Wednesday, July 24, 2013

சாயி - ஷிர்டி பாபாவின் புனித சரிதம்-7




சாயி  - ஷிர்டி பாபாவின் புனித சரிதம் - குங்குமம் இதழில் தொடராக வந்து கொண்டுள்ளது. அற்புத நடை. சரிதத்தின் மொழி பெயர்ப்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் ஒன்று.

இதன்   பகுதி 7  னை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Thursday, July 18, 2013

சாயி - ஷிர்டி பாபாவின் புனித சரிதம்-6





சாயி  - ஷிர்டி பாபாவின் புனித சரிதம் - குங்குமம் இதழில் தொடராக வந்து கொண்டுள்ளது. அற்புத நடை. சரிதத்தின் மொழி பெயர்ப்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் ஒன்று.

இதன்   பகுதி 6  னை படிக்க  இங்கே கிளிக் செய்யவும்

Sunday, July 14, 2013

உனக்குப் புதுவாழ்வு தருவேன்-2





கிழக்காசியாவில் ராணுவ மருத்துவமனையில் பணி செய்து, சம்பாதித்த
அனைத்தையும் இழந்து, நோயினால் ஒரு காலும் துண்டிக்கப்பட்டு,
நிராதரவான நிலையில் நின்ற ஒரு பக்தருக்கு சாயி எப்படி அனுக்கிரகம்
செய்தார் என்பதை அவரது வாய் மொழியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

