Friday, May 9, 2014

சாயி புத்ரன் பதில்கள்

Image நீங்கள் யாரை முன்னிறுத்தி அனைத்தையும் நடத்துகிறீர்கள்? யாரை முன்மாதிரியாக வைத்திருக்கிறீர்கள்?
(வி.எஸ். சுஜாதா, வேலூர் - 2)

நான் எப்போதுமே மரணத்தை முன்னிறுத்தித்தான் செயல்களைச் செய்கிறேன். அடுத்த மணி நேரத்திற்குள் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்பதால், இருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைப்பேன். கடவுளை மட்டுமின்றி, சாயி வரதராஜனை முன் மாதிரியாக வைத்துள்ளேன். கடவுள் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு சகாயர். அவரிடம் வேண்டியதைப் பெறலாம் என்ற தெளிவு கொண்டவர் சாயி வரதராஜன். இவர்களை விட வேறு முன்மாதிரி வேண்டாம் என்பது என் திடமான கருத்து.
நீங்களே உங்களுக்கு முன் மாதிரி. வேறு ஒருவரை தேடவேண்டாம் என்பது இதன் பொருள்.

Thursday, May 8, 2014

நீ என் தாசனாக மாறு! – பகுதி 4

Image

பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது:



 மென்மையானவராக மாறவேண்டும்:



ராமதாசியைப் பற்றி சாமா என்ன சொன்னார் பாருங்கள்: அந்த ராமதாசி, இயற்கையாகவே துஷ்டர், முன்கோபி, பிடிவாதக்காரர், சுலபமாக டென்ஷனாகிவிடுபவர். சந்தேகப்படுபவர்.



அவரைப் பற்றிய பிற சான்றுகளைப் பாருங்கள்: ராமதாசி ஒரு முரட்டு மனிதர். அண்ணா பாபரே என்பவர் சொன்னதைக்கேட்டு சாமாவிடம் சண்டைக்குப்போனவர். அதாவது அடுத்தவர் சொல்லைக் கேட்டு நடப்பவர்.



அவரைப் பற்றி பாபா என்ன சொன்னார் பாருங்கள்: சண்டை விரும்பி, மென்மையாகவும், இனிமையாகவும் பேசாதவர், எந்நேரமும் போதி படித்தும் அசுத்த மனம் உள்ளவர். உலகியல் பொருட்களை உதாசினம் செய்யாதவர். அடம் பிடிப்பவர். கடவுளே சொன்னாலும் கேட்காதவர். இப்படிப்பட்டவர் ராம பக்தராக இருப்பதில் என்ன பிரயோசனம்? ராமனுக்கு அல்லவோ இழுக்கு? நீங்களும் பாபாவை வழிபடுவதாகச்சொல்லிக்கொண்டு, ராமதாசி போல நடப்பதால் யாருக்கு இழுக்கு? பாபாவுக்குத்தானே சாயி பக்தர் என்பவர் சாயியைப் போல மாறவேண்டும். சாயி எப்படிப்பட்டவர்?



தாயினும் சாலப் பரிந்தவர். கருணையே வடிவானவர். பாவத்தின் மீது கோபப்பட்டு, புண்ணியத்தைச்சேர்க்கிறவர். எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல, எல்லோரையும் தாமாகப் பார்த்தவர். தனக்குக் கிடைத்ததை பேதமின்றி பகிர்ந்து கொடுத்து சாப்பிட்டவர். அனைத்தையும் வெளிப்படையாக வைத்திருந்தவர்.



மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா என்பார்கள். நீங்கள் நாமத்தைப் படிக்கப்படிக்க உங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். சாயி பக்தரான உமக்கும், மற்றவர்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கவேண்டும். அது வெளியே தெரியவேண்டும். எல்லோரைப்போலவும் நடக்கக்கூடாது, அதில் மாற்றம் வேண்டும். அந்த மாற்றம் உங்கள் மனதில் மென்மையாக வெளிப்பட வேண்டும். அன்பு கலந்த மனம் உங்களில் படைக்கப்பட வேண்டும்.

