாகும்.

  • உனது குருவினிடத்தில் அசையா நம்பிக்கை வை. உன் குருவையே எண்ணத்திலும் இலட்சியத்திலும் வைத்துக்கொள். கண்டிப்பாக ஆன்மீக வாழ்வின் இலட்சியமாகிய பரமாத்மம் உனக்குக் கிடைக்கும்.

முக்தி மார்க்கம்

Image

முக்தி அடைவதற்காக நான்கு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவை.

இதில் சரியை என்பது தாச மார்க்கம். பகவானுக்கு அடிமை செய்து அவன் பதத்தை அடைய நாடுவது. இதை சாலோகம் என்பார்கள். ஒழுக்கமாக நடந்து வழிபடும் இந்த நிலையால் சாலோகம் என்னும் நிலையான பகவானின் உலகத்தை அடையலாம்.

சற்புத்திர மார்க்கத்திற்கு கிரியை என்று பொருள். தனது வழிபடு கடவுளை அகத்தும், புறத்தும் பூசித்து வழிபடுகிற நிலைதான் சற்புத்திர நிலை. இதை கிடைய என்பார்கள். இதனால் சாமீபம் கிடைக்கும். இறைவனின் அருகிலிருக்கலாம்.

யோக மார்க்கத்திற்கு சக மார்க்கம் என்று பெயர். இதனால் சாணுபம் என்ற பதவி கிடைக்கும். அதாவது இறைவனின் திருவுருவம் போன்ற ஓர் உருவம் தாங்கி, இறை இன்பத்தை நுகர்தல்.

ஞானம் என்பது இறுதி நிலையான சன்மார்க்கம். இதையே சாயுஜ்ஜியம் என்பார்கள். அதாவது இறைவனோடு இரண்டாகக்கலந்து பிரியாது அவனைப் பெறுகிற நிலை.

மூன்று நிலைகளில் இறைவனின் பதத்தை அடையலாம். இறுதி நிலையில் பர முக்தி கிடைக்கும்.

Thursday, May 1, 2014

வடைமாலை ரகசியம்

Image

ஒருவருடைய புகழ் மங்குவதற்கும், கஷ்டப் படுவதற்கும் ராகு தோஷம் காரணமாக இருக்கும். ஒளிரும் சூரியனை பகலிலேயே ஒளி மங்கச் செய்யும் திறன் ராகுவுக்கு உண்டு என்பதிலிருந்து, அவரது தோஷத்திற்கு ஆளானவரின் நிலை எப்படியிருக்கும் என யூகித்துக் கொள்ளலாம்.

ஒரு கிரகண நாளில், அதாவது சூரியனை ராகு பிடிக்க முன்னேறுகிற வேளையில், அனுமன் சூரியனைப் பழம் என நினைத்துப் பிடிக்கச் சென்றார். அனுமனின் வேகத்திற்கு ஈடுதரமுடியாமல் திகைத்தார் ராகு பகவான்.

அவரது வீரத்தை மெச்சி, தனக்கு உகந்த தானியமான உளுந்தில் வடை செய்து, தனது உடலைப் போல வளையும் விதத்தில் அவற்றைக் கோர்த்து, அனுமனுக்குச்சார்த்தி யார் வழிபாடு செய்கிறார்களோ, அவர்களைத் தான் பிடிப்பதில்லை என வரம் கொடுத்தார்.

உளுந்து வடை மாலை சார்த்தி வழிபாடு செய்தால் தன்னால் வந்த - வருகிற தோஷங்கள் அனைத்தும் விலகும் என்றும் வாக்களித்தார். அதனால்தான் வடைமாலை சார்த்துகிறேhம். சிலர் கடலைப் பருப்பில் வடை சார்த்துவார்கள். இதனால் பலனில்லை. வடை மாலைக்கு உளுந்து வடையே சிறந்தது.

நான் இங்கேதான் இருக்கிறேன்!

Image

இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு முன்பு அவரது நாமாக்களை வாயாரத் துதிக்க வேண்டும். சாயி பக்தர்கள் சாயி ராம் சாயி ராம் என்று சொல்வதோ, ஓம் சாயி , ஸ்ரீ சாயி சொல்வதோ நல்லது.

இவ்வாறு சொல்லும்போது மனம் ஒருநிலைப் படாமல் வானத்தில் வேகமாகக் களைந்து செல்லும் மேகங்கள் போல தறிக்கெட்டு இங்கும் அங்கும் அலையும். சோர்ந்து போகாமல், அலையட்டும் என விட்டுவிட வேண்டும். ஆனால் நாமாவை சொல்வதை நிறுத்தக்கூடாது.

ஒரு கட்டத்தில் மனம் அலைவதிலிருந்து மீண்டு இறைவன் உருவத்தை நினைக்கும். அப்போது அவன் இதயத்தில் வீற்றிருப்பதாக நினைத்து அவனை அங்கு துதிக்க வேண்டும்.

இல்லையேல் புருவ மத்தியில் பாபா வீற்றிருப்பது போல நினைத்து அவரை அங்கு நிறுத்தி, மூடிய கண்களால் புருவ மத்தியில் பார்வையைச் செலுத்தி கடவுளைப் பார்க்க வேண்டும்.

பிரார்த்தனை என்பது ஓரிரு வார்த்தைகள்தாம். ஆனால் துதி என்பதோ எண்ணில் அடங்காதவை. இந்த துதியைச் செய்தால் போதும், வேண்டுகிற அனைத்தும் வந்து கிடைக்கும். முதலில் முயற்சி செய்து பயிற்சி செய்தால், பிறகு அனைத்தும் தாமாக வரும்.

ஓய்வு நேரத்தில் பாபாவின் நாமாக்களை எழுதவேண்டும். இதன் மூலம் சிறந்த வாழ்வு அமையும். வாழ்க்கைக்குப் பின் பிறவா நிலையும் கிடைக்கும்.

பாபாவுடன் எப்போதும் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும். கூப்பிடும்போதெல்லாம், ”நான் இங்கேதான் இருக்கிறேன்” என்பார் பாபா.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...