Friday, November 30, 2012

பாபா கடவுளா?



பாபா கடவுளா?
பாபாவை ஒரு ஞானி என்று சொல்லலாமே தவிர, கடவுள் என்று சொல்வது தகுமா? இறந்தவரை வழிபடுவதைப் போலத்தானே அவரை வழிபடுகிறோம்?

-          கே.பிரகதி, தஞ்சை.



        நமது உணர்வுகளுக்கும், உண்ர்ந்திருப்பதற்க்கு ஏற்பவும் மட்டுமே நாம் பிறரை எடைபோடுகிறோம். ஞானிகள் விஷயத்திலும் இப்படித்தான் நினைக்கிறோம்.

ஜ்ஞானி து ஆத்மைவ மே மதம்

என்று கீதையில் சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்துப் படியுங்கள். இதில் ஞானியானவன் நானே என்று பகவான் சொல்லியிருக்கிறார். உங்கள் கருத்துப்படி பார்த்தால் சிவனைத் தவிர பிற தெய்வ மூர்த்தங்கள் அனைத்துமே இறந்தவர் கணக்குத்தான். அப்படியிருந்தபோதும் நீங்கள் ஏன் சிவனை மட்டுமே உபாசிக்கவில்லை?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

             தெய்வத்துள் வைக்கப்படும்

என்று வள்ளுவர் கூறியதை அறிவீர்களா?  ஞானி மட்டுமில்லை, பகவானையும் மற்ற உயிர்கள் அனைத்தையும் வேற்றுமையின்றி யார் அன்பு காட்டி நேசிக்கிறாரோ அவரே கடவுள். அப்படி அன்பு காட்டி நேசித்த பாபா கடவுள்.

         கடவுளும் ஞானியும் ஒரு சேர தோன்றினால் குருவே அதாவது ஞானியே வணங்கத்தக்கவர். அவரே இறைவன் கோட்பாடுகளை எடுத்துக்கூறி நம்மை வழிநடத்துகிறார். அவர் கடவுளை விடவும் மேலானவர்.

         பாபாவை ருசித்துப் பார்த்தால் பாபா கடவுளா? செத்தவரா? என்பது தெரியும். அவர் பரமாத்மா, பரப்பிரம்மம், அந்தர்யாமி, ஆதி அந்தம் இல்லாத வேத முதல்வன். இப்படி நிறைய உணர்ந்து கொள்ள முடியும். காலம் உங்களுக்கு கற்றுத்தரும். 







                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

தொடர் கஷ்டம் ஏன்?



தொடர் கஷ்டம் ஏன்?
எவ்வளவு தூரம் கடவுளை வழிபட்டாலும் கஷ்டம் போவதில்லையே ஏன்?

-          ஆர் கோகிலா, சென்னை 14



            அழுதாலும் பிள்ளையை அவள்தான் பெறவேண்டும் என்று இருப்பதால்!  கடவுளைப் பிடித்துக்கொள் என உபாயமாகச் சொன்னாலும் எப்போதும் கவலையையே பிடித்துக்கொண்டிருப்பதால்!  கடவுளை வழிபட்டுக்கொண்டு கஷ்டத்தையே தியானித்துக்கொண்டு இருப்பதால் கஷ்டம் போகாமல் நிலையாக இருக்கும்.



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

Thursday, November 29, 2012

சிஷ்யனாக இருக்க



சிஷ்யனாக இருக்க

குருவை உபாசிக்கவும் சிஷ்யனாக இருக்கவும் என்னென்ன தகுதிகள் தேவை?

-          எம்.ஸ்ரீதரன், சின்ன காஞ்சிபுரம்



         சிஷ்யன் கர்வம் இல்லாதவனாகவும், பொறாமை இல்லாதவனாகவும், மமதை இல்லாதவனாவும், குறை பட்டுக்கொள்ளும் இயல்பு இல்லாதவனாவும் இருக்கவேண்டும்.  வீண் பேச்சு பேசாதவனாகவும், சாமர்த்தியம், திடமான அன்பு உள்ளவனாகவும் இருக்கவேண்டும். அவசரப்படாதவனாக இருக்கவும் வேண்டும்.

         எந்நேரமும் குரு சேவை செய்வதிலேயே கண்ணாக இருப்பவர். குருவின் ஆணைக்குக் கீழ்படிபவர். இஷ்டமான செயலா, இஷ்டமற்ற செயலா என்பது பற்ரி ஆராய்ச்சிகள் செய்யாதவர். கவலைகளை எல்லாம் குருவின் தலைச்சுமைக்கு விட்டுவிடுகிறவரே சிஷ்யராக இருப்பதற்க்கு தகுதியானவர்.