பாபாவின் மகிமை

sai-guide-us



நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 26 ல் ஹோமியோபதி மருத்துவமனை நடத்தி வருகிறேன். இங்கு சாயி பக்தர் சம்பத்ராஜ் அடிக்கடி வந்து செல்வார். வரும் போதெல்லாம் சாயி மகிமைகளைக் கூறுவார். எந்த நேரத்திலும் பாபாவை நினையுங்கள், எப்போதும் உங்களுக்குப் பாதுகாவலனாக இருப்பார் என்பார்.



வாரந்தோறும் வியாழக்கிழமை விரதம் இருந்து பாபாவுக்கு பூஜை செய்து வருகிறேன். கடந்த நவம்பர் மாதம் ஒரு நாள் பூஜை செய்து கொண்டிருந்த போது, எனது தந்தையார் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டு விட்டதாகவும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் என் மனைவி எனக்குத் தகவல் தெரிவித்தார்.



அதைக் கேட்டு கண்ணீருடன் பாபாவை துதிக்க ஆரம்பித்தேன். அவருக்கு எதுவும் ஆகக்கூடாது. விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். எனக்குத் திரும்பத் திரும்ப இதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. என் தந்தையைக் காணும் வரை பாபாவை மட்டும் நினைத்துக் கொண்டிருந்தேன். என் தந்தையைப் பார்த்த பின்தான் அந்த அதிசயத்தைக் கண்டேன்.



சாலை விபததில் சிறு காயமும் இன்றி என் தந்தையை பாபா காப்பாற்றி விட்டார். அது மட்டுமின்றி, ஆறேழு நாட்களில் பூரண குணம் பெற்று வீட்டிற்கும்  வந்துவிட்டார்.



அதிலிருந்து பாபாவின் மகிமையை எனது நண்பர்கள், எனது வாடிக்கையாளர்களுக்கும் கூறிவருகிறேன்.



ஜி. மணிமாறன், நெய்வேலி

பாபாவின் அறிவுரைகள்- பகுதி 9

Image

பாபாவின் அமுத மொழிகளை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பாபா நமது அறியாமையையும் ஏழ்மையையும் நீக்கி, ஞானமும் செல்வமும் தருவார். லோகாதய இச்சைகளாகிய இந்த சமுத்திரத்தைக் கடப்பது மிகக்கடினம். மோகம் என்ற அலைகள் உயர்ந்து, தீய எண்ணங்களாகிய கரையை நோக்கி ஓடி மோதுகின்றன.



ஆதலால் நமது மன வலிமையாகிய மரங்கள் வேருடன் வீழ்த்தப்படுகின்றன. அகங் காரம் என்னும் காற்று கடுமையாக வீசி, கோபமாகிய கடலைக்கொந்தளிக்கச் செய்கிறது. வெறுப்பு, கோபமாகிய முதலைகள் பயமின்றி திரிகின்றன.



நான், எனது என்ற எண்ணங்களும், மற்ற சம்சயங்களும் நீர்ச்சுழல்களாக இடையறாது சுற்றிக்கொண்டுள்ளன. திட்டுதல், வெறுத்தல், பொறாமை ஆகிய எண்ணற்ற மீன்கள் அங்கு விளையாடு கின்றன. இவ்வளவு பயங்கரமாகவும், கொடுமையாகவும் இந்தக் கடல் இருந்தாலும் சத்குரு சாயி அவற்றை அழிக்க வல்லவர். அவரது பக்தர்கள் இதைப் பற்றி பயம் அடைய வேண்டியதில்லை. நமது சத்குரு இந்தக் கடலை பத்திர மாகக்கடப்பதற்கு வேண்டிய படகுபோன்றவர்.



