ஒருவருடைய புகழ் மங்குவதற்கும், கஷ்டப் படுவதற்கும் ராகு தோஷம் காரணமாக இருக்கும். ஒளிரும் சூரியனை பகலிலேயே ஒளி மங்கச் செய்யும் திறன் ராகுவுக்கு உண்டு என்பதிலிருந்து, அவரது தோஷத்திற்கு ஆளானவரின் நிலை எப்படியிருக்கும் என யூகித்துக் கொள்ளலாம்.
ஒரு கிரகண நாளில், அதாவது சூரியனை ராகு பிடிக்க முன்னேறுகிற வேளையில், அனுமன் சூரியனைப் பழம் என நினைத்துப் பிடிக்கச் சென்றார். அனுமனின் வேகத்திற்கு ஈடுதரமுடியாமல் திகைத்தார் ராகு பகவான்.
அவரது வீரத்தை மெச்சி, தனக்கு உகந்த தானியமான உளுந்தில் வடை செய்து, தனது உடலைப் போல வளையும் விதத்தில் அவற்றைக் கோர்த்து, அனுமனுக்குச்சார்த்தி யார் வழிபாடு செய்கிறார்களோ, அவர்களைத் தான் பிடிப்பதில்லை என வரம் கொடுத்தார்.
உளுந்து வடை மாலை சார்த்தி வழிபாடு செய்தால் தன்னால் வந்த - வருகிற தோஷங்கள் அனைத்தும் விலகும் என்றும் வாக்களித்தார். அதனால்தான் வடைமாலை சார்த்துகிறேhம். சிலர் கடலைப் பருப்பில் வடை சார்த்துவார்கள். இதனால் பலனில்லை. வடை மாலைக்கு உளுந்து வடையே சிறந்தது.
No comments:
Post a Comment