Monday, November 26, 2012

நீ பூரணமாக இரு



நீ பூரணமாக இரு!

     அமைதியான மனத்துடன் இருங்கள். உங்கள் கஷ்டங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டன. படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவிலிருந்து புல் பூண்டு வரை இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிலவி இருக்கும் அளவற்றதும் முடிவற்றதும் பூரணமானதுமான முழு முதற் பொருளே பாபாவாக உரு எடுத்து நம்மிடம் வந்துள்ளது. இதுவரைக்கும் கஷ்டம் முடிவுக்கு வராத நிலை தொடருமானால் உங்கள் நிலையை சரிபார்த்துக்கொள்ளுங்கள். அதாவது நீங்கள் இதுவரை பூரணப்படவில்லை என்பது பொருள். பூரணமாக என்ன செய்யவேண்டும்?



       உங்களிடம் என்னவெல்லாம் தேவையில்லாமல் இருக்கிறதோ அதையெல்லாம் வெட்டவேண்டும். பணப்பெருமை, குலப்பெருமை, ஜாதிப்பெருமை, கல்விச்செருக்கு, பக்திச்செருக்கு என எதுவாக இருந்தாலும் அவற்றை உடனடியாக விட்டுவிட வேண்டும். இவை உங்களுக்கு நன்மை தருவதுபோல தெரியலாம். பிறருக்கு நன்மை தராது. ஆகவே உங்கள் நலனுக்குத் தீங்காகவே இருக்கும்.



       அதேபோல, வறுமை, ஏழ்மை, தாழ்வு மனப்பான்மை, குலத் தாழ்ச்சியாக நினைத்தல், பிறரை விட வசதி குறைவு என எண்ணுதல் போன்றவையும் பாவங்களாகும். இவற்றையும் மனதிலிருந்து எடுத்து அப்புறம் போடவேண்டும். இவற்றால் உங்களுக்கு எந்த நன்மையும் தீமையும் கிடையாது.



       வாழ்க்கை வாழ்வதற்காகத் தரப்பட்டுள்ளது. நீங்கள் வாழ்வது போலவே பிறர் வாழவும் நினைத்தால் உங்கள் துன்பங்கள் முற்றுப் பெற்றுவிடும்.



       நான் இப்படி எழுதக் காரணம் என்னவென்று எனக்குத் தெரியாது. என்னைக் கருவியாகக் கொண்டு சாயியே இவற்றை எழுதி வாங்குகிறார்.  அவருக்குத்தான் இதன் பிரயோசனம் என்னவெனத் தெரியும். எந்த சக்தி என்னை எழுதத் தூண்டுகிறதோ அந்த சாயி சக்தி உங்களைக் காப்பாற்றும். இதில் துளியளவும் சந்தேகமில்லை.



       குரு பக்தியின் மகிமையையும், வேறு எதையும் நாடாமல் சாயி பாதத்தைப் பிடித்துக் கொள்வதின் நன்மையையும் அனுபவித்து உணர்ந்து கொள்ளுங்கள்.



       வாழ்க்கையின் சிறப்பு எங்கே இருக்கிறது (சாயியின் பாதங்களில்) என்பதை முதலாவது நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போதுதான் தடைகளை வெல்ல முடியும். தடைகள் என்பவை நம்மை தொலைத்துவிடும் தொல்லைகள் அல்ல. நம்மை முன்னேற்றிச்செல்லத் தூண்டுபவை. எனவே நம்மோடு இருக்கும் சாயியின் துணை கொண்டு முன்னேறிச் செல்லுங்கள்.



       நம் சாயி பூரணமானவர். அவர் படைத்த உலகம் பூரணமானது. அவரது அருளும் பூரணமானது. அவரது படைப்புகளான நாமும் பூரணமாக இருக்கவேண்டும். அதற்கு ஒரே வழி அவர் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பது.

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே!

பூர்ணஸ்ய பூர்ணமாதய பூர்ணமேவாவசிஷ்யதே!
                                       - சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்
வெளிவந்த கட்டுரை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...