புத்திசாலித்தனம்
புத்திசாலித்தனத்தை எந்த இடத்தில்
பயன்படுத்தலாம்? காரியம் பெரிதா? வீரியம் பெரிதா?
-
பி.லலிதா, சென்னை – 94.
பிறருக்கு சேவை செய்யும் நோக்கில் இடையூறு
ஏதேனும் வந்தால் அந்த இடத்தில் பயன்படுத்தலாம். இடையூறு செய்பவரே போற்றும்
அளவுக்கு புத்திசாலித்தனம் இருக்கவேண்டும். இதற்கு உதாரணம் அனுமன்.
அனுமன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப்
பறந்து கொண்டிருந்ததைப் பார்த்த தேவர்கள், அவரை சோதிக்க நாகர்களின் தாயான சுரஸை என்பவளை அனுப்பி இடையூறு செய் எனச்
சொன்னார்கள்.
அவளும் அனுமன் எதிரே வந்து நின்று, ”எனக்குப் பசிக்கிறது, வாயை அகலமாகத திறக்கிறேன்,
அதில் புகுந்துவிடு” என்றாள்.
”ராம
காரியமாகப் போகிறேன், அது முடிந்ததும் நானே உன் வாயில் புகுந்துவிடுகிறேன்” என்றார் அனுமன்.
“அது முடியாது. முடிந்தால் என்
வாய்க்குள் புகுந்து வெளியேறு இல்லையென்றால் உன்னைக் கடித்தே தின்றுவிடுவேன்” என்றாள்
சுரஸை.
“தாயே வாயைத் திற. அதில் புகுந்து
வெளியேறுகிறேன்” என்றார் அனுமன்.
வாயை அகலமாகத் திறக்கத் திறக்க அதற்கு இரண்டு மடங்கு அதிகமாக பெரிய உருவத்தை
அனுமன் எடுத்தார்.
ஐம்பது யோஜனை நீளம் வாய் பெரிதானதும்,
மிகக்குறுகிய உருவத்தை அடைந்து, உடனே வாய்க்குள் போய் வெளியே வந்துவிட்டு,
“அம்மையே நமஸ்காரம். உன் வாய்க்குள் புகுந்து வெளியே வந்துவிட்டேன்” என்றார்.
“அறிவில் சிறந்தவனே, நீ எடுத்த காரியம்
ஜெயமாகும்” என வாழ்த்தி அனுப்பினாள் சுரஸை.
இங்கே அனுமன் வீரியத்தைக் காட்டவில்லை.
காரியத்தைப் பெரிதாக எடுத்துக் கொண்டார். சீதையைக் கண்டுவிட்டு வந்ததும் “கண்டேன்
சீதையை” என்றார். இவரை கம்பர் “சொல்லின் செல்வர்” என்று போற்றுகிறார்.
- சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்
வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து
nice..
ReplyDeleteநன்றி சாய்ராம்
ReplyDeleteதொடர்ந்து வாருங்கள்
சாயி வரதராஜன்