விருப்பு வெறுப்பு இல்லாதவரும், உயர்வு தாழ்வுகளைக்கருதாதவரும், எவருக்கு பக்தர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறார்களோ, எவர் உயிரினங்கள் எல்லாவற்றிலும் எவ்வித பேதமும் இன்றி கலந்து நிற்கிறாரோ, எவர் இந்த அண்ட சராசரங் களில் அசையும் அசையாப்பொருட்களை பகவான் பிரம்மனுடைய ரூபத்தில் உண்டாக்கி, வீடுகள், அரண்மனைகள் மற்றும் ஆகாயம் இவை யாவற் றையும் சூழ்ந்து நிற்கிறாரோ அந்த சமர்த்த சாயியை சாஷ்டாங் கமாக நமஸ்கரிக்கிறோம்.

Wednesday, May 7, 2014

பாபாவின் அறிவுரைகள் - பகுதி 8

Image

ஒவ்வொருவரும் தனது ஆத்மாவை தூய்மையாக வைத்திருந்தால் நிச்சயம் நிம்மதியாக வாழமுடியும். உலகில் பிறந்தோருக்கு அவரவர் கர்மப்படி உரிய காலத்தில் மரணம் உண்டு. இறை கீர்த்தனையை முழுமையான மன ஒருமைப்பாட்டுடன் பாராயணம் செய்யும் போது அவருக்கு நிச்சயம் சாட்சாத்காரம் கிடைக்கும்.

நீ என் தாசனாக மாறு! – பகுதி 3

Image

பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது:



மனதை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்:



 



நிறைய பக்தர்கள் படிக்கிறார்கள், ஆனால் அதைப்பின்பற்றுவதில்லை. மேலோட்டமாகப் படிப்பதால் மனம் சுத்தமாகாது, விக்ஷயமும் தெரியாது. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.



அந்தக் காலத்தில் நிறைய மகான்கள் விஷ்ணு சகஸ்ர நாமாவளியைக் கொடுத்து மக்களைப் படிக்கவைத்தார்கள். விஷ்ணு சகஸ்ர நாமா வளியைப்படிப்பதோ, பாராயணம் செய்வதோ நம் மனத்தைத் தூய்மை செய்து கொள்வதற்கு சுலபமான நேர்வழிப்பாதையாகும்.



நால்வர் தேவாரத்தில் சிவனைப் போற்றுகிற போற்றிகள் நிறைய உள்ளன. இவற்றை பாராயணம் செய்தார்கள். நமக்கு இவை வேண்டா எனத் தோன்றினால், சாயி சத்சரித்திரம் உள்ளது.



இதை வார்த்தை வார்த்தையாகப் படிக்கவேண்டும். படித்தால் மனம் சுத்தமாகிவிடும்.

Tuesday, May 6, 2014

பாபாவின் அறிவுரைகள் - பகுதி 7

Image

இறைவனைக் காண மனமே ஆதாரம். ஆனால் அது எளிதில் அடங்காது. முரட்டுத் தனமான அதை எப்படியும் அடக்க வேண்டும். தறிகெட்டு ஓடும் மனம் இறைவனிடம் ஒன்றுபடாதலால் பிறவியும் சம்சாரமும் தவிர்க்க முடியாதது ஆகிறது.



உண்மை எது உண்மையற்றது எது என்பவற்றைக் கண்டு அறிவதே விவேகம் ஆகும். ஸ்ரீ ஹரியைப் பற்றி அறியாமல் பண்டரிபுரம் போய் வருவதில் என்ன அர்த்தம் உண்டு. ஸ்ரீ ஹரியைப் பற்றி அறியாமல் அங்கு சென்று வருவதே பிறரது மதிப்பைப் பெறச் செய்யப்படுவதேயன்றி, பக்தியோடு செய்யப்படுவதே அல்ல.



புண்ணியங்களில் எல்லாம் சிறந்த புண்ணியம் பிறர் இன்பம் கண்டு தான் இன்புறுவதே. பிறர் துன்பம் கண்டு தான் இன்புறுவதைப் போன்ற பாவம் வேறு இல்லை. ஒருபோதும் அதுபோல் நடந்துக் கொள்ளாதீர்கள்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...