காணவில்லையே!
இதற்கு முன்பெல்லாம் ஆலயத்தில்
அடிக்கடி உங்களைப் பார்க்க முடிந்தது. இப்போது எங்கே காணவில்லையே! ஏன்?
-
எஸ். காஞ்சனா, மைலாப்பூர்.
இதற்கு முன்பெல்லாம் பெரும்பாலும் தனிமையில் இருப்பதை விரும்புவேன். இப்போது அதை சிறிது மாற்றிக்கொண்டிருக்கிறேன்.
பெரும்பாலும் சீரடிக்குப் போகும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலையிலோ மாலையிலோ
கண்டிப்பாக பெருங்களத்தூர் ஆலயத்தில் இருப்பதை வழக்கமாகத்தான் வைத்திருக்கிறேன்.
சில நேரங்களில் சாயி பக்தர்கள் என்னைப்
பார்க்க வேண்டும் என்றும் அதற்காகவே வந்ததாகவும் சொல்லிக் கூப்பிடும்போது
அவர்களைத் தவிர்த்து விடுகிறேன். காரணம், பாபா அற்புதமான கடவுள். அவரைப் பார்த்து
மனமுருக வேண்டுதலே போதும்.
உதாரணமாக, காகாஜி என்ற சப்தஷ்ரிங்கி
கோயில் பூசாரி பாபாவை தரிசிக்க வந்தார். அதற்கு முன்புவரை அவரது மனம் ஏதோ
குழப்பத்திலேயே இருந்தது. பாபாவைப் பார்த்தார். பாபா பேசவில்லை,
ஆசிர்வதிக்கவில்லை, வெறும் தரிசனம் ஒன்றே அவரை அமைதிப்படுத்தி, மகிழ்ச்சிக்கு
அடிகோலியது. இது சத் சரித்திரத்தில் பதிவாகியுள்ளது. இதுதான் சாயி தரிசனத்தின்
பெருமை. இதை உணராமல் சாயி வரதராஜனைப் பார்த்தால் என்ன ஆகப்போகிறது?
என்னைப் பார்க்க உண்மையிலேயே என் மீது
பக்தியோடும், நம்பிக்கையோடும் வருகிற சாயி கலியன், அனந்த ராமன், ரமா போன்ற ஒரு சில
தூய பக்தர்களின் பிரச்சனைகள் இன்னும் தீராமல் அப்படியேத்தானே கிடக்கின்றன.
எனக்குச் ச்க்தியிருந்தால் அவர்கள் துயரத்தினை ஒரு நொடியில் களைந்திருக்கமாட்டேனா?
நானே அவனது பாதங்களைப் பிடித்துக் கொண்டு
உட்கார்ந்திருக்கிறேன். நீங்களும் வந்து
பிடித்துக்கொள்ளுங்கள் என்று வழிகாட்டினால், அவனது பாதத்தினைப் பிடிக்காமல்
என்னைத் தேடுவது ஏன் தாயே!
- சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்
வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து
No comments:
Post a Comment