         குருவின் ஆணைக்கு அவர் அடிமை. சுதந்திரமான கருத்து என்பது அவருக்கு இல்லை. குருவின் வசனத்தை எந்நேரமும் பரிபாலனம் செய்யும் ஆர்வத்தில் நல்லதா கெட்டதா என்ற ஆராய்ச்சியும் அங்கில்லை.

          சிந்தனையை குருவின் நினைவில் வைத்து அவரது பாதங்களில் நிலை பெற்றும், மனம் அவரது தியானத்திலேயே ஈடுபட்டும், தேகம் முழுதும் குரு சேவைக்கு அர்ப்பணமாகும் நிலை பெற்றவரே சிஷ்யன்.



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

புத்திசாலித்தனம்



புத்திசாலித்தனம்

புத்திசாலித்தனத்தை எந்த இடத்தில் பயன்படுத்தலாம்?  காரியம் பெரிதா?  வீரியம் பெரிதா?

-          பி.லலிதா, சென்னை 94.



        பிறருக்கு சேவை செய்யும் நோக்கில் இடையூறு ஏதேனும் வந்தால் அந்த இடத்தில் பயன்படுத்தலாம். இடையூறு செய்பவரே போற்றும் அளவுக்கு புத்திசாலித்தனம் இருக்கவேண்டும். இதற்கு உதாரணம் அனுமன்.


        அனுமன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்த தேவர்கள், அவரை சோதிக்க நாகர்களின் தாயான  சுரஸை என்பவளை அனுப்பி இடையூறு செய் எனச் சொன்னார்கள்.

        அவளும் அனுமன் எதிரே வந்து நின்று, எனக்குப் பசிக்கிறது, வாயை அகலமாகத திறக்கிறேன், அதில் புகுந்துவிடு என்றாள்.

       ராம காரியமாகப் போகிறேன், அது முடிந்ததும் நானே உன் வாயில் புகுந்துவிடுகிறேன் என்றார் அனுமன்.

        “அது முடியாது. முடிந்தால் என் வாய்க்குள் புகுந்து வெளியேறு இல்லையென்றால் உன்னைக் கடித்தே தின்றுவிடுவேன்  என்றாள் சுரஸை.

        “தாயே வாயைத் திற. அதில் புகுந்து வெளியேறுகிறேன்என்றார் அனுமன். வாயை அகலமாகத் திறக்கத் திறக்க அதற்கு இரண்டு மடங்கு அதிகமாக பெரிய உருவத்தை அனுமன் எடுத்தார்.

         ஐம்பது யோஜனை நீளம் வாய் பெரிதானதும், மிகக்குறுகிய உருவத்தை அடைந்து, உடனே வாய்க்குள் போய் வெளியே வந்துவிட்டு, “அம்மையே நமஸ்காரம். உன் வாய்க்குள் புகுந்து வெளியே வந்துவிட்டேன் என்றார்.

             “அறிவில் சிறந்தவனே, நீ எடுத்த காரியம் ஜெயமாகும்என  வாழ்த்தி அனுப்பினாள் சுரஸை.

          இங்கே அனுமன் வீரியத்தைக் காட்டவில்லை. காரியத்தைப் பெரிதாக எடுத்துக் கொண்டார். சீதையைக் கண்டுவிட்டு வந்ததும் “கண்டேன் சீதையைஎன்றார். இவரை கம்பர் “சொல்லின் செல்வர்என்று போற்றுகிறார்.

 

                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

Wednesday, November 28, 2012

இதுதான் காரணமா?



இதுதான் காரணமா?

உங்களைப் பார்த்ததும் ஒரு நம்பிக்கை , தைரியம் தானாகவே வந்துவிடுகி
றதே..... இது எப்படி?

-          கே.ஜி.பாஸ்கரன், சென்னை 40





         அடச்சீ! இவனைப் பார்த்தால் அப்படியொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. இவனே இந்தளவுக்குப் பேசுகிறான், நடக்கிறான். இவனுக்கே இவ்வளவு செய்யும் போது, பாபா எனக்குச் செய்யமாட்டாரா என்ன? என்று நீங்கள் உங்கள் மனதி நினைத்துக் கொள்வதால் இருக்கலாம்.







                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

தேவை பக்தி



தேவை பக்தி

பாபாவிடம் வேண்டியதைப் பெறுவதற்க்கு ஒன்பது வார விரதம், வியாழக்கிழமை விரதம், தேங்காய் மந்திரித்துத் தருதல் போன்றவற்றைச் செய்கிறார்கள். முக்கியமாக இதில் எதைப் பின்பற்றலாம்?

-          கே.ராஜா, செங்கல்பட்டு.



