நேற்றைய தொடர்ச்சி....
நாளைக்குப் பீர்க்கன்காரணையிலிருந்து நல்ல செய்தி வரும்
என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். எங்கள் சொந்த ஊர் கூடுவாஞ்சேரிக்கு அருகில் நெல்லிக்குப்பம்.
குல தெய்வமான வேண்டவராசி அம்மனை தரிசித்து மகன் திருமணம் பற்றி வேண்டிக்கொள்வதற்காக,
பெரியவர் வந்து சென்ற மறுநாள்
குடும்பத்தோடு சென்றிருந்தோம்.
அன்று வியாழன். கோயிலில் கூட்டம் அதிகம். அர்ச்சனை
செய்ய நீண்ட நேரமானால், பாபா கோயிலுக்குப்
போக முடியாதே என வருத்தத்துடன் நின்றிருந்தேன். அப்போது பக்கத்தில் ஒரு
காலிப்பூக்கூடை இருந்தது. அதனுள் பாபாவின் போட்டோ ஒன்று இருந்தது. நினைத்ததும்
பாபா தரிசனம் தருகிறார் என அதை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டோம்.
அர்ச்சனை முடிந்து மைலாப்பூர் பாபா ஆலயம் வந்து பாபாவை
தரிசித்துவிட்டு வீடு திரும்பினோம். அப்போது பெருங்களத்தூருக்கு அருகிலுள்ள
பீர்க்கன்காரணையிலிருந்து ஜோதிடர் ஒருவர் போன் செய்து, பெண் பற்றிய விவரத்தைச் சொல்லி, கண்டிப்பாக இதைப்பார்க்கவேண்டும் என்றார்.
என் மாப்பிள்ளை மற்றும் மகளை அனுப்பி வைத்தேன்.
அவர்களுக்குப் பெண்ணைப்பிடித்திருந்தது. என் மகனுக்கும் பிடித்துப்போயிருந்தது.
திருமணமும் நடந்து நான்கு வயதில் ரிஷி என்கிற
குழந்தையிருக்கிறான்.
நானும் என் மனைவியும் கொஞ்சம் ரிசர்வ் டைப் என்று
சொல்லலாம். யாரிடமும் பணம் கேட்பதை விரும்பமாட்டோம். இதனால் கடனை அடைக்க நினைத்து
1989 - ல், எனக்குத் தெரிந்த பிரிண்டர்
வேலையை அங்கு செய்வதற்காக ஒருவர் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றேன்.
அவர் மொத்தம் பதினாறு பேரை வேலைக்கு அழைத்துச்
சென்றிருந்தார். ஒரு வாரத்திற்கு எங்களுக்கு தரப்பட்ட சம்பளத்தை மாதச்சம்பளம் என்று
கூறிவிட்டு, மூன்று வார சம்பளத்தை
அவரே எடுத்துக்கொண்டிருக்கிறார். பல மாதங்கள் வரை தெரியாமலிருந்த இந்த தகவல்,
அங்கு வேலை செய்த சில ஆட்கள் மூலம்
தெரியவந்தது.
அவரிடம் கேட்ட போது அவர் மிரட்டலாக பதில் சொன்னார். பிழைப்புக்காக
வந்த இடத்தில் உழைப்பைத் திருடுகிறாய், நீ உருப்பட மாட்டாய் என அவரைச் சொன்னோம்.
பெங்களூரில் பெரிய வீடு கட்டி வாழ்ந்த அவர், ஒரு சில மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் நடந்த
கார் விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டார் அவரது உடல் சுமார் ஒன்னரை மாதம் வரை
தென்னாப்பிரிக்காவில் இருந்து அதன் பிறகு இந்தியா கொண்டுவரப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டது.
அதற்கு முன்னரே நாங்கள் வேலையை விட்டு விட்டு, இந்தியா திரும்பினோம். கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில்
எனக்கு கிட்னி பிரச்சினை ஏற்பட்டு, டாக்டர்
எச்.வி. ஹண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அறுவை சிகிச்சை செய்தாக
வேண்டும் என்ற நிலை. பணத்திற்கு என்ன செய்வது என திகைத்தேன். யாரிடமும் கேட்காமல் குணப்படுத்த
வேண்டும் என பாபாவிடம் வேண்டினேன்.
பிள்ளைகளிடம் கேட்கவேண்டாம் என நினைத்து பாபாவிடம் வேண்டினேன்.
என் மனைவி தனது தாலிச்சரடை அடகு வைத்து பணம் வாங்கி வருவதற்காக என்னை மருத்துவமனையில்
விட்டுச்சென்றாள். உடல் நிலை நன்றாக ஆனதும் சீரடி வருவதாக வேண்டிக்கொண்டேன்.
அன்று இரவு பாதி மயக்கத்தில் இருந்த போது, வெள்ளை நிறத்தில் ஓர் உருவம் வந்து என்
படுக்கையருகில் நின்று, என்
வயிற்றுப் பகுதி முழுவதையும் தடவிக்கொடுத்தபடி, ,நான் உன்னைக் காப்பாற்றுவேன்’ என்று கூறியதை என்னால் கேட்க முடிந்தது. மறுநாள் அறுவைச்சிகிச்சை நல்ல
முறையில் நடந்தது.
நாங்கள் வேண்டிக்கொண்டபடி, சீரடிக்கு எனது அண்ணிக்குத் தெரிந்தவர் மூலம் சென்று
பாபாவை தரிசித்து எங்கள் வேண்டுதலை நிறைவேற்றினோம்.
முன்பெல்லாம் அதிகமாகக்கோபப்படுவேன். இப்போது சாந்தமாக
இருக்கிறேன். மனதில் நிலைத்த அமைதியிருக்கிறது.. இதெல்லாம் பாபாவின் அருளால் எனக்குக்
கிடைத்த வரங்கள் என்றே நினைக்கிறேன்.
ஜெய் சாய்ராம்.
No comments:
Post a Comment