நேற்றைய தொடர்ச்சி…..
முந்தைய பகுதியினை படிக்க இங்கு செல்லவும்
என் தங்கை மகன் ஒரு சிறிய பாபா போட்டோவை தந்து, ’மாமா, பயப்படாதே, இவர் உங்களை முழுமையாகக் காப்பாற்றுவார்’, என்றான்.
இதுதான் பாபாவுடன் எனது முதல் அறிமுகம். அறுவை சிகிச்சை நடந்தபோது, வலி தாங்க முடியாமல் ’பாபா’ எனக் கத்தினேன்.  அப்போது, ஒரு விசாலமான காட்சியை என்னால் காண முடிந்தது. அக்கம் பக்கம் எதுவுமே இல்லாத நிலையில் மிகப்பெரிய ஒளிப்பிழம்பும் அதன் நடுவே, ஆசீர்வதிக்கும் கரங்களோடு சீரடி பாபாவும் தோன்றியதைக் கண்டேன். பொறுமையாக இரு என்பதைப்போல பாபாவின் கரங்கள் எனக்குத் தெரிந்தன.
பாபா என நான் கத்தியதைக் கவனித்த டாக்டர்கள், ’நீங்கள் பாபா பக்தரா? பாபாவைப் பற்றி தெரியுமா?’, எனக் கேட்டார்கள்.
’தெரியாது. இப்போது தான். அவரது போட்டோவைக் கொடுத்தார்கள்’  என்றேன் .  அதன் பிறகு வாழ்வில் படிப்படியாக சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன.
இந்த நிலையில் பாபா மாஸ்டர் அருணாச்சலம் ஐயா அவர்களை தரிசிக்க லாஸ் பேட்டை சென்றேன். எனக்காகப் பிரார்த்தனை செய்து, ஆசீர்வதித்ததோடு, சாயி தரிசனம் என்ற புத்தகத்தைக் கொடுத்து, அதன் ஆசிரியருக்குப் போன் போட்டு என்னைப் பேசுமாறு கூறினார். சாயி வரதராஜன் எனக்காகப் பிரார்த்தனை செய்வதாகச் சொன்னார். பாபா மாஸ்டர் கொடுத்த அந்தப் புத்தகத்தை படுக்கை அருகில் வைத்துக்கொண்டேன். உறக்கம் வராததால் புரண்டு புரண்டு படுத்தேன். அப்போது மணி பதினொன்னே முக்கால் இருக்கும், உறக்கம் வராத நிலையில் அந்தப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன்.
அதில் சாயியின் குரல் என்ற தலைப்பிலான ’நான் இன்று உன்னை சந்திக்க வந்திருக்கிறேன்’ என்ற கட்டுரை இருந்தது.  2012 செப்டம்பர் மாத இதழ், தலைப்பை பார்த்தபோது, இது உளவியல் ரீதியாக ஒரு வரை அணுகும் கட்டுரையாக இருக்கும் என நினைத்து, வாசித்தேன்.  என் வாழ்வில் நிகழ்ந்த பல வியங்கள் அதில் இருந்தன..
நிச்சயமாக இது உளவியல் சார்ந்த கட்டுரைதான் எனத் தீர்மானம் செய்துகொண்டு படுத்துவிட்டேன். மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது என்னை அறியாமல், இதுவரையில்லாத புத்துணர்வு எனக்குள் இருந்தது. அன்று காலையே, ரேன் கார்டுக்கான சரிபார்ப்பு செய்தார்கள்.  மூன்று சக்கர வாகனத்திற்காக நான் அனுப்பிய விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாகக் கடிதம் வந்தது.
இப்படியே அன்று நிறைய வியங்கள் நடந்தன. அப்போதுதான் நான், இது உளவியல் ரீதியான கட்டுரையல்ல, கடவுளின் வார்த்தை என்பதை மனப்பூர்வமாக உணர்ந்தேன். பாபா தன் பக்தருக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது பூரிப்பாக இருந்தது.
ஒருநாள் பெருங்களத்தூருக்குப் போன் செய்து எனது பிரச்சினைக்காக சாயி வரதராஜனிடம் பிரார்த்தனை செய்யச் சொன்னேன். அவர் செய்ததாக தெரியவில்லை, எனக்குத் திருப்தியில்லை.
‘அவர் எனக்காகப் பிரார்த்தனை செய்வதை உடனிருந்து பார்க்கவேண்டும்’ எனக் கூறினேன்.
சில நாட்கள் கழித்து பெருங்களத்தூர் பாபா ஆலயம் சென்று இருந்தேன். நீண்ட நேரத்திற்குப்பிறகு சாயி வரதராஜனும் மலேசியாவில் இருந்து வந்திருந்த சத்திய சீலன் என்ற மனோதத்துவ மருத்துவரும் ஒருவர் பின் ஒருவராக வந்தனர்.
நாங்கள் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம். பக்தர்கள் வர ஆரம்பித்த பிறகு, பிரார்த்தனை நடைபெற்றது.. எனக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. பிரார்த்தனை முடிந்த பிறகு, சாயி, ’ஒரு பெரியவர், சாயி வரதராஜன் எனக்காகப்பிரார்த்தனை செய்வதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று ஒரு நாள் போன் செய்தார், அவர் பார்த்திருப்பார் என நம்புகிறேன்’, என்றார். பார்த்தாகிவிட்டது என நான் தலையசைத்தேன்.
’திருப்தியா?’,  என்றார்.
முழுமையான திருப்திஎன்றேன் நான்.
பாண்டிச்சேரி மிக உன்னதமான பூமி. வேதபுரி என்றே அழைக்கப்பட்ட பகுதி அது. அங்கு சித்தர் பெருமக்களும், ரிஷிகளும் இன்னமும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். பாபா மாஸ்டர் அருணாசலம், கிருஷ்ணன் உன்னி போன்ற சாயி பக்தர்கள் பிறருக்காக பிரார்த்தனை செய்வதை வாழ்வாக வைத்திருக்கிறார்கள்.  ஆகவே, பயப்படாதீர்கள்’,  என்று கூறி அனுப்பினார்..
பாபா எனக்கு வேறு எதையும் செய்யத்தேவையில்லை. வயதான இந்தக் காலத்தில் உயிர்உள்ளவரை வாழ்வதற்குத் தேவையான ஆதாரத்தை பூர்த்தி செய்தால் போதும். எனக்கு யாரும் தர்மம் செய்ய வேண்டாம், டிரஸ்ஸிங் செய்யத் தெரியும், மருத்துவ உதவி தெரியும். இதைச் செய்ய வாய்ப்பும், அதற்குரிய ஊதியமும் கொடுத்தால் போதும் என்பதே எனது பிரார்த்தனை.
 அது விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு நான் பெருங்களத்தூரிலுள்ள ஆத்ம சாயியை கும்பிட்டு பாண்டிச்சேரியை நோக்கிக் கிளம்பினேன்.
ஜெய் சாய் ராம்.
பால சுப்பிரமணியம்
எண் 7. பதிமூன்றாவது  குறுக்குத் தெரு,
கிருஷ்ணா நகர், புதுச்சேரி - 8
போன் 9790411743

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...