        இவை எதனாலும் முழுமையாக பாபாவின் அருளைப் பெற்றுவிடமுடியாது. பிரேமை மிகுந்த பாசகாரப் பக்தி ஒன்றினால் மட்டுமே அவரது அருளினைப் பெற இயலும். விரதமெல்லாம் எதிர்பார்ப்புக்காக செய்வது. பகவானிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பக்தி செய்யும்போது அவன் நமக்கு வேண்டியதை செய்துவிடுவான்.





                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

Tuesday, November 27, 2012

காணவில்லையே!



காணவில்லையே!

இதற்கு முன்பெல்லாம் ஆலயத்தில் அடிக்கடி உங்களைப் பார்க்க முடிந்தது. இப்போது எங்கே காணவில்லையே! ஏன்?

-          எஸ். காஞ்சனா, மைலாப்பூர்.

         இதற்கு முன்பெல்லாம் பெரும்பாலும் தனிமையில் இருப்பதை விரும்புவேன். இப்போது  அதை சிறிது மாற்றிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் சீரடிக்குப் போகும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலையிலோ மாலையிலோ கண்டிப்பாக பெருங்களத்தூர் ஆலயத்தில் இருப்பதை வழக்கமாகத்தான் வைத்திருக்கிறேன்.

         சில நேரங்களில் சாயி பக்தர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்றும் அதற்காகவே வந்ததாகவும் சொல்லிக் கூப்பிடும்போது அவர்களைத் தவிர்த்து விடுகிறேன். காரணம், பாபா அற்புதமான கடவுள். அவரைப் பார்த்து மனமுருக வேண்டுதலே போதும்.

         உதாரணமாக, காகாஜி என்ற சப்தஷ்ரிங்கி கோயில் பூசாரி பாபாவை தரிசிக்க வந்தார். அதற்கு முன்புவரை அவரது மனம் ஏதோ குழப்பத்திலேயே இருந்தது. பாபாவைப் பார்த்தார். பாபா பேசவில்லை, ஆசிர்வதிக்கவில்லை, வெறும் தரிசனம் ஒன்றே அவரை அமைதிப்படுத்தி, மகிழ்ச்சிக்கு அடிகோலியது. இது சத் சரித்திரத்தில் பதிவாகியுள்ளது. இதுதான் சாயி தரிசனத்தின் பெருமை. இதை உணராமல் சாயி வரதராஜனைப் பார்த்தால் என்ன ஆகப்போகிறது?

         என்னைப் பார்க்க உண்மையிலேயே என் மீது பக்தியோடும், நம்பிக்கையோடும் வருகிற சாயி கலியன், அனந்த ராமன், ரமா போன்ற ஒரு சில தூய பக்தர்களின் பிரச்சனைகள் இன்னும் தீராமல் அப்படியேத்தானே கிடக்கின்றன. எனக்குச் ச்க்தியிருந்தால் அவர்கள் துயரத்தினை ஒரு நொடியில் களைந்திருக்கமாட்டேனா?

        நானே அவனது பாதங்களைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.  நீங்களும் வந்து பிடித்துக்கொள்ளுங்கள் என்று வழிகாட்டினால், அவனது பாதத்தினைப் பிடிக்காமல் என்னைத் தேடுவது ஏன் தாயே!   





                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

தொடர் கஷ்டம் ஏன்?



தொடர் கஷ்டம் ஏன்?

நான் என் நண்பனுக்கு சாயியைப் பற்றிக்கொள்.  அவர் உன்னை கஷ்டங்களில் இருந்து விடுவிப்பார் என்று சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறான். எப்படி கேட்க வைப்பது?

-          கே.ராஜா, செங்கல்பட்டு



              பாபா கேட்கவைக்காதபோது நம்மால் முடியாது. இறக்கும் தருவாயில் இருப்பவன் மருந்து சாப்பிட மறுப்பான். அதுபோலத்தான் கஷ்டத்திலிருந்து விடுபடும் வாய்ப்பு இல்லாதவன் நன்மை பயக்கும் சாயி நாமத்தினை அலட்சியம் செய்வான்.    



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

Monday, November 26, 2012

வியாழக்கிழமை விரதம்



வியாழக்கிழமை விரதம்

வியாழக்கிழமை தோறும் விரதம் இருக்கும் சாயி பக்தர்கள் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் விரத பூஜைகள் அனுசரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வீட்டில் விரதம் இருக்க முடியாதவர்கள் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த பூஜையினை மையத்தில் செய்து கொள்ளலாம். அன்னதானத்தினை இங்கேயே விநியோகமும் செய்யலாம். விரதமிருக்க விரும்பும் தாய்மார்கள், நமது பிரார்த்தனை மையத்தினை அணுகலாம்.

விபரங்களுக்கு:

ஸ்ரீ சீரடி சாயி பாபா பிரார்த்தனை மையம்
கல்கி தெரு, புதுபெருங்களத்தூர்
சென்னை 600 063.
அலைபேசி எண்
9094033288
9841203311

நீ பூரணமாக இரு



நீ பூரணமாக இரு!

     அமைதியான மனத்துடன் இருங்கள். உங்கள் கஷ்டங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டன. படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவிலிருந்து புல் பூண்டு வரை இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிலவி இருக்கும் அளவற்றதும் முடிவற்றதும் பூரணமானதுமான முழு முதற் பொருளே பாபாவாக உரு எடுத்து நம்மிடம் வந்துள்ளது. இதுவரைக்கும் கஷ்டம் முடிவுக்கு வராத நிலை தொடருமானால் உங்கள் நிலையை சரிபார்த்துக்கொள்ளுங்கள். அதாவது நீங்கள் இதுவரை பூரணப்படவில்லை என்பது பொருள். பூரணமாக என்ன செய்யவேண்டும்?



       உங்களிடம் என்னவெல்லாம் தேவையில்லாமல் இருக்கிறதோ அதையெல்லாம் வெட்டவேண்டும். பணப்பெருமை, குலப்பெருமை, ஜாதிப்பெருமை, கல்விச்செருக்கு, பக்திச்செருக்கு என எதுவாக இருந்தாலும் அவற்றை உடனடியாக விட்டுவிட வேண்டும். இவை உங்களுக்கு நன்மை தருவதுபோல தெரியலாம். பிறருக்கு நன்மை தராது. ஆகவே உங்கள் நலனுக்குத் தீங்காகவே இருக்கும்.



       அதேபோல, வறுமை, ஏழ்மை, தாழ்வு மனப்பான்மை, குலத் தாழ்ச்சியாக நினைத்தல், பிறரை விட வசதி குறைவு என எண்ணுதல் போன்றவையும் பாவங்களாகும். இவற்றையும் மனதிலிருந்து எடுத்து அப்புறம் போடவேண்டும். இவற்றால் உங்களுக்கு எந்த நன்மையும் தீமையும் கிடையாது.



       வாழ்க்கை வாழ்வதற்காகத் தரப்பட்டுள்ளது. நீங்கள் வாழ்வது போலவே பிறர் வாழவும் நினைத்தால் உங்கள் துன்பங்கள் முற்றுப் பெற்றுவிடும்.



       நான் இப்படி எழுதக் காரணம் என்னவென்று எனக்குத் தெரியாது. என்னைக் கருவியாகக் கொண்டு சாயியே இவற்றை எழுதி வாங்குகிறார்.  அவருக்குத்தான் இதன் பிரயோசனம் என்னவெனத் தெரியும். எந்த சக்தி என்னை எழுதத் தூண்டுகிறதோ அந்த சாயி சக்தி உங்களைக் காப்பாற்றும். இதில் துளியளவும் சந்தேகமில்லை.



       குரு பக்தியின் மகிமையையும், வேறு எதையும் நாடாமல் சாயி பாதத்தைப் பிடித்துக் கொள்வதின் நன்மையையும் அனுபவித்து உணர்ந்து கொள்ளுங்கள்.



       வாழ்க்கையின் சிறப்பு எங்கே இருக்கிறது (சாயியின் பாதங்களில்) என்பதை முதலாவது நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போதுதான் தடைகளை வெல்ல முடியும். தடைகள் என்பவை நம்மை தொலைத்துவிடும் தொல்லைகள் அல்ல. நம்மை முன்னேற்றிச்செல்லத் தூண்டுபவை. எனவே நம்மோடு இருக்கும் சாயியின் துணை கொண்டு முன்னேறிச் செல்லுங்கள்.



       நம் சாயி பூரணமானவர். அவர் படைத்த உலகம் பூரணமானது. அவரது அருளும் பூரணமானது. அவரது படைப்புகளான நாமும் பூரணமாக இருக்கவேண்டும். அதற்கு ஒரே வழி அவர் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பது.

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே!

பூர்ணஸ்ய பூர்ணமாதய பூர்ணமேவாவசிஷ்யதே!
                                       - சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்
வெளிவந்த கட்டுரை

Sunday, November 25, 2012

தோல்வி என்பது நிரந்தரமல்ல


சாயி பக்தன் என்றும் தோற்கவே மாட்டான்

சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில் வெளியான கட்டுரை


Saturday, November 24, 2012

சென்னை நங்க நல்லூர் கருப்பு பாபா

சென்னை நங்க நல்லூர் கருப்பு பாபா
சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில் வெளியான கட்டுரை

Friday, November 23, 2012

குழந்தை வரம் தருவார் பாபா

குழந்தை வரம் தருவார் பாபா
சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில் வெளியான கட்டுரை



குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...