Thursday, November 29, 2012

சிஷ்யனாக இருக்க



சிஷ்யனாக இருக்க

குருவை உபாசிக்கவும் சிஷ்யனாக இருக்கவும் என்னென்ன தகுதிகள் தேவை?

-          எம்.ஸ்ரீதரன், சின்ன காஞ்சிபுரம்



         சிஷ்யன் கர்வம் இல்லாதவனாகவும், பொறாமை இல்லாதவனாகவும், மமதை இல்லாதவனாவும், குறை பட்டுக்கொள்ளும் இயல்பு இல்லாதவனாவும் இருக்கவேண்டும்.  வீண் பேச்சு பேசாதவனாகவும், சாமர்த்தியம், திடமான அன்பு உள்ளவனாகவும் இருக்கவேண்டும். அவசரப்படாதவனாக இருக்கவும் வேண்டும்.

         எந்நேரமும் குரு சேவை செய்வதிலேயே கண்ணாக இருப்பவர். குருவின் ஆணைக்குக் கீழ்படிபவர். இஷ்டமான செயலா, இஷ்டமற்ற செயலா என்பது பற்ரி ஆராய்ச்சிகள் செய்யாதவர். கவலைகளை எல்லாம் குருவின் தலைச்சுமைக்கு விட்டுவிடுகிறவரே சிஷ்யராக இருப்பதற்க்கு தகுதியானவர்.

         குருவின் ஆணைக்கு அவர் அடிமை. சுதந்திரமான கருத்து என்பது அவருக்கு இல்லை. குருவின் வசனத்தை எந்நேரமும் பரிபாலனம் செய்யும் ஆர்வத்தில் நல்லதா கெட்டதா என்ற ஆராய்ச்சியும் அங்கில்லை.

          சிந்தனையை குருவின் நினைவில் வைத்து அவரது பாதங்களில் நிலை பெற்றும், மனம் அவரது தியானத்திலேயே ஈடுபட்டும், தேகம் முழுதும் குரு சேவைக்கு அர்ப்பணமாகும் நிலை பெற்றவரே சிஷ்யன்